தமிழக அரசு கவனிக்குமா? ( குழலி கவனிக்க)
அரசு பொறியியற் கல்லூரிகளில் ஆசிரியப்பணி -- பட்டியலினத்தவருக்கு ஒரு கனவா?
அன்பின் சினேகத்திற்கு,
வணக்கம், வாழிய நலம், தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்ட ஆசிரியப் பணியிடங்கள் நிரப்புதல் அரசு பொறியியற் கல்லூரிகளில் என்பது பட்டியலினத்தவரைப் பொறுத்த வரை ஒரு கண்துடைப்பு என்பது பெரும்பாலோருக்கு தெரியாத ஒரு விசயம், எப்படி என்று கேட்கின்றீர்களா? முன்னேறிய வகுப்பினருக்கும், தாழ்த்தப்பட்டோருக்கும் ஒரே அளவில் சமத்துவத்தினை நிலை நாட்டி சரித்திரத்தில் இடம் பெற நினைக்கின்றது தமிழக அரசு. அரசு பொறியியற் கல்லூரிகள் ஆசிரியர் தேர்வாணையம் சமீபத்தில் வெளியிட்ட ஆசிரியப் பணியிடங்களுக்கான காலியிடங்களை நிரப்ப வேண்டிய அறிவிப்பில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினத்தவருக்கு ஒரு பெரிய அநீதி இழைத்துள்ளது, மத்திய அரசிலும் மற்றைய மாநில அரசுகளிலும் அரசுப்பணிகளுக்கான குறைந்த பட்ச தகுதியாக தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடிகளுக்கு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் என்று இருக்கின்றது, ஆனால் தமிழக அரசு தேர்வாணையத்தில் மட்டுமே , முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற ஒரு பெரிய தடை கல்லை போட்டு பட்டியலினத்தவரின் பிழைப்பில் மண்ணை அள்ளிப்போட்டு மேல்தட்டு வர்கத்தினருக்கு வசதி செய்து கொடுத்துள்ளது இந்த அரசு.
இதனால் தகுதியோடு இருக்கும் எத்தனையோ தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இன மாணவர்கள் தங்கள் வாய்ப்பினை இழக்கின்றனர், தமிழ் போதனா வழிக்கல்வியில் பயின்று விட்டு அந்த மிரட்சி தீர்வதற்குள் இறுதியாண்டு கல்லூரிப் படிப்பையும் முடிக்கும் ஒரு தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இன மாணவன், முதல் நிலையில் தேர்ச்சியுறுவான் என்று எந்த நிச்சயமும் இல்லை, ஆனால் அதனால் மட்டுமே அவன் அறிவற்றவன் அவன் இந்த தேர்விற்கு விண்ணப்பிக்கவே தகுதியற்றவன் என்று கூறுவது எந்த விதத்தில் நியாயம்? , மத்திய அரசிலும் மற்ற மானில அரசுகளிலும் அளித்திருக்கும் சலுகையினைப் போல் தேர்வெழுத அந்த மாணவனை அனுமதிக்கலாமே? அதில் அவன் திறமையை காண்பித்து ஒரு தலை சிறந்த ஆசிரியனாக வர வாய்ப்புகள் உண்டு அல்லவா? அந்த வாய்ப்பினை தட்டிப் பறிக்கின்றதா தமிழக அரசு?
இதனால் பாதிக்கப்படுவது முற்றிலும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களே, முதல் வகுப்பில் தேர்ச்சியுற்றவர் அனைவரும் அறிவாளிகள், இரண்டாம் வகுப்பில் தேர்ச்சியுற்றவர் எல்லாம் முட்டாள்கள் என்பது போலல்லவா உள்ளது இந்த நியாயம்? அவர்களுக்கும் ஒரு வாய்ப்பினை இந்த அரசு அளித்துப் பார்த்தால் தானே தெரியும்? அதிலும் எத்தனை அறிவாளிகள் உள்ளனர் என்று? சமூக நீதி, சமூக நீதி என்று சத்தம் போட்டுக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகளே? இதை யாரேனும் கவனிப்பீரா? பொறியியல் கல்வியில் முதல் வகுப்பில் தேர்ச்சியுற்றவர் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என்ற தடையை நீக்க்கி எப்போதும் எல்லாத்துறைகளிலும் இருக்கும் பட்டியலினத்தவருக்கான குறைந்த பட்ச கல்வித்தகுதியான தேர்ச்சி மட்டுமே பெற்றிருந்தாலே அவர் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்தவர் என்று ஒரு வாய்ப்பினை அனைத்து தாழ்த்தப்பட்ட பழங்குடியினத்திற்கும் வழங்கி பெருமை தேடிக் கொள்ளுமா இந்த மானில அரசு? அவர்களை நேரடியாக பதவி தரச்சொல்லி கேட்கவில்லை, விண்ணப்பித்து அவர்களின் தகுதியை நிலை நாட்ட ஒரு வாய்ப்பினை மட்டுமே கேட்கின்றனர் அவர்கள், அரசு இந்த விசயத்தில் எந்த அளவிற்கு செயல்படுகின்றது என்று கவனிப்போம், இணையத்தில் எழுதும் இந்த எழுத்து அரசாங்கத்தினை சென்றடையுமா? பொறுத்திருந்து பார்ப்போம்...
சமூக அக்கறையுடன்,
- ஒரு சேவகன்
இந்த கட்டுரை வந்த சில நாட்களில் ஐஐஎஸ்சி பெங்களூரில் ஆராய்ச்சி உதவியாளராக இருக்கும் ஒருவர் இந்த சட்டத்தினால் பாதிக்கப்பட்டதாகக்கூறி மடலிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது, அவர் அண்ணா பல்கலைக்கழகத்தில் தன் பொறியியல் கல்வியைப்பயின்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நன்றி: கீற்று மின்னிதழ். type="text/javascript">&cmt=7&postid=115140668055771946&blogurl=http://srishiv.blogspot.com/">
7 Comments:
இப்போது தான் பார்த்தேன், நிறைய நடக்குதுங்க இது மாதிரி, ஆசிரியர் பணியிடங்களில் ஆரம்பித்து... இட ஒதுக்கீடு முழுமையாக சென்று சேரவில்லை, அதில் உள்ள ஓட்டைகளும் பயன்படுத்தப்பட்டு இடஒதுக்கீட்டினால் முழுபலன் அடையப்படாமல் இருக்கின்றது.
Tuesday, June 27, 2006 4:53:00 AM
உண்மைதான் குழலி,
இருக்கின்ற இட ஒதுக்கீட்டையே ஒழுங்காக நிறைவேற்றாதவர்களுக்கு இன்னும் ஒரு சமூகத்தினரையும் சேர்த்து இட ஒதுக்கீட்டுக்கு கேட்டு போராடுவது எந்த நியாயம் இருக்கின்றது என்று தெரியவில்லை? , கேட்பார் இல்லையா? நேற்று ரயில்வே நிர்வாகத்தில் அப்ரண்டிஸ் முடித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்குவதிலும் வயது வரம்பில் அநீதி, அப்போ பட்டியலில் இருப்பவர்கள் அப்படியே இருக்க வேண்டியதுதான்??? அனுபவித்துக்கொண்டிருப்பவர்கள் அனுபவித்துக்கொண்டே இருக்கவேண்டியதுதான் போலிருக்கின்றதே ஐயா???? வேதனை...
Tuesday, June 27, 2006 5:40:00 AM
ஸ்ரீஷிவ்,
தங்களை வண்மையாக கண்ணடிக்கிறேன், டி.பி.அர் சார் போல் தாங்களும் பின்னூட்டங்களை வெளியிடாமைக்கு.
எவ்வளவு உண்மையான செய்தி சொல்லி உள்ளீர்கள் ஆனால் வந்த பின்னூட்ட பல்லக்குகளை மட்டும் வெளியிடாதது ஏனோ.
Sunday, July 09, 2006 4:09:00 AM
எனக்கு வந்த ஒரு பின்னூட்டம் அதனை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டது நன்மனம், ஆதாரத்துடனும் என்னிடம் அந்த பின்னூட்டத்தின் மடலும் உள்ளது...இது ஒரு ஆலோசனையாகத்தான் டிபிஆர் ஐயாவிற்கு சொன்னேன், அவர் அதனை ஏற்கனவே பின்பற்றுவாராக இருந்தால் ...இந்த பதிவினை அவர் பெரிதாக நினைக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கின்றேன்....:)
ஸ்ரீஷிவ்...:)
Sunday, July 09, 2006 8:28:00 AM
மேலும் என் பேராசிரியர் ஒருவர் இன்று எனக்குக்கூறிய தகவல், பட்டியலினத்தவருக்கு ஐஐடி களில் ஆசிரியப்பணியிடத்தில் ஒதுக்கீடு இல்லையாம்? உண்மையா? இதுகுறித்து இன்றிரவு ஒரு பதிவு போடலாம் என்று இருக்கின்றேன்...படித்துவிட்டு தங்களின் பின்னூட்டத்தினை இடுங்கள், அவசியம் பிரசுரிக்கின்றேன்...:)
ஸ்ரீஷிவ்...
Sunday, July 09, 2006 8:31:00 AM
ஸ்ரீஷிவ்,
சும்மா ஒரு தமாசுக்கு தான் சொன்னேன். பாருங்க இந்த பதிவுக்கு ஒருத்தரும் பதில் சொல்லல ஆனா மத்ததுக்கு எப்படி பல்லக்கு தூக்குறாங்க. :-)
Monday, July 10, 2006 5:15:00 AM
சொல்லவேண்டியவற்றிற்கு சொல்லமாட்டார்கள் தோழரே :), இது அவர்களுக்குத்தேவையானதாக இருந்தால் மட்டுமே பதிலிடுவர் அல்லவா? தேவையானவர்களும் இதற்கு பதிலிடாமலிருப்பதுதானே வேதனை? :) கடைவிரிப்போம், கொள்வாரில்லை எனினும்...:)
ஸ்ரீ..
Monday, July 10, 2006 5:24:00 AM
Post a Comment
<< Home