கானலும் கோணலும்
கானலும் கோணலும்
குளிர் நீராய் நினைத்து
இறங்கினேன் ஒரு குளத்தில்
வெயிலில் பார்த்த எனக்கு
அது ஒரு குளிர்நீர் தடாகமாகவே
தென்பட்டது அன்று,
இறங்கிய பின்னரே தெரிந்தது
அது குளிர் நீரும் அல்ல
குட்டையும் அல்ல,
கானல் என் கண்களுக்கு
கோணலாய் தெரிந்ததே?
கண்களை ஏமாற்றும் ஒரு
கானல் நீரூற்று என்று,
காலம் கடந்தபின் கண்களில்
நமஸ்காரம் தேடினால்?
காலத்தை மதித்தேன்,
பல காயங்களையும் மிதித்தேன்,
கண்மணி உனையும்
கருத்தினில் உறைத்தேன்,
காலமும் கடந்தது
கால்களும் சோர்ந்தன,
கூற்றுவன் வருமுன் எங்கேனும்
ஊற்றுக்கண் தென்படுமா எனத்தேடினேன்,
என்னேர ஓய்விலும்
முன்னேற முயன்றேன்,
பகலை இரவாக்கி அயராமல்
இரவையும் பகலாக்கி உயர்ந்தேன்,
இன்று என் கண்களில்
ஒரு வற்றாத ஜீவநதிதென்பட
ஓடிச்சென்று அதன் மடியில்
அமர்ந்து அள்ளி வாரி
அந்த நீரை முகத்திலிறைத்து
மூன்றுமுறை நிலம் தாழ்ந்தெழுந்தேன்,
கோணல்கள் இன்று
கானல்களாய் மாற
வெற்றிபெற்றவனாய் உங்கள்முன்...
மீண்டும் நிலம் தாழ்ந்து
மண் மகளை மனதார முத்தமிட்டு
பாசத்துடன் கூறும் முதல் வணக்கம்,
என் தாய் தமிழோடு இணைந்த
தாய் தமிழ் வணக்கம்.
பிரியங்களுடன்,
ஸ்ரீஷிவ்...:) type="text/javascript">&cmt=0&postid=114653973716509528&blogurl=http://srishiv.blogspot.com/">
0 Comments:
Post a Comment
<< Home