சொல்வதெல்லாம் (கொடுமை) உண்மை
அன்பின் தோழமைக்கு,
வணக்கம், வாழிய நலம். சென்றவாரத்தில் ஒரு நிகழ்ச்சியை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கண்டேன், மிக மனவருத்தம் கொண்டேன். கட்டை பஞ்சாயத்து நடத்துவது போல் நடத்திக்கொண்டிருக்கின்றார்கள். அதுவும் நிர்மலா பெரியசாமி பஞ்சாயத்து தலைவர்போல் அமர்ந்துகொண்டிருக்கின்றார். ஒரு ஆண் அந்தப்புறம் அமர்ந்திருக்க, இந்தப்புறம் ஒரு பெண், திடீரென்று மூன்று பெண்கள் வந்து அந்த பெண்ணின் அருகில் அமர, பேசிக்கொண்டிருக்கும்போதே, வாய்வார்த்தை பேச்சாக இருக்கும்போதே, நிர்மலா பெரியசாமி, அந்த பெண்களை "என்ன உட்கார்ந்துகிட்டு இருக்கீங்க? எழுந்து கேளுங்க" என்று தூண்டிவிட, ஒரு பெண் எழுந்துசென்று அமர்ந்திருக்கும் ஆணை படார் என்று கன்னத்தில் அறைகின்றார்.
எனக்கு ஒரு சந்தேகம், காவல் நிலையம் ஒன்று எதற்கு இருக்கின்றது? அதில் காவலர்கள் என்ற அங்கீகாரம் பெற்றவர்கள் எதற்கு இருக்கின்றனர்?, சட்டம் படித்த வழக்குறைஞர்கள் எதற்கு இருக்கின்றனர்? சட்டமன்றங்கள் எதற்கு இருக்கின்றன? நீதிபதிகள் எதற்கு இருக்கின்றார்கள்? இவர்கள் யார் ப்ரச்சனையை தீர்த்துவைக்கின்றேன் என்று சொல்லி கட்டைபஞ்சாயத்து செய்ய?
அரசாங்கம் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை பார்த்துக்கொண்டு சும்மாவா இருக்கின்றது? அல்லது, இந்த சென்சார்போர்டு என்று எல்லாம் சொல்கின்றார்களே? அவர்கள் சும்மாவா இருக்கின்றார்கள்? இதற்கு என்னதான் முடிவு???? type="text/javascript">&cmt=0&postid=7968090763012678027&blogurl=http://srishiv.blogspot.com/">
0 Comments:
Post a Comment
<< Home