இது ஒரு கருத்த இளைஞனின் வெளுத்த இதயப்பதிவுகள்...

Monday, July 24, 2006

காதல் வலை - பகுதி 14

காதல் வலை - பகுதி 14


"ஏன் தனம்? ஏன் மாதுவ வேண்டாம்னு சொல்லற??
எனக்குப்பிடிச்சவங்க கூடதானே நான் குடும்பம் நடத்த முடியும்?"
"இல்ல ஈஸ்வர், வேண்டாம், எனக்கு பிடிக்கல"
"உனக்கு பிடிக்கலைன்னா எனக்கு கவலை இல்ல தனம், அவதான் நான் உடைஞ்சி இருந்தப்ப என் கூட என் தோளா இருந்தவ, அவளுக்கு என் வாழ்க்கைல இடம் இல்லைன்னா வேற யாருக்கும் நான் இடம் கொடுக்கறதா இல்லை தனம்."

மனதில் இருந்ததை தெளிவாக தனத்திடம் எடுத்துக்கூறிவிட்டு வெளியே நடந்தபோது, ஏதோ மனதில் ஒரு தெளிவு, மாது.....எங்க, எப்படி இருக்க? ....செல்லத்தொலைபேசியை எடுத்து அவளின் விடுதியை தொடர்பு கொண்டபோது, ஊருக்குச்சென்றிருப்பதாகச்சொன்னார்கள்.

இரண்டு நாள் கழித்து மீண்டும் தொடர்பு கொள்ள, வந்துவிட்டதாகச்செய்தி...வெளியில் எங்கோ ஏதோ வாங்கிவரச்சென்றிருப்பதாகச்சொன்னார்கள், அன்று மதியமே பேருந்தினைப்பிடித்து சென்னைக்கு கிளம்பினேன், மாலை 6.30, பாரி முனை பேருந்து நிலையம், இறங்கி அவளின் விடுதிக்கு அழைக்க, வந்து அந்த கிளி தத்தை மொழி பேசியது. எப்டி இருக்க ஈஷ்? வீட்ல எல்லாரும் சௌக்கியமா? என்னோட நாத்தனார் எப்படி இருக்காங்க? நல்லா படிக்கறாங்களா ஐ ஏ எஸ்க்கு? ஏதேனும் சந்தேகம் இருந்தா எனக்கு ஒருமுறை தொலைபேசி செய்து பேசச்சொல்லுங்க " , ஹா ஹ ஹா, என்ன கிண்டல்டி உனக்கு? என்றபடியே, மறுநாள் அவளை எங்கு சந்திக்கலாம் என்று வினவினேன்.

"பாரீஸ் கார்னர் க்கு வந்திடு ஈஷ், அங்க இருக்கற என்னோட கம்ப்யூட்டர் இன்ஸ்ட்டிட்யூட்லயே நாம் சந்திக்கலாம்"
"எத்தனை மணிக்கு?"
"காலைல ஒரு 10.30க்கு வாயேன், அப்போதான் எனக்கும் கிளம்பி வர்றதுக்கு சரியா இருக்கும்"

இரவு, அக்கா சமைத்துப்போட்ட சங்கரா மீன் குழம்பினையும் , வருவலையும் ஒரு வெட்டு வெட்டிவிட்டு, சன் தொல்லைக்காட்சியில் ஏதோ ஒரு படம் பார்த்தபடியே உறங்கிப்போனேன்.மறுநாள் காலை 9 மணிக்கு அக்கா வந்து எழுப்பினார்கள்.
"ஏய் தம்பி, எழுந்திருடா, காலைல பாப்பாவ பார்க்கப்போவனும்னு சொல்லிக்கிட்டு இருந்தியேடா, மணி 9 ஆச்சி எழுந்து கிளம்பினாத்தான் சரியா இருக்கும் டா"

"என்னது? 9 ஆச்சா? "
பதறியபடி எழுந்து பல் விளக்கி, சூடாக அக்கா சுட்டுப்போட்ட தோசையை, கடலை, தேங்காய், கொத்துமல்லி, பச்சைமிளகாய், உப்பு, பூண்டு, புளி போட்ட சட்னியில் தொட்டு தொட்டு ஒரு 4 தோசையை உள்ளுக்குத்தள்ளி வெளியே கிளம்பினேன்.

7B பேருந்து கூட்டமாக இருந்தாலும் ஃபுட்போர்ட் ரொம்ப நாளுக்கு அப்புறம் சந்தோசமாக அடித்து , பாரிமுனை வந்திறங்கி அவளை செல்லத்தொலைபேசியில் தொடர்பு கொண்டேன், தவறுதவறு, அவள் என்னைத்தொடர்புகொண்டாள், "எங்கே இருக்க? " " மணி இப்பவே 11 ஆச்சிடா, நீ எப்போ வந்து நாம எப்போ வெளிய போறது? இன்னைக்கு நீ என்ன வெளியகூட்டிக்கிட்டு போனமாதிரிதான்"

செல்லில் பேசியபடியே அவள் பேசிக்கொண்டிருந்த கடை வாயிலை அடைந்தேன், கை காட்டியபடியே வெளியே ஓடிவந்தவளின் கையில் ஒரு சிறிய கைப்பை. அவளின் பயிலகம் சென்று அந்த படிகளில் அமர்ந்தபடி, அவள் கை பிடித்து பேசிக்கொண்டிருந்தேன். சற்று நேரத்தில் அவள் கையில் வைத்திருந்த சிறிய கைப்பையில் கைவிட்டு " ஒரு சின்ன கிஃப்ட்" என்றவாரே வெளியே எடுத்தவளின் கையில், கல்கியில் இருந்து கத்தரிக்கப்பட்ட " சிவகாமியின் சபதம்" தொடர்கதை, வாங்கி பத்திரமாக என் பையில் வைத்துவிட்டு, நான் வாங்கிச்சென்றிருந்த சாம்பல் வெள்ளை கலந்த ஒரு பெங்காலி காட்டன் புடவையை அவள் கையில் வைத்தேன்.

"வெள்ளை புடவை வேண்டாம் டா, அபசகுணமா இருக்கு, வேற கலர்ல அப்புறமா வாங்கிக்கொடு"
"சரி , எங்கன்னா கிளம்பலாம், எங்கே போவலாம்? "
"மணி, 12 ஆச்சி, சாப்பிடப்போகலாமா? "
"சரி, சரி, எப்பவும் சாப்பாட்டிலயே இரு, சரி வா போலாம்"

ஆட்டோ பிடித்து, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இருந்த அபு பேலஸ் நட்சத்திர உணவகத்திற்கு விடச்சொன்னேன். முதன்முறையாக நட்சத்திர விடுதியில் சாப்பிடுகின்றாள் என் தேவதை, எனக்குள் பட்டாம்பூச்சிகள் பறந்தன, போய் அமர்ந்து, வழக்கம் போல இரண்டு தட்டு தயிர் சாதம் ஆர்டர் செய்துவிட்டு, அரை இருளில் அமர்ந்திருந்தோம், நாங்கள் இருவர் மட்டுமே, மீண்டும் ஒருமுறை அந்த மாயாஜாலப்பை திறந்துகொள்ள, இந்த முறை அழகான ஒரு சிறிய கிஃப்ட் பேக், என் கையைப்பிடித்து அழுத்தி வைத்தவள், திறந்துபார்க்கச்சொன்னாள்.

மெதுவாகத்திறந்தவன் அப்படியே மலைத்துப்போனேன், உள்ளிருந்து பீத்தோவானின் 5 ஆம் சிம்பொனி இசையுடன் இரண்டு சிறிய குழந்தைகள் பொம்மைகள், மஞ்சள் ஒன்று பச்சை ஒன்று , சுற்றி சுற்றி வந்து முத்தமிட்டன....அப்படியே மனம் குளிர்ந்து அவள் கைப்பிடித்து முத்தமிட்டேன்...கூச்சத்துடன் கையை விலக்கிக்கொண்டாள் என் தேவதை.....

தொடர்வேன் விரைவில்.....:)என்ற நம்பிக்கையுடன் ;)

ஸ்ரீஷிவ்...:)

PS: மன்னிக்க வேண்டும், ரொம்ப மாதங்களுக்குப்பின் (மார்ச் 24 -2006க்குப்பின்) இன்று சிறிது மூடும், நேரமும் கிட்டியதால் இந்த பகுதியை உங்கள் முன் சமர்ப்பிக்கின்றேன், விரைவில் அடுத்த பகுதியுடன் சந்திக்கின்றேன்...பிரியமுடன், ஸ்ரீஷிவ்..
type="text/javascript">&cmt=3&postid=115377141843656609&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Wednesday, July 19, 2006

வலைப்பூவினுள் நுழையமுடியாதவர்களுக்கு....

இனிய தோழமைக்கு,
வணக்கம், வாழிய நலம், சில தினங்களாக வலைப்பூவினுள் நுழைவதில் தமிழகத்திலும் இன்னும் சில நகரங்களிலும் பிரச்சனைகள் இருப்பதாக அறிந்தேன், என் தோழர் திரு.பபுல் கோகோய் ( அசாம்) அவர்களின் உதவியுடன் இந்த செயலி உங்கள் உதவிக்கு. கீழ் காணும் சுட்டியைத்தட்டி, அதிலிருக்கும் சாளரத்தில் தங்கள் வலைப்பூ முகவரியை இடுங்கள், உடன் உங்கள் வலைப்பூ விரியும், வாழ்த்துக்கள் :)
வாழ்க வளமுடன்...
ஸ்ரீஷிவ்...
சுட்டி :http://tools.superhit.in/
type="text/javascript">&cmt=0&postid=115333303649626690&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Monday, July 10, 2006

விளக்கம் தேவை பிளீஸ்....

இனிய தோழமைக்கு,
வணக்கம் வாழிய நலம்,சில சிறு சிறு சந்தேகங்கள் , தமிழில் வந்து நம் தூக்கத்தினைக்கெடுத்துக்கொண்டிருக்கின்றன, அவற்றிற்கான விளக்கங்களை தமிழறிந்தோர் இயம்பினால் மகிழ்வேன்...சந்தேகங்கள்..
1) வேட்டையாடு விளையாடு படத்தில் வரும் "பார்த்த முதல் நாளில்...."பாடலில் வரும் "பதாகை தாங்கிய உன்முகம் உன் முகம் என்றும் மறையாதே.." என்ற வரிகளில் பதாகை என்றால் என்ன?
2) காக்க காக்க என்ற படத்தில் வரும்"ஒன்றா ரெண்டா ஆசைகள்...." என்ற பாடலின் " கலாபக்காதலா..." என்ற வரியின் கலாபக்காதலன் என்றால் என்ன பொருள்?

விளக்கம் தெரிந்தவர்கள் விளக்கமளிக்க வேண்டுகின்றேன், பிளீஸ்....:)
ஸ்ரீஷிவ்...
type="text/javascript">&cmt=6&postid=115259927737366544&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Sunday, July 09, 2006

திரு.டி.பி.ஆர்.ஜோசப் ஐயா பதிவுகள் பற்றி ஒரு ஆய்வு...

திரும்பிப்பார்க்கிறேன்....:)
இப்படித்தான் ஐயாவின் 168 பதிவுகளையும் நான் சொல்லமுடியும், வாரம் ஒருமுறையாவது மொத்தமாகப்படித்துவிடுவது, மிக அருமையாகக்கொண்டுசெல்கின்றார். என் தந்தையும் ஒரு தலைமை மேலாளர் வங்கியில் என்பதாலோ என்னவோ? ஐயாவின் ஓவ்வொரு பதிவுகளும் அப்படியே என் குடும்பத்தில் ஒருவரைப்பார்ப்பது போன்ற உணர்வு, அவரின் ஒவ்வொரு சூழ்நிலையை எடுத்துச்செல்லும் கைவண்ணம், அடேங்கப்பா...?? அசாத்திய துணிச்சல் ஐயா உங்களுக்கு :), இவ்வளவு திறமையாக எழுதுவது என்பது எல்லோருக்கும் கைவருவது இல்லை.
உண்மை சொன்னால் இனியும் உங்களுக்கு ஒரு வளமான எதிர்காலம் திரைத்திரையிலும் உண்டு, தாங்கள் முயன்றால் தங்களைக்கொத்திச்செல்ல எத்தனையோ இயக்குனர்கள் தங்கள் கதவைத்தட்டுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.குறிப்பாக இந்த தூத்துக்குடி பதிவுகள், அவ்வளவு அற்புதம், ஒவ்வொரு குடும்பத்தினையும் எவ்வளவு அற்புதமாக அளவிட்டு வைத்திருக்கின்றீர்கள்? . சில பதிவுகளைப்படிக்கும் சமயம் என் கண்கள் என்னை அறியாமல் நீரை உகுத்து விடுகின்றன. உதாரணம்: விஜயா அம்மாவின் வாழ்க்கை வரலாறு, பாவம் வாழ்ந்து கெட்ட குடும்பம் எப்படி சீரழிந்து நிற்கும் என்பதையும் நான் என் கண்களால் கண்டிருக்கின்றேன். எல்லாமே என் வீட்டுப்பக்கத்தில் பார்த்தமாதிரி ஒரு எண்ணம், மிக்க நன்றி ஐயா, இன்னும் எழுந்துங்கள், இறைவன் உங்களுக்கு எல்லா நலனையும் வளத்தினையும் ஆயுளையும் அருளுமாறு என் அன்றாடப்பிரார்த்தனையில் பிரார்த்திக்கின்றேன், எல்லாம் சரிதான் ஒரே ஒரு சந்தேகம் மட்டும் இறுதியாக....

அது ஏன் உங்கள் பதிவில் திரு.ராகவன் ஐயா, திரு.சிவஞானம் ஜி மற்றும் துளசி அம்மாவின் பின்னூட்டங்களை மட்டும் தேர்வு செய்து போடுகின்றீர்கள்? எனக்குத்தெரிந்து உங்கள் பதிவுகளுக்கு ஒரு தொகை ரசிகர் வாசகப்பட்டாளம் உள்ளது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி, அப்படி வரும் ரசிகர்களின் பின்னூட்டங்களையும் சில நேரங்களில் பிரசுரியுங்கள் ஐயா, அது அவர்களையும் எழுத உற்சாகமூட்டும் என்பது என் தாழ்மையான கருத்து...:) இதனை பின்னூட்டமாகவே இட்டிருப்பேன் தங்கள் பதிவில், ஆனால் அது பிரசுரமாகி இருக்குமா? என்ற சந்தேகத்தில் ஒரு பதிவாகவே இடுகின்றேன், ஐயா கவனிக்கவும்....:)
என்றென்றும் தங்கள் உண்மையுள்ள,
ஸ்ரீஷிவ்...:)
type="text/javascript">&cmt=10&postid=115243252925184669&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது