இது ஒரு கருத்த இளைஞனின் வெளுத்த இதயப்பதிவுகள்...

Monday, June 27, 2005

ஒரு வார்த்த கேட்க ஒரு வருஷம்......

படம் : ஐயா....

ஒரு வார்த்த கேட்க ஒருவருஷம் காத்திருந்தேன்
இந்த பார்வ பார்க்க பகலிரவா பூத்திருந்தேன் (2 முறை)
மணமால ஒன்ன பூ பூவா கோத்திருந்தேன்
அந்த சேதிக்காக நொடி நொடியா வேர்த்திருந்தேன்
சூரியன சூரியன சுருக்குபையில்
நான் அள்ளிவர அள்ளிவர ஆசப்பட்டேன்
சிங்கத்தையும் சிங்கத்தையும் சில நாளா என்
சின்ன சின்ன கம்மலுக்குள் பூட்டிக்கிட்டேன்
தண்ணிக்குள்ள தான் நட்ட தாமரைக்கொடி
தெப்ப குளத்தையே குடிச்சிடுச்சி...

ஒரு வார்த்த சொல்ல ஒரு வருஷம் தயங்கி நின்னேன்
அந்த பார்வ பார்க்க முடியாம நான் ஒதுங்கி நின்னேன்.

ஊருக்குள்ள ஓடும் தெருவில்
பாதத்தடங்கள் 1000 இருக்கும்
நீ நடந்த சுவடுகள் இருந்தால்
எந்தன் கண்கள் கண்டுபிடிக்கும்.....

இதயத்த தட்டி தட்டி பார்த்துபுட்டேன்
அது தெரக்கல என்றதுமே ஒடைச்சிபுட்டேன்..

நீ கிடைக்க வேண்டும் என்று
துண்டு சீட்டு எழுதிப்போட்டேன்
பேச்சியம்மன் கோவில் சாமி
பேப்பர் சாமியானது என்ன?

கண்ணுக்குள்ள ஓடிய ஒன்ன தொரத்த
மனசுக்குள் நீ வந்து ஒளிஞ்ச
மனசுக்குள் ஒளிஞ்சுடும் ஒன்ன வெரட்ட
உசுருக்குள் நீ மெல்ல நொழஞ்ச...

ஓ நீ கொடுத்த கல் கூட
செங்கல் சாமி ஆனதையா...

ஒரு வார்த்த சொல்ல ஒரு வருஷம் தயங்கி நின்னேன்
அந்த பார்வ பார்க்க முடியாம நான் ஒதுங்கி நின்னேன்.

அடுத்த வீட்டு கல்யாணத்தின்
பத்திரிக்கை பார்க்கும்போது
நமது பேரை மணமக்களாக
மாற்றி எழுதி ரசித்துபார்த்தேன்...

நேத்து வரை எனக்குள்ள இரும்பு நெஞ்சு
அது இன்று முதல் ஆனது எலவம்பஞ்சு

கட்டபொம்மன் உருவம் போல
உன்னை வரைந்தே மறைத்தே வைத்தேன்
தேசப்பற்று ஓவியம் என்றே
வீட்டு சுவற்றில் அப்பா மாட்ட

அணைக்கட்ட போலவே இருக்கும் மனசு
நீ தொட்டு ஒடஞ்சது என்ன?
புயலுக்கு பதில் சொல்லும் எந்தன் இதயம்
பூ பட்டு சரிஞ்சது என்ன?

வேப்ப மர்ரம் சுத்தி வந்து
அரச மரமும் பூத்ததையா..

ஒரு வார்த்த கேட்க ஒருவருஷம் காத்திருந்தேன்
ஒரு வார்த்த சொல்ல ஒரு வருஷம் தயங்கி நின்னேன்
இந்த பார்வ பார்க்க பகலிரவா பூத்திருந்தேன்
அந்த பார்வ பார்க்க முடியாம நான் ஒதுங்கி நின்னேன்....

சூரியன சூரியன சுருக்குபையில்
நான் அள்ளிவர அள்ளிவர ஆசப்பட்டேன்
சிங்கத்தையும் சிங்கத்தையும் சில நாளா என்
சின்ன சின்ன கம்மலுக்குள் பூட்டிக்கிட்டேன்
தண்ணிக்குள்ள தான் நட்ட தாமரைக்கொடி
தெப்ப குளத்தையே குடிச்சிடுச்சி...

லலலலால லால லாலலலா லாலலலா.....
type="text/javascript">&cmt=0&postid=111990076490805974&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Saturday, June 25, 2005

தபூ சங்கர் கதைகள் 10-- நன்றி--திரு.மோகன் தாஸ்- கீதம் குழுமம்.

ஊருக்குள் இது ரொம்ப நாள் பழக்கம்!

நல்ல காரியங்களுக்காக வீட்டைவிட்டு யார் கிளம்பினாலும், எதிரில் உன்னை வரச் சொல்லி... உன் முகம் பார்த்துவிட்டுக் கிளம்புகிற கிராமம் இது. நீயும் யார் கூப்பிட்டாலும், முகம் நிறைய புன்னகையோடு மகாலட்சுமி மாதிரி எதிரில் வருவாய்.

உன் பாட்டியும் தாத்தாவும் பஞ்சம் பிழைப்பதற்காக இந்தக் கிராமத்துக்கு வந்தபோது, என் தந்தைதான் உங்களைக் கோயில் நிலத்தில் குடிசை போட்டுக்கொள்ள அனுமதித்தார்.

கொஞ்ச நாட்களிலேயே... நீ கோயிலைச் சுற்றி மண்டிக்கிடந்த புதர்களை வெட்டி எறிந்து நந்தவனமாய் மாற்றினாய். கோயிலுக்கு கூட்டம் வர ஆரம்பித்தது. உனக்கு முகராசிக்காரி என்கிற பட்டமும் கிடைத்தது.

கோயிலுக்கு பூஜைப் பொருட்கள் வாங்குவதற்காக அடிக்கடி எங்கள் வீடு வருவாய். இன்றும் அப்படித்தான்... அதிகாலையிலேயே குளித்து முடித்த ஈரம் காயாமல் வந்திருந்தாய், உன் பாட்டியோடு.

உங்களைக் காத்திருக்கச் சொல்லிவிட்டு என் தந்தை உள்ளே போயிருந்தபோது... கொய்யா மரத்திலிருந்து ஒரு பூ கீழே விழுந்தது. ஓடிப்போய் அந்தப் பூவைக் கையில் எடுத்த நீ அச்சச்சோ... விழுந்துட்டியா... அணில் தள்ளி விட்டுச்சா... என்றாய். பின்னர், அந்தப் பூவை அதன் மரத்தடியில் வைத்து கவலைப் படாதே... நீ காயாகி, பழமாகி யாருக்கோ உணவாவதை விட, நீ பூத்த மரத்துக்கே உரமானால், உனக்கு சொர்க்கமே கிடைக்கும் என்றபடியே, அதனை மண்ணிட்டு மூடினாய்.

உள்ளிருந்து என் தந்தை வந்து கொடுத்த பொருட்களை வாங்கிக்கொண்டு உன்னைப் போகச்சொன்ன பாட்டி... தனியாக என் தந்தையிடம்... நாங்க கண்ணை மூடுறதுக்குள்ள இவளுக்கு ஒரு கல்யாணத்தப் பண்ணிப் பாத்துடணும். அதுக்கு நீங்கதான் தயவு பண்ணணும் என்று கண்கலங்கினார். அட... இதுக்கு போய் அழுதுட்டு? நான் பாத்துக்கறேன் ஆத்தா... நீங்க போங்க! என்று உன் பாட்டியை அனுப்பிய என் தந்தை, கணக்குப்பிள்ளையை அழைத்து அந்தப் பொண் ணுக்கு ஒரு நல்ல பையனாப் பாருங்க... நாமளே எல்லாம் செஞ்சு கல்யாணம் பண்ணி வச்சிருவோம் என்றார்.

நான் என் தந்தைக்கருகில் போய் தயக்கத்துடன் உங்களுக்கு சரினுபட்டா... நானே அந்தப் பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிறேம்ப்பா என்றேன். என் தந்தையோ பெரும் புகைப்படமாய் இருந்த என் தாயைப் பார்த்து... பார்த்தியா உன் பையனை! என்று என்னை இழுத்துத் தன் மார்போடு அணைத்துக்கொண்டார்.

மாலையே உன்னைப் பெண் கேட்க அப்பா கிளம்புகையில், உன்னோடு விளையாட நினைத்த நான், நீ எதிரில் வந்தால்தான் வருவேன் என்று சொல்லி, அவர்களை அனுப்பிவிட்டு உனக்காகக் காத்திருந்தேன்.

சற்று நேரத்தில்... வெட்கம் புடைசூழ நீ வந்தாய், உன் பாட்டியோடு.

உன் எதிரில் வந்து நின்ற நான் உன்னைப் பெண் கேட்க எங்கப்பா உன் வீட்டுக்குப் போயிருக்காங்க... நீ என்னடான்னா ரோட்டுல சுத்திட்டிருக்க! என்றேன் சிரிக்காமல்.

பாருங்க பாட்டி என்று நீ உன் பாட்டிக்குப் பின்னால் ஓடி ஒளிந்தாய்.

உன் பாட்டி சந்தோஷத்தில் கை கூப்பினார். உன் கண்களிலோ நீர்.

நீங்கதான் பாட்டி சந்தோஷப்படறீங்க... ஆனா, உங்க பேத்திக்குப் பிடிக்கல போலிருக்கே... அழுதே! என்றேன்.

அய்யய்யோ... நான் அழல! என்றுவேகவேகமாகக் கண்களைத் துடைத்துக் கொண்டாய்.

இந்த ஊரில் எல்லோருமே அதிர்ஷ்டத்தை எதிரில் வரச் சொல்லிவிட்டு... கடந்து கடந்து போய் விட்டார்கள். எனக்குத்தான் அந்த அதிர்ஷ்டத்தைக் கட்டிக்கொள்கிற அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது!

type="text/javascript">&cmt=0&postid=111973266125891804&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

தபூ சங்கர் கதைகள் 9-- நன்றி--திரு.மோகன் தாஸ்- கீதம் குழுமம்.

உன்னை முதலில் சும்மாதான் பார்த்தேன்!

அப்புறம் சும்மா சும்மா பார்க்க ஆரம்பித்தேன். நான் பார்க்கிறேன் என்பதற்காக நீயும் பார்க்க ஆரம்பித்த பிறகு, உன்னைக் காதலித்தால் என்னவென்று தோன்ற ஆரம்பித்தது.

ஆனால், உன்னைக் காதலிக்கலாமா வேண்டாமா என்பதை என் அப்பாவைக் கேட்டுத்தான் முடிவெடுக்க வேண்டும். ஏன் என்றால் என் அப்பா என் மிகச் சிறந்த நண்பன்.

வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் அப்பா... நான் காதலிக்கலாம்னு இருக்கேன்ப்பா என்றேன்.

அய்யோ பாவம்! என்றார் அப்பா.

ஏம்ப்பா..?

டேய்... நானும் இப்பிடித் தான் வெவரம் தெரியாம, உங்கம்மாவைக் காதலிச்சுக் கல்யாணம் பண்ணினேன். ஆனா, இவ பண்ற இம்சை இருக்கே... தாங்க முடியலை. சரி, காதலிச்சுச் தொலைச்சுட்டமே... வேற என்ன பண்றதுனு வெச்சு வாழ்ந்துட்டிருக்கேன். இதுவே எங்க அம்மா & அப்பா பாத்து நடத்தி வெச்ச கல்யாணம்னு வெச்சுக்க... ‘சரிதான் போடீ!’னு எப்பவோ இவளைப் பிறந்த வீட்டுக்கு அனுப்பியிருப்பேன்... இதுக்குமேல ‘காதலிக்கலாமா... வேண்டாமா?’னு நீயே யோசிச்சு ஒரு நல்ல முடிவா எடுத்துக்க! என்றார் சிரித்தபடியே.

சாப்பாடு போட்டுக் கொண்டிருந்த என் அம்மா, அப்பாவின் தலையில் செல்லமாகக் குட்டிவிட்டு அப்படி என்ன இம்சை பண்றேன் உங்களை?’ என்று சண்டைபோட ஆரம்பித்தார்.

அந்த அழகான சண்டையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும்போதே முடிவு செய்துவிட்டேன்... உன்னைக் காதலித்துக் கல்யாணம் செய்து கொள்வதென்று!

type="text/javascript">&cmt=0&postid=111973247515603312&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

தபூ சங்கர் கதைகள் 8-- நன்றி--திரு.மோகன் தாஸ்- கீதம் குழுமம்.

ஏழு வருடங்கள் கழித்து ஊருக்கு வருகிறேன். இப்போது நீ எப்படி இருப்பாயோ? என் அத்தை மகள் நீ. அப்பா இல்லாதவளாகையால் உன் அம்மாவோடு சின்ன வயதிலிருந்தே எங்கள் வீட்டில்தான் இருக்கிறாய். மாமா மாமா என்று என்மீது உயிரையே வைத்திருப்பாய்.

பத்தொன்பது வயதில் வேலைக்காக நான் வெளிநாடு கிளம்புகையில்... அழுதபடியே சென்னை வரை வந்து என்னை வழியனுப்பியபோது, உனக்கு வயது பதின்மூன்று.

ஊரிலிருந்த காலங்களில்... நான் கடைத்தெருவுக்குப் போயிருந்தால்கூட, வாசலிலேயே காத்திருந்து என்னைக் கண்டதும் ஓடி வந்து கட்டிக்கொள்கிற கன்னுக்குட்டி நீ.

ரெண்டு கழுதை வயசாகுது... இன்னும் என்னடி மாமனக் கொஞ்சுற. யாராவது பாத்தா என்ன நெனப்பாங்க? என்று உன் அம்மா திட்டினால், எத்தனை கழுத வயசானாலும் என் மாமனக் கொஞ்சுவேன். யார் பாத்தா எனக்கென்ன? ஊரு பாத்துக்க ஒரு முத்தம்... உலகம் பாத்துக்க ரெண்டு முத்தம்.... சாமி பாத்துக்க மூணு முத்தம்... என்று என்னை முத்தமிடுவாய். கடைவீதியிலிருந்து நான் உனக்கு வளையல் வாங்கி வந்திருந்தால் உனக்கு வளையல் வேணுமா..? மாமா வேணுமா? என்பேன். எனக்கு மாமாதான் வேணும் என்று என்னைக் கட்டிக் கொள்வாய்.

வெளிநாட்டில் இருக்கும்போது, வீட்டிலிருந்து வரும் கடிதங்களை நீதான் எழுதியிருப்பாய். மாமா... உன் கன்னுக்குட்டி எழுதறேன் என்றுதான் ஆரம்பிப்பாய். ஆனால், ஒரு வருடம் கழித்து வந்த கடிதங்கள் நீ எழுதியவை என்றாலும், அன்புள்ள மகனுக்கு அப்பா எழுதுவது என்று ஆரம்பித்திருந்தன.

அப்புறம் ஒரு நாள் டவுனுக்கு வந்த அப்பா, என்னைத் தொலைபேசியில் அழைத்துப் பேசிய போதுதான் தெரிந்தது... நீ வயதுக்கு வந்துவிட்டாய் என்பது. அதன் பிறகு, இன்றுவரை உன் கடிதத்தில் ஒன்றில்கூட உன்னைப் பற்றி ஒரு வரிகூட இல்லை... உன் கையெழுத்தைத் தவிர. கடைசியாக எல்லாருக்கும் என்னென்ன வேண்டும் என்று எழுதியிருந்த கடிதத்தில்கூட உனக்கென்ன வேண்டும் என்று நீ எழுதவே இல்லை.

விமான நிலையத்தில் உன்னைத் தேடினேன். அப்பா மட்டும்தான் இருந்தார். வீட்டு வாசலில் உன்னை எதிர்பார்த்தேன். நீ இல்லை. வீட்டுக்குள் ஒரு கதவுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு என்னைப் பார்த்தாய். நான் பார்க்காத மாதிரி இருந்தேன். எல்லோரிடமும் நலம் விசாரித்து விட்டு, அவரவர்களுக்கு வாங்கி வந்ததை எல்லாம் கொடுத்து முடித்த போது, என் அம்மாதான் கேட்டார், என்னடா குட்டிக்கு ஒண்ணும் வாங்கிட்டு வரலையா? என்று.

குட்டியா... யார் அது? என்றேன்.

என்னடா இப்படிக் கேக்கற... உன் அத்தை மகடா? ஓ அவளா? மறந்துட்டேனே... லெட்டர்ல எழுதியிருக்கலாம்ல என்று நான் சொல்லி வாய் மூடுவதற்குள்... நீ ஓடிப்போய் கிணற்றில் குதித்து விட்டாய்.

தூக்கி வந்து, அறிவு கெட்ட முண்டம்... நான் மறந்திட்டேன்னு சொன்னா நீ நம்பிடுவியா? பெரிய மனுஷியானா அப்படியே எல்லாத்தை யும் மாத்திப்பீங்களோ? அரை மணிநேரம் நான் கடைத்தெருவுக்குப் போயிட்டுத் திரும்பி வந்தாலே ஓடிவந்து கட்டிப் பிடிச்சிக்கிறவ நீ, இப்ப, இத்தனை வருஷம் கழிச்சி வர்றேன்... ஆனா, கதவுக்குப் பின்னாடி ஒளிஞ்சுக்கிட்டு யாரோ மாதிரி பாக்குற... என்னோட கன்னுக்குட்டியா இருந்தா இப்படி பண்ணுவியா நீ? என்றேன்.

இல்ல மாமா... இல்ல மாமா. தெரியாமப் பண்ணிட்டேன் மாமா! நான் உன் கன்னுக்குட்டிதான் மாமா! என்று அழுதபடி ஓடிவந்து என்னைக் கட்டிக்கொண்டு... ‘ஊரு பாத்துக்க ஒரு முத்தம்... உலகம் பாத்துக்க ரெண்டு முத்தம்... சாமி பாத்துக்க மூணு முத்தம்..!’ என்று முத்தமிட்டபடி அழுதாய்.

திறக்காத ஒரு பெட்டியைக் காட்டி இதோ பார்... உனக்காக என்னவெல்லாம் வாங்கி வந்திருக்கேன் என்றேன்.

அதெல்லாம் எனக்கு ஒண்ணும் வேணாம். எனக்கு நீதான் மாமா வேணும் என்று என்னை இறுக்கிக்கொண்டு அழுதாய்... முற்றிலும் என் கன்னுக்குட்டியாக மாறி!

type="text/javascript">&cmt=0&postid=111973236477927568&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

தபூ சங்கர் கதைகள் 7-- நன்றி--மோகன் தாஸ்- கீதம் குழுமம்.

‘என் அழகை நான் ஆராதிப்பதைவிட, நீ அதிகம் ஆராதிக்கிறாயே... ஏன்? என்றாய்.

உன் அழகால் உனக்கென்ன பயன்? அதன் பயனை எல்லாம் அனுபவிப்பவன் நான்தானே! என்றேன்.

என் அழகால் உனக்கு என்ன பயன்?’

அடுத்த ஜென்மத்தில் நீ ஆணாகப் பிறந்து, ஓர் அழகியைக் காதலி. அப்போது புரியும்!

இந்த ஜென்மத்தில், புரியும்படி கொஞ்சம் சொல்லேன்.

சந்தனத்தால் என்ன பயன் என்பதை சந்தன மரத்துக்கு எப்படிப் புரிய வைப்பது? ஆனால், உன் அழகு செய்யும் மாயங்களைச் சொல்ல முடியும்?

சொல்லு... சொல்லு!

உன் இமைகள் இமைக்கும் போது என்ன நிகழ்கிறது?

என் கண்கள் ஈரமாகிறது. வேறென்ன?

அது உனக்கு! ஆனால், நீ இமைக்கும் ஒவ்வொரு முறையும், நீயும் நானும் மட்டும் வசிக்கும் குட்டி உலகத்தில் இரவு பகல் மாறிக் கொண்டே இருக்கும். இமைகளை நீ மூடினால் இரவு. திறந்தால் பகல். நீ சிரிக்கும் போதோ அந்தக் குட்டி உலகத்தில் அழகான ஒரு குட்டி நிலவே உதிக்கும்...’

அப்படியெனில், என் அழகுக்காகத்தான் நீ என்னைக் காதலிக்கிறாயா. என் அழகெல்லாம் தீர்ந்தபிறகு உன் காதலும் தீர்ந்துவிடுமா?

நீ அப்படி வருகிறாயா? சரி, உன் அழகெல்லாம் எப்போது தீரும்?

எனக்கு வயதாகிற போது! அடி முட்டாள் பெண்ணே, வயதானால் உன் அழகெல்லாம் தீர்ந்துவிடும் என்றா நினைக்கிறாய்? அழகு என்ன உன் வயதிலா இருக்கிறது?

பின்னே?

‘நான் சொல்வதைக் கவனமாகக் கேள். நீ அழகாக இருந்ததால்தான் நான் உன்னைப் பார்க்க ஆரம்பித்தேன் என்பது உண்மைதான். ஆனால், உன்னைப் பார்க்க ஆரம்பித்த பிறகு, நீ பேரழகியாக மாறிவிட்டாய் என்பதுதான் பெரும் உண்மை. ஆகையால் கவலைப்படாதே! நான் உன்னைப் பார்த்துக் கொண்டிருக்கும் வரை உன் அழகு தீராது. இன்னும் சொல்வதென்றால், நீயும் நானும் இறக்கும்வரை உன் அழகு தீரவே தீராது. ஏன் என்றால், அதுவரை நான் உன்னைப் பார்த்துக் கொண்டே இருப்பேன்... காதலோடு.

இதைக் கேட்டு, நீ என் தோளில் சாய்ந்தாய். நம் குட்டி உலகத்தில் ஒரு குட்டிக் குளிர்காலம் ஆரம்பமானது!

type="text/javascript">&cmt=2&postid=111973209066532160&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

தபூ சங்கர் கதைகள் 6-- நன்றி--மோகன் தாஸ்- கீதம் குழுமம்.

நீ குளித்து ஓடி வரும் நீரில் பூத்துக் குலுங்கும் சின்னப் பூந்தோட்டம்தான் ஊரிலேயே அழகான இடம்.

திருநாட்களிலும், திருவிழாத் தருணங்களிலும் மட்டும் குடும்பத்தோடு கோயிலுக்கு வந்துபோகிற அம்மன் நீ. கோயிலில் சற்று நேரம் நீ உட்கார்ந்துவிட்டு எழுந்து போகும் இடத்தை மூன்று முறை சுற்றி வந்து... வெகுநேரம் அங்கேயே கிடக்கிற நாய்க்குட்டிகள் நாங்கள்.

ஊரில் தேர்த் திருவிழா என்றால் எங்களைப் பிடிக்க முடியாது. அன்றுதான் நாள் முழுவதும் உன்னைப் பார்க்கலாம் நாங்கள். தேர் கூடவே நான்கு வீதிகளும் வருவாய் நீ. அப்போதெல்லாம்... ஐம்பது பேர் வடம்பிடித்து இழுத்துப்போகும் தேரிலிருக்கும் தெய்வத்தை விட்டுவிட்டு... ஐந்நூறு பேரின் இதயங்களை இழுத்துப்போகும் உன்னை மட்டுமே தரிசிக்கும் எங்கள் கண்கள்.

ஆனால்... உனக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தபோது உள்ளூர் மாப்பிள்ளை வேண்டாம் என்று சொல்லிவிட்டாயாம்.கேள்விப்பட்டு... அதிர்ச்சியில் ஊரே உறைந்துபோய்விட்டது. அப்புறம் நீ எங்கோ வாக்கப்பட்டும் போய்விட்டாய்.

வாழாவெட்டியாகிவிட்டது ஊர்!

type="text/javascript">&cmt=0&postid=111973189103331494&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

தபூ சங்கர் கதைகள் 5-- நன்றி--மோகன் தாஸ்- கீதம் குழுமம்.

நம் காதலை உங்கள் குடும்பம் ஏற்றுக்கொண்டுவிட்ட ரம்மியமான காலமது! உங்கள் குலதெய்வக் கோயிலுக்குப் போக என்னையும் அழைத்திருந்தார் உன் தந்தை.

உன்னை மாதிரியே உன் குலதெய்வம்கூட அழகாகத்தான் இருக்கிறது! என்று உன் காதில் சொன்னபடி, குலதெய்வத்துக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டுக் கோயிலைச் சுற்றுகையில், உன் தந்தை என்னைப் பார்த்து, உங்கள் குலதெய்வம் எது? என்று கேட்டார்.

நான் உன்னைக் காட்டி, இதோ! என்றேன்.

உன் குடும்பத்தின் கேலிச் சிரிப்பொலிக்கு நடுவே நீ ஐயோ என்று முகத்தை மூடிக்கொண்டு, கோயில் வாசலிலேயே உட்கார்ந்து விட்டாய்.

நான்உன் அருகில்வந்து, நேரமாகிவிட்டது... வா, போகலாம்! என்றேன்.

நான் வரலை! என்று சிணுங்கினாய்.

ஐயையோ... நீ இங்கேயே இருந்துவிட்டால், இங்கிருக்கும் தெய்வம் எங்கே போவது? வேண்டுமென்றால் சொல்... இதைவிட அழகிய கோயிலாக, நான் கட்டித் தருகிறேன்! என்றேன்.

ஐயோ அப்பா... என்னைக் காப்பாத்துங்கப்பா! என்று கத்தியபடியே எழுந்து ஓடிப்போய், உன் தந்தைக்குப் பின்னால் ஒளிந்துகொண்டாய்.

உன் தந்தை போதும் என்று கண்டிப்புடன் சொன்னாலும், தன் பெண் நல்ல பையனைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறாள் என்கிற பெருமை அவர் முகத்தில் தாண்டவமாடியது.

நான் பெருமகிழ்ச்சி கொண்டு, கோயிலுக்குள் இருக்கும் தெய்வத்தைத் திரும்பிப் பார்த்தேன்.

தெய்வமோ, என் சந்நிதானத்தில் என்ன விளையாட்டு இது? என்பதுபோல் பொய்க்கோபம் கொண்டு என்னை முறைத்துப் பார்த்தது

type="text/javascript">&cmt=0&postid=111973181683073136&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

தபூ சங்கர் கதைகள் 4-- நன்றி--மோகன் தாஸ்- கீதம் குழுமம்.

மார்கழி மாதக் கோலத்துக்குச் சூட்டுவதற்காக என் அம்மா உன் வீட்டில் பூசணிப் பூ வாங்கிவரச் சொல்லுவார்.

நான் வாங்க வரும்போது, நீ என் அம்மாவுக்கு இரண்டு பூசணிப் பூக்களும், எனக்கு ஒரு புன்னகைப் பூவும் தருவாய். என்னிடமிருந்து படிப்பதற்காக வாங்கிப் போகும் வார இதழ்களில் இருக்கும் ஆடைக்குறைவான பெண்களுக்கு ஆடை வரைந்து திருப்பிக் கொடுப்பாய்.

பொங்கலன்று... நாங்கள் கட்டிக் கொண்டிருந்த புது வீட்டைப் பார்க்க வருமாறு உன்னை அழைத்தேன். நீயும் வந்தாய். வீட்டின் ஒவ்வொரு அறையாக உனக்குக் காட்டிவிட்டு, என்னுடைய அறை இருக்கும் இடத்துக்கு உன்னை அழைத்து வந்தேன்.

அதில், அப்போதுதான் தரைப் பூச்சு முடிந்திருந்தது. நான் வெளியே நின்றுகொண்டு, இதுதான் என் அறை. உள்ளே போய்ப் பார்! என்றேன்.

உள்ளே காலடி எடுத்து வைத்த நீ, உன் பாதம் ஈரத்தரையில் பதிந்ததைப் பார்த்துவிட்டு, அச்சச்சோ... என்று பதறினாய்.

பதறாதே... உன்னை அழைத்து வந்ததே அதற்குத்தான்! என்றேன்.

நீ வெட்கத்தைக் கொட்டிவிட்டு ஓடிப் போனாய். உன் வெட்கத்தில் என் வீடு சுபிட்சம் அடைந்தது. ஆனால், அடுத்த நாள் நடந்த ஜல்லிக்கட்டில்... இந்தக் காளையை அடக்குபவருக்குத் தான் என் பெண்! என்று உன் தந்தை அறிவித்ததைக் கண்டு, நான் பதறிப் போனேன்.

நீ வளர்த்த அந்தக் காளையை அடக்க, யார் யாரோ பாய்ந்தார்கள். ஆனால், அனைவரை யும் புரட்டி எடுத்து விட்டது உன் காளை!

கடைசியில், நான் இறங்கப் போனேன். நீ கொஞ்சம் பொறு! என்று ஜாடை செய்துவிட்டு, உன் ரிப்பனில் ஒன்றை உருவி, ஒரு சிறுமியிடம் கொடுத்து அனுப்பினாய், ரகசியமாக!

அதை வாங்கிக்கையில் கட்டிக்கொண்டு இறங்கிய என்னிடம் உனது காளை அடங்கிப்போனது! அது உன் வாசத்துக்குக் கட்டுப்பட்டது என்பதை அறியாமல், என் வீரத்தை மெச்சினார்கள் ஊர்மக்களும் உன் அப்பனும்!

type="text/javascript">&cmt=0&postid=111973176993261342&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

தபூ சங்கர் கதைகள் 3-- நன்றி--மோகன் தாஸ்- கீதம் குழுமம்.

எப்போதும்போல நேற்றிரவு உன் கனவுக்காகத் தூங்கியபடி காத்திருந்தேன். ஆனால், நீ வருவதற்கு முன், எப்படியோ என் கனவுக்குள் நுழைந்துவிட்ட கடவுள், என்னைப் பார்த்து, குழந்தாய்... உனக்கு என்ன வேண்டும்? என்று அவருக்கே உரிய தோரணையுடன் கேட்டார்.

எனக்கோ கோபம் தலைக்கேறி, யார் நீ? உன்னை யார் என் கனவுக்குள் அனுமதித்தது? உன்னிடமிருந்து எனக்கு எதுவும் வேண்டாம். எனக்கு என்ன வேண்டும் என்பதை என்னைக் கேட்காமலே எனக்கு வாரி வழங்குகிற தேவதை ஒருத்தி இருக்கிறாள். வெளியே போ! அவள் வருகிற நேரமிது என வெடுக்கென்று சொல்லிவிட்டேன்.

உடனே கடவுளுக்குக் கோபம் வந்து, என்னை எரிக்கப் பார்த்தார். உன் அரவணைப்பில் இருக்கும் என்னை எரித்துவிட முடியுமா அவரால்? தன் வரலாற்றில் ஏற்பட்ட முதல் தோல்வியை மறைக்க முடியாமல், முகம் எல்லாம் வேர்த்துக்கொட்ட, மறைந்துவிட்டார் கடவுள்.

ஆனாலும் இந்தக் கடவுளுக்கு கர்வம் அதிகம். எல்லோருக்கும் எல்லாமும் நாம்தாம் என்கிற நினைப்போடு சுற்றிக்கொண்டிருக்கிறார். அவர் பிறருக்கு வேண்டுமானால் எல்லாமுமாக இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால், எனக்கு எல்லாம் நீதான்!

இந்தக் கடவுள் உன்னிடம் வந்தால் அவரைக் கொஞ்சம் கண்டித்து வை,‘என்னவருக்கு என்ன வேண்டும் என்பதை நான் பார்த்துக்கொள்கிறேன்.இனி அவரைத் தொந்தரவு செய்யாதே! என்று.

type="text/javascript">&cmt=0&postid=111973170547922479&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

தபூ சங்கர் கதைகள் 2-- நன்றி--மோகன் தாஸ்- கீதம் குழுமம்.

நீ அதிகாலை ஆற்றில் குளிக்க இறங்குகையில், ஐயோ... யாராவது ஆற்றைக் காப்பாற்றுங்கள்! ஒரு அழகுப் பேய் குளிக்க இறங்குகிறது... என்று கத்துவேன் நான் கரையிலிருக்கும் மரத்தின் பின்னாலிருந்து!

ஆற்றில் இறங்காமல், அடித்துப் பிடித்து நீ என்னிடம் ஓடிவந்து, கத்தாதே... என் தோழிகளெல்லாம் என்னைக் கேலி செய்கிறார்கள் என்று சிணுங்குவாய்.

ஆனால், உன் தோழிகளின் கேலியை நீ விரும்புகிறாய் என்பதை உன் சிணுங்கலில் இருக்கும் நடிப்பு காட்டிக் கொடுத்துவிடும்!

உடனே நான், கத்தாமல் இருக்க வேண்டும் என்றால், எனக்கொரு முத்தம் கொடு! என்பேன். அதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம்தான்... என்பாய் நீ.

என்னது... கல்யாணத்துக்கு அப்புறமா! அப்ப, நமக்கு இன்னும் கல்யாணமாகலையா? என்பேன்.

இல்லை! என்று அழுத்திச் சொல்வாய் நீ.

அப்படின்னா, கொஞ்ச நாளைக்கு முன்னாடி முருகன் கோயில்ல வெச்சு, நான் ஒரு பொண்ணுக்குத் தாலி கட்டினேனே... அது, நீ இல்லையா? என்பேன்.

ஐயையோ... தாலி கட்டினியா! யாருக்கு? என்று அழுது ஆர்ப்பாட்டம் செய்வாய். ஆனால், அதிலும் நடிப்புதான் இருக்கும்!

ஏனெனில், கொஞ்ச நேரம் கழித்து நான் தாலி கட்டினது வேற யாருக்கும் இல்லடி... உனக்குத்தான்! என் கனவில்... என்று நான் சொல்வேன் என்பது உனக்குத் தெரியும். நம் காதல், நம் வீட்டுக்குத் தெரிந்து, அனைவரும் ஒப்புக்கொண்ட பிறகு, முகம் நிறையக் கவலையோடு என்னிடம் வந்தாய் நீ.

என்ன? என்று கேட்டதற்கு, நீங்க ரொம்பப் பணக்காரங்க... நாங்க ரொம்ப ஏழை! நம்ம கல்யாணத்துக்கு உங்க அம்மா, அப்பா நிறைய சீர் கேட்பாங்களோனு எங்க அம்மா, அப்பா பயப்படுறாங்க... என்றாய், முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டு.

நான் மௌனமாக இருந்தேன்.

கேட்பாங்களா? என்றாய் நீ.

எங்க அம்மா, அப்பா கேட்க மாட்டாங்க... ஆனால், நான் கேட்பேன்... நிறைய! என்றேன்.

நிறையன்னா... எவ்ளோ? என்றாய் விசனத்தோடு. நிறையன்னா... ரொம்ப நிறைய! உன் கனவுகள் எல்லாவற்றையும் கல்யாணச் சீராக எடுத்து வரும்படி கேட்பேன்... அவற்றை நனவாக்கித் தருவதற்காக! என்றேன்.

நீ அழுதாய். ஆனால், அதில் நடிப்பு இல்லை!
type="text/javascript">&cmt=0&postid=111973149955995134&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

தபூ சங்கர் கதைகள் 1-- நன்றி--மோகன் தாஸ்- கீதம் குழுமம்.

நாமிருவரும் சின்னஞ்சிறு வயதில், அம்மா& அப்பா விளையாட்டு விளையாடிய அதே மாந்தோப்பில்தான், நீ உன் அம்மாவின் சேலையைக் கிழித்து முதல் தாவணியும், நான் என் அப்பாவின் வேட்டியை மடித்து முதல் வேட்டியும் கட்டிக்கொண்டு சந்தித்தோம் | பொங்கி வழிந்த கூச்சத்துடன் ஒரு திருவிழா நாளில்.

குனிந்த தலை நிமிராமல் நீ அப்போது சொன்னாய்... இனிமே உன்னை டா போட்டுக் கூப்பிடமாட்டேன்!

ஏன்?

மாட்டேன்னா... மாட்டேன்!

அப்போ இனிமே நானும் உன்னை டீ போட்டுக் கூப்பிடக்கூடாதா?

இல்லேல்ல... நீ கூப்பிடலாம். கட்டிக்கப் போறவளை வேற எப்படிக் கூப்பிடறதாம்? & சொல்லிவிட்டு, சட்டென்று உதட்டைக் கடித்துக்கொண்டாய். உன் வெட்கத்தில், மாந்தோப்பில் காய்த்திருந்த மாங்காய்களெல்லாம் சிவந்து போயின.

இன்னொரு அமாவாசை நாளில் என் அக்கா, தன் குழந்தைக்குச் சோறூட்டுகையில், நிலவைக் காட்டச் சொல்லி அடம்பிடித்தது குழந்தை. மாடியில் நின்றிருந்த உன்னைக் காட்டி, அதோ பார் நிலா! என்று குழந்தைக்கு நான் சோறூட்டியதைப் பார்த்துவிட்ட நீ, அடுத்த நாள் விடிந்தும் விடியாத பொழுதில் ஓடி வந்து என்னை முத்தமிட்டதும் அந்த மாந்தோப்பில்தான்!

பிறிதொரு வருடத்தில் அதே மாந்தோப்பில்தான், என்னை மறந்துவிடுங்கள் என்று அழுதாய். அதோடு முடிந்துபோனது எல்லாம்!

இப்போது உன்னை இந்தா என்று அழைக்க, ஒரு கணவன் இருக்கிறான்.

அம்மா என்று அழைக்க, இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.

ஆனால்...

ஏண்டா கல்யாணமே வேணாங்கறே? என்று கெஞ்சி அழும் என் அம்மாவுக்கு மகனாக நான் இல்லை!

type="text/javascript">&cmt=0&postid=111973134504904944&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Monday, June 20, 2005

ஏரிக்கரை பூங்காற்றே....

ஏரிக்கர பூங்காத்தே
நீ போறவழி தென்கிழக்கோ
அட தென்கிழக்கு வாசமல்லி
என்ன தேடிவர தூது சொல்லு...
பாதமலர் நோகுமுன்ன நடக்கும் பாத வழி பூவிரிச்ச மயில...
பாதமலர் நோகுமுன்ன நடக்கும் பாத வழி பூவிரிச்ச மயில...
ஓடம்போலாடுதே மனசு கூடித்தான் போனதே வயசு...
காலத்தின் கோலத்தால் நெஞ்சம் வாடுது
அந்த பொன்னான நினைவுகள் கண்ணீரில் கரையுது...
ஏரிக்கர பூங்காத்தே..
நீ போறவழி தென்கிழக்கோ
தென்கிழக்கு வாசமல்லி
என்ன தேடிவர தூது சொல்லு...
ஏரிக்கர பூங்காத்தே.....

ஓடிச்செல்லும் வான்மேகம்
நெலவ மூடிக்கொள்ளப் பார்க்குதடி ....அடியே
ஓடிச்செல்லும் வான்மேகம்
நெலவ மூடிக்கொள்ளப் பார்க்குதடி...அடியே
ஜாமத்தில் பாடுறேன் தனியா
ராகத்தில் சேரனும் தொணையா...
நேரங்கள் கூடினால் மாலை சூட்டுவேன்
அந்த ராசாங்கம் வரும் வரை
ரோசாவே காத்திரு...
ஏரிக்கர பூங்காத்தே
நீ போறவழி தென்கிழக்கோ...
ஏரிக்கர பூங்காத்தே....

ஓர் அருமையான பாடல், இளையராஜா 80களில் என்ற ஒரு வட்டுத்தகடு என் தம்பி டாக்டர்.ஸ்ரீதர் கொடுக்க, அந்த தகட்டில் இருந்த பாடல்கள் அனைத்துமே அருமை, அவற்றில் என்னை மிகவும் கவர்ந்த பாடல், தூரல் நின்னுபோச்சு ...மற்ற சில பாடல்கள்...இளைய நிலா பொழிகிறதே....பயணங்கள் முடிவதில்லை...
ஆசய காத்துல தூதுவிட்டு....ஜானி...ராஜ ராஜ சோழன் நான்...ரெட்டைவால் குருவி...மனதுக்கு இதமான ஒரு தகடு...அனைவரும் ரசிக்கலாமே....
ஸ்ரீஷிவ்....
type="text/javascript">&cmt=2&postid=111929045379169916&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Friday, June 17, 2005

கடந்து வந்த காவியம் 10

மீண்டும் அதே அசாம்
அதே பூக்கள், அதே புல் வெளிகள்
இனிய பிரம்மபுத்திரா...இருப்பினும்
இல்லையடி நீ இங்கே....

தொலைபேசித்துறை...அந்த ஒரு
துறை மட்டும் இல்லை எனின்
பல காதல்கள் "சொல்லாமலே"
செல்லாக்காசுகளாகியிருக்கும்.

எத்தனை அழைப்புகள்?
எத்தனை அரட்டல்கள்?
இருப்பினும் அந்த காதோர
சிறு குறுகுறுப்பு கிடைக்கவில்லையே எனக்கு?
எத்தனை முறைகள் கேட்டிருப்பேன்
உன்னிடம்? என்னிடம் வாய்திறந்து
அந்த மூன்று மந்திர வார்த்தைகளை????

கடைசிவரை சொல்லவில்லையடி நீ,
அன்று புரியவில்லையடி எனக்கு?
ஏன் நீ அந்த வரிகளை இத்தனை
உயர்வாக மதித்தாய் என்று....

அலைபாயுதே....என்ன ஒரு
அற்புதமான தத்துவப்படம்?
மனைவியிடம் எப்படிநடக்க வேண்டும்?
நடக்கக்கூடாது? எது செய்யின்
அவள் தானே முன்வந்து அந்த
மந்திர வார்த்தைகளைச் சொல்வாள்?

இருப்பினும் உன் விளக்கத்தினில்
எனக்கு சிறிது உடன்பாடு தானடி
ராட்சசியே..;) நம் திருமணம் முடியும்கால்
அந்த மூன்றாம் முடிச்சு உன்
கழுத்தில் விழும் சமையம் என்
காதுகளில் அந்த மந்திர வார்த்தைகளை
உச்சரிப்பேன் என்று கூறிச்சென்றாயே?

இன்றும் அந்த தினத்துக்காக தினமும்
ஏங்கிக்காத்திருக்கிறேனடி...
என்றேனும் ஒருநாள் அந்த நாளும்
வந்து விடாதா என்ற ஏக்கமுடனும்
தூக்கம் தொலைத்த விழிகளுடனும்....

தொடர்வேன்...
என்றும் உன்,
சிவா....
type="text/javascript">&cmt=2&postid=111904253240293869&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Thursday, June 16, 2005

Alaipayuthey...

Unninaivugal...
urangamal ullirunthu ....
mudiyavillaiyadi....neram ippozhuthu 4.40AM, thookam varala, paper journalku type panni anupitu, alaipayuthey padam parthukitirukken, kalyanathukku appuram unnai ippadi parthuppenaanu yosikaren da...manasu romba valikuthu, eppadi irukka? ennai parkama, pesama...romba valikuthudi....
shiv...:(
type="text/javascript">&cmt=0&postid=111896351961691999&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Wednesday, June 08, 2005

கண்டேன் ஒரு அன்னையை...கோலாலம்பூரில்...

என் இனிய தோழமைக்கு
வணக்கம், வாழிய நலம், நீண்ட நாட்களுக்கு பின் ஒரு மடல் உங்களுக்கு, ஒரு 8 நாட்கள், அயல் தேச சுற்றுப்பயணம் செல்ல ஒரு வாய்ப்பு, சில நல்ல உள்ளங்களையும் சந்திக்க நேர்ந்தது, மனம் மிக்க மகிழ்ந்தேன்..அவர்களுள் சிலர் மனம் நிறைந்தவர்கள்...முதன்மையானவர், மீனா அம்மா, கோலாலம்பூரில்,மலேசியாவில் சந்தித்தேன்...உண்மையிலேயே அவர்கள் மீனம்மா தான், அவ்வளவு கருணை, இரக்கம், பரிவு, பாசம், அனைத்தின் உருவமாய் அந்த அன்னையைக்கண்டேன். மனம் மிக்க மகிழ்ச்சி, என் தாய் தந்தையருடன் போய் இருந்ததால் அவருடன் நீண்ட நேரம் பேச இயலவில்லை, ஆயினும் எனக்காக 2 நாட்கள் காத்திருந்து ஒரு விலை மதிப்பில்லா பரிசுப்பொருள் ஒன்றும் தந்து என்னை வழி அனுப்பி வைத்த அந்த மான்பினை நான் என்ன சொன்னாலும் அது மிகையாகாது....எனக்காக 20 கிலோமீட்டர் கார் எடுத்து வந்து நான் இரவு உணவு உண்ணும் விடுதியில் சந்தித்து சென்றார்கள்...இன்னும் எழுதுகிறேன்....
சிவா..
type="text/javascript">&cmt=0&postid=111822552863695149&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது