இது ஒரு கருத்த இளைஞனின் வெளுத்த இதயப்பதிவுகள்...

Sunday, July 09, 2006

திரு.டி.பி.ஆர்.ஜோசப் ஐயா பதிவுகள் பற்றி ஒரு ஆய்வு...

திரும்பிப்பார்க்கிறேன்....:)
இப்படித்தான் ஐயாவின் 168 பதிவுகளையும் நான் சொல்லமுடியும், வாரம் ஒருமுறையாவது மொத்தமாகப்படித்துவிடுவது, மிக அருமையாகக்கொண்டுசெல்கின்றார். என் தந்தையும் ஒரு தலைமை மேலாளர் வங்கியில் என்பதாலோ என்னவோ? ஐயாவின் ஓவ்வொரு பதிவுகளும் அப்படியே என் குடும்பத்தில் ஒருவரைப்பார்ப்பது போன்ற உணர்வு, அவரின் ஒவ்வொரு சூழ்நிலையை எடுத்துச்செல்லும் கைவண்ணம், அடேங்கப்பா...?? அசாத்திய துணிச்சல் ஐயா உங்களுக்கு :), இவ்வளவு திறமையாக எழுதுவது என்பது எல்லோருக்கும் கைவருவது இல்லை.
உண்மை சொன்னால் இனியும் உங்களுக்கு ஒரு வளமான எதிர்காலம் திரைத்திரையிலும் உண்டு, தாங்கள் முயன்றால் தங்களைக்கொத்திச்செல்ல எத்தனையோ இயக்குனர்கள் தங்கள் கதவைத்தட்டுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.குறிப்பாக இந்த தூத்துக்குடி பதிவுகள், அவ்வளவு அற்புதம், ஒவ்வொரு குடும்பத்தினையும் எவ்வளவு அற்புதமாக அளவிட்டு வைத்திருக்கின்றீர்கள்? . சில பதிவுகளைப்படிக்கும் சமயம் என் கண்கள் என்னை அறியாமல் நீரை உகுத்து விடுகின்றன. உதாரணம்: விஜயா அம்மாவின் வாழ்க்கை வரலாறு, பாவம் வாழ்ந்து கெட்ட குடும்பம் எப்படி சீரழிந்து நிற்கும் என்பதையும் நான் என் கண்களால் கண்டிருக்கின்றேன். எல்லாமே என் வீட்டுப்பக்கத்தில் பார்த்தமாதிரி ஒரு எண்ணம், மிக்க நன்றி ஐயா, இன்னும் எழுந்துங்கள், இறைவன் உங்களுக்கு எல்லா நலனையும் வளத்தினையும் ஆயுளையும் அருளுமாறு என் அன்றாடப்பிரார்த்தனையில் பிரார்த்திக்கின்றேன், எல்லாம் சரிதான் ஒரே ஒரு சந்தேகம் மட்டும் இறுதியாக....

அது ஏன் உங்கள் பதிவில் திரு.ராகவன் ஐயா, திரு.சிவஞானம் ஜி மற்றும் துளசி அம்மாவின் பின்னூட்டங்களை மட்டும் தேர்வு செய்து போடுகின்றீர்கள்? எனக்குத்தெரிந்து உங்கள் பதிவுகளுக்கு ஒரு தொகை ரசிகர் வாசகப்பட்டாளம் உள்ளது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி, அப்படி வரும் ரசிகர்களின் பின்னூட்டங்களையும் சில நேரங்களில் பிரசுரியுங்கள் ஐயா, அது அவர்களையும் எழுத உற்சாகமூட்டும் என்பது என் தாழ்மையான கருத்து...:) இதனை பின்னூட்டமாகவே இட்டிருப்பேன் தங்கள் பதிவில், ஆனால் அது பிரசுரமாகி இருக்குமா? என்ற சந்தேகத்தில் ஒரு பதிவாகவே இடுகின்றேன், ஐயா கவனிக்கவும்....:)
என்றென்றும் தங்கள் உண்மையுள்ள,
ஸ்ரீஷிவ்...:)
type="text/javascript">&cmt=10&postid=115243252925184669&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

10 Comments:

Blogger துளசி கோபால் said...

சிவா,

அருமையான ஆய்வு.

ஆனா இதுலே முதல் பகுதி மட்டும்தான் சரின்னு 'நான்' நினைக்கிறேன்.

பதிவாளர்கள் ஒவ்வொருவருக்கும் பின்னூட்டம் என்பது எவ்வளோ முக்கியமுன்னு
பதிவாளரான உங்களுக்கே தெரியும். இல்லையா?
அப்படியிருக்க, ஒரு சிலருடையதை மட்டுமே தேர்ந்தெடுத்துப் போடுவதாகச் சொல்லி
இருக்கீங்களே, இதுக்கு எதாவது ஆதாரம் இருக்கா?

என் மனசுக்கென்னமோ அப்படி இருக்காதுன்னுதான் தோணுது.

இதுக்குண்டான பதிலை ஜோசஃப்சாரே வந்து சொல்வார்.( அப்படின்னு நினைக்கிறேன்)

Sunday, July 09, 2006 1:52:00 AM

 
Blogger krishjapan said...

ஷிவ், அவர் எல்லாருடைய பின்னூட்டங்களையும்தான் வெளியிடுகிறார் என நினைக்கிறேன்/உறுதியாக நம்புகிறேன். என்னுடைய எல்லா பின்னூட்டங்களையும் வெளியிட்டிருக்கிறார். உங்களுடையது எதாவது பிரசிரிக்காமல் விட்டிருக்கிறாரா? மற்றபடி, நீங்கள் குறிப்பிடுபவர்கள் பின்னூட்டங்கள் மட்டும் தவறாமல் இடம் பெறும் காரணம், அவர்கள் மட்டும்தான் தவறாமல் பின்னூட்டமிடுகிறார்கள் என்பதால் மட்டுமே என்றும் உறுதியாக நம்புகிறேன். நிறைய பேர் படிக்கிறோம், ஒரு சிலரே பின்னூட்டமிடுகிறோம்....

அவரது பதிவுகளைப் பற்றிய உங்களது கருத்தை அப்படியே வழிமொழிகிறேன்.

Sunday, July 09, 2006 2:27:00 AM

 
Blogger G.Ragavan said...

முதலில் உங்களை வன்மையாகப் பாராட்டி விட்டு பிறகு மென்மையாகக் கண்டிக்கிறேன்.

பாராட்டு ஜோசப் சாரின் பதிவுகளைப் படித்து அதன் சிறப்புக்களைச் சொல்லியதற்கு.

கண்டிப்பு என்னை ஐயா என்றதிற்கு.

பிறகு, அவர் பின்னூட்டங்களைத் தேர்ந்தெடுத்தெல்லாம் போடுகின்றவர் அல்லர். வருகின்ற பின்னூட்டங்களை மட்டும் பிரசுரிக்கிறார் என்பதே உண்மையாகும்.

Sunday, July 09, 2006 2:29:00 AM

 
Blogger Dr.Srishiv said...

சொந்த அனுபவத்தினாலும் சொன்னேன் அம்மா :) ஐயாவிடம் அதுதான் தவறாக எண்ணவேண்டாம் என்றும் கூறி இருக்கின்றேனே? நானே அவரின் ஒரு தீவிர வாசகன் அல்லோ? :)
ஸ்ரீஷிவ்...:)

Sunday, July 09, 2006 2:29:00 AM

 
Blogger Dr.Srishiv said...

நன்றி திரு.கிருஷ்ணா மற்றும் திரு.ராகவன் :), ராகவன் மன்னிக்க, நான் உங்களை டோண்டு ராகவன் ஐயா என்று நினைத்துவிட்டேன், :) சரி சரி அந்த ஐயாவை வாப்பஸ் வாங்கிக்கோங்க :) கிருஷ்ணா, தங்கள் வருகைக்கு நன்றி, நான் சிலபேருடைய என்றுதான் குறிப்பிட்டு அதில் சிலரின் பெயர்களை போட்டுள்ளேன், ஆனால் நான் நினைத்தது பலர் அவருக்குப்பின்னூட்டம் இட்டிருப்பார்கள் என்றே....அதனால் தான் அப்படி எழுதினேன்...
ஸ்ரீஷிவ்...

Sunday, July 09, 2006 3:27:00 AM

 
Blogger கோவி.கண்ணன் said...

ஜோசப் ஐயாவைப் பற்றி சிறப்பு பதிவு எழுதியிருக்கிறீர்கள் மிகவும் மகிழ்சியாக இருக்கிறது. நான் பிரமிப்பது அவருடைய நகைச்சுவை திரண். உங்களோடு சேர்ந்து இந்த பதிவுக்காக நானும் மகிழ்கிறேன்.

Sunday, July 09, 2006 7:10:00 AM

 
Blogger Dr.Srishiv said...

நன்றி திரு.கோவி.கண்ணன் அவர்களே...உங்கள் பதிலும் இங்கு பதிக்கப்படுகின்றது :)
ஸ்ரீஷிவ்..

Sunday, July 09, 2006 8:34:00 AM

 
Blogger டிபிஆர்.ஜோசப் said...

அன்புள்ள srishiv,

உண்மையில் சொல்லப்போனால் துளசி உங்களோட இந்த பதிவின் இணைப்பை அனுப்பியதும்தான் எனக்கே தெரிந்தது.

உங்களுடைய கருத்துகளுக்கு மிக்க நன்றி. ஆனால் நீங்கள் கூறியவற்றிற்கெல்லாம் எனக்கு அருகதை இருக்கிறதா என்பது தெரியவில்லை..

பின்னூட்டம் குறித்து..

என்னைப் பற்றி அறிந்தவர்களுக்கு தெரியும் நான் சரியான காரணங்கள் இல்லாமல் பின்னூட்டங்களை தவிர்ப்பதில்லை. அப்படியே தவிர்த்தாலும் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஏன் என்னால் வெளியிட இயலவில்லை என்பதையும் தனி மயிலில் தெரிவித்துவிடுவேன்..

அத்துடன் வாரம் ஒருமுறை என்னுடைய பதிவுகளின் மட்டுறுத்தல் பக்கத்திற்குச் சென்று நான் தவறுதலாக எந்த பின்னூட்டத்தையாவது விட்டிருந்தால் பப்ளிஷ் செய்துவிடுவது வழக்கம்.

இதை நீங்கள் எழுதியதை மறுத்துக் கூறவேண்டும் என்பதற்காக எழுதவில்லை. உண்மையாகவே இதுவரை எந்தவித காரணமுமில்லாமல் எந்த பின்னூட்டத்தையும் நான் தவிர்க்கவில்லை.. ஒரேயொருவருடைய பின்னூட்டத்தை தவிர.. அது யார் என்பது நம் எல்லோருக்குமே தெரியும் என்று நினைக்கிறேன்.

என்னுடைய பதிவுகளுக்கு வரும் பின்னூட்டங்களின் எண்ணிக்கையே மிகவும் குறைவு என்பதுதான் உண்மை.

நீங்கள் குறிப்பிட்ட நால்வரும்தான் என்னுடைய பதிவுகளில் தொடர்ந்து பின்னூட்டம் இடுகின்றனர். ஆகவே தான் உங்களுக்கு நான் அவர்களுடைய பின்னூட்டங்களை மட்டும் இடுவதாக தெரிகிறது.

அன்புடன்
ஜோசஃப்

Thursday, July 13, 2006 2:18:00 AM

 
Blogger Dr.Srishiv said...

அன்புள்ள ஐயா
மிக்க நன்றி தங்கள் பின்னூட்டத்திற்கு, மேலும் துளசி அம்மாவிற்கும் மிக்க நன்றி, இதனை உங்களின் பார்வைக்கு கொண்டுவந்தமைக்கு, நான் எழுதிய சில பின்னூட்டங்கள் ஒருவேளை பிரசுரிக்கக்கூடிய அளவில் இல்லையா என்று தெரியவில்லை, அவை தங்களின் பதிவுகளிலும் பிரசுரமாகவில்லை, எனவே தான் அந்த கடைசி வரிகள் ஐயா, எப்படியாயினும், தவறாக எண்ணாமல் மன்னித்து வருகை தந்தமைக்கு மிக்க நன்றி ஐயா..
ஸ்ரீஷிவ்..

Thursday, July 13, 2006 3:11:00 AM

 
Blogger டிபிஆர்.ஜோசப் said...

நான் எழுதிய சில பின்னூட்டங்கள் ஒருவேளை பிரசுரிக்கக்கூடிய அளவில் இல்லையா என்று தெரியவில்லை, அவை தங்களின் பதிவுகளிலும் பிரசுரமாகவில்லை//

உங்களுடைய பின்னூட்டங்களை நான் பிரசுரிக்காமல் இருந்ததேயில்லை ஸ்ரீஷிவ்.. எப்போது அனுப்பியிருந்தீர்கள் என்று சொன்னால் நல்லது.

இதற்கு உங்களுக்கு தனி மயிலிலும் பதிலளித்திருக்கிறேன்..

எப்படியாயினும், தவறாக எண்ணாமல் மன்னித்து வருகை தந்தமைக்கு மிக்க நன்றி ஐயா..//

என்ன ஸ்ரீஷிவ்.. பெரிய வார்த்தையெல்லாம்.. நாம் எல்லோருமே நண்பர்கள்..

யார் யாரை மன்னிப்பது? நீங்கள் பின்னூட்டம் அனுப்பி அதை நான் தவறுதலாக பிரசுரிக்காமல் இருந்திருந்தால் நானல்லவா உங்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்..

Thursday, July 13, 2006 5:13:00 AM

 

Post a Comment

<< Home

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது