எனக்குப்பிடித்த நான்கு விசயங்கள்.
எனக்குப்பிடித்த நான்கு விசயங்கள்
எனக்குப்பிடித்த 4 நபர்கள்
1) என் தாய் திருமதி.வேதா முருகையன்
2) என் தந்தை திரு.முருகையன் சுப்புலிங்கம்
3) என் குரு திரு.பாலகுமாரன்
4) என் முதல் காதலி.........
இருந்த 4 இடங்கள்
1)துக்காப்பேட்டை (செங்கம், திருவண்ணாமலை மாவட்டம்)
2)மேல்மருவத்தூர் (பொறியியல் படித்தது 90 முதல் 94 வரை)
3)சேலம் (எம்.ஈ. படித்தது 95 முதல் 97 வரை)
4)குவஹாத்தி (அஸ்ஸாம், என் முனைவர் பட்டத்திற்காக 2001 முதல்
இன்றுவரை தவமிருக்குமிடம்:) )
பிடித்த 4 இடங்கள்
1)என் வீட்டு சமையல் அறை ( என் பாட்டியும் அம்மாவும் சமைக்கும்
சமயம் சுடச்சுட எடுத்து சாப்பிடுமிடம் ;) சுந்தர் அண்ணா அடிக்க வராதீங்க
:D)
2)என் ஊரின் ஆற்றங்கரை ஆஞ்சனேயர் கோவில் திட்டு ( உட்கார்ந்து
மணிக்கணக்கில் ஓய்வெடுத்தபடியே நாங்கள் (தோழர்கள்) எதிர்காலம் பற்றி
திட்டம் தீட்டிய இடம்)
3)பாண்டிச்சேரி அருகே உள்ள நோனாகுப்பம் படகுத்துறை (மிக
அமைதியான இடம், ஒரு காலத்தில் சென்றிருந்தது)
4)குவஹாத்தியிலிருக்கும் பிரம்மபுத்திரா ஆற்றங்கரை மாலைவேளையில்
அமர்ந்திருப்பது.
போக விரும்பும் 4 இடங்கள்
1)இளங்காடு (தஞ்சை மாவட்டத்திலிருக்கும் ஒரு அழகிய பசுமையான
கிராமம்)
2)என் தாத்தாவின் தாத்தா பிறந்த இடமான சின்ன காஞ்சிபுரம் (எங்க
இருக்குன்னு தெரியல)
3)மசாசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (அடுத்த ஆண்டு
வரவிருக்குமிடம், அங்கிருந்து சுவிஸ் வரை ஒரு நடை போய்வரவேண்டும்
)
4)உலகத்தின் உயர்ந்த எவரெஸ்ட் சிகரம் (அதிக மழைபொழியுமிடமான
சிரபுஞ்சியைப்பார்த்துவிட்டேன்)
பிடித்த போக விரும்பும் 4 விடுமுறை இடம்
1)என் தேவதைக்குப்பிடித்த எந்த இடமும் :)
2)இத்தாலி (ஆல்ப்ஸ் மலைத்தொடர்களின் மேலே அப்படியே ஒரு
பறவைபோல பறக்கவேண்டும் )
3)டார்ஜிலிங்
4)அந்தமான் நிகோபார் தீவுகள் ( மூன்றுவருடங்களுக்கு முன்பு அங்கு
சென்றபோதே தீர்மானம் செய்தது, அங்குள்ள ரோஸ் ஐலண்டில்தான்
தேன்னிலவிற்கு செல்லவேண்டுமென்று :) )
பிடித்த 4 உணவுவகைகள்
1) பொங்கல் :) என்றும் பிடித்தது :)
2)என் அம்மா கையால் சுடும் பூப்போன்ற இட்லி (எத்தனை
வேண்டுமானாலும் சாப்பிட்டுக்கொண்டே இருக்கலாம் :) )
3)அம்மன் கோவில் கூழ், வெங்காயத்துடன்.
4)என் அம்மா செய்யும் நேற்று சாதத்தின் புளியோதரை (அற்புதமாக
இருக்கும்:) )
பிடித்த 4 உணவகங்கள் (புதிது)
1)சென்னை பாரிமுனையிலுள்ள சரவணபவன் (16இட்லிகள் அருமையாக
இருக்கும்)
2)சென்னை கந்தன்சாவடியிலுள்ள சரவணாபவன்(இது சரவணபவன் அல்ல,
நான் 1998ல் மென்பொருள் படித்தபோது உண்டு வாழ்ந்த உணவகம்)
3)குவஹாத்தி ஜே பி'ஸ் உணவகம் (இரண்டு இட்லி வெறும் 45
ரூபாய்தான் ;) )
4) தில்லியில் மாள்வியா நகரில் உள்ள தெலுங்கு மெஸ் (அருமையான
உணவு)
பிடித்த 4 விலங்குகள்
1) நாய்
2)பூனை
3)சிங்கம்
4)காண்டாமிருகம் (அசாம்ல அதிகம் பா ;) )
பிடித்த 4 உயிரியல் பூங்காக்கள்
1)குவஹாத்தி உயிரியல் பூங்கா
2)சென்னை செத்த காலேஜ் ;)
3)வேடந்தாங்கல் ( பி ஈ படிக்கறப்போ வாரா வாரம் போய் வர்றது)
4)காசிரங்கா (காண்டாமிருக சரணாலயம் - குவஹாத்தி)
பிடித்த 4 பறவைகள்
1)மயில்
2)குயில்
3)கோழி
4)புறா
பிடித்த 4 படங்கள்
1)இதயம்
2)காதலுக்கு மரியாதை
3)சலங்கை ஒலி
4)மன்னாதி மன்னன் (புரட்சித்தலைவர் நடித்தது)
பிடித்த 4 நடிகர்கள்
1)புரட்சித்தலைவர் எம் ஜி ஆர்
2)சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
3)காதல் மன்னன் ஜெமினி (அ)காதல் இளவரசன் கமல்
4)ஜாக்கிசான் (அ)ஆர்னால்டு சுவார்சனேகர்
பிடித்த 4 நடிகைகள்
1)ஜூலியா ராபர்ட்ஸ்
2)கேத்தரினா ஜீட்டா ஜோன்ஸ் (டெர்மினல் மற்றும் மாஸ்க் ஆப்தி சோரோ
சூப்பரா நடிச்சிருப்பாங்க) (அ) கேட் வின்ஸ்லெட்
3)சாவித்ரி(பாசமலர்) (அ) பத்மினி (மன்னாதி மன்னன் - கண்கள் இரண்டும்
இன்று உம்மைக்கண்டு பேசுமோ???? காலத்தால் அழியாத காவியம்)
4)சிம்ரன் (அ) குஷ்பு (அ) காதல் சந்தியா ;)
சந்தோஷமான 4 நிகழ்வுகள்
1)முதல் முதலாக என் குரலை ராஜ் எப் எம்மில் கேட்டது :)
2)என் முதல் மாத சம்பளத்தில் என் தங்கைக்கு 1800ரூபாயில் சுடிதார்
வாங்கிக்கொடுத்தது. மற்றும் என் பாட்டி இறக்கும் முன் அவர்களுக்கு
சேலை வாங்கி கொடுத்தது.
3)முதன்முதல் தைரியமாக என் காதலை என் காதலியிடம் சொன்னது
4)என் தங்கை வங்கி மேலாளர் ஆன செய்தி :)
பிடித்த 4 விசயங்கள்
1)அரட்டை அடித்தல்
2)கவிதை /கட்டுரை எழுதுதல்
3)ஊரார் பிரச்சனையை எடுத்து செய்தல்
4)பாடுதல்
என்னிடம் இருக்கும் எனக்குப்பிடிக்காத 4 விசயங்கள்
1)முன்கோபம்
2)சிகரெட்
3)சோம்பல்
4)முன் திட்டமிடாமை (preplanning)
சோகமான 4 விசயங்கள்
1) என் பாட்டி மறைவிற்கு செல்லமுடியாமல் அவர் முகத்தினைக்கூட
இறுதியாகப்பார்க்க முடியாதது :( ( என்னை எடுத்து வளர்த்தவர்கள்
அவர்தான்)
2)கையில் பணமில்லாத ஒரு சமயத்தில் என் நெருங்கியவர்களே என்னை
வருந்த வைத்தது
3)என் மண நாளாக ஒரு நாளைக்குறித்து அந்தநாளில் என் திருமணம்
நடைபெறாதது.
4)நான் இழந்த என் முதல் காதல்
பிடித்த 4 நண்பர்கள்
1)ராதா (ஆட்டோகிராப் திவ்யா போல இவர்)
2)செந்தில்,யேசையா, வில்சன் ( இவர்களைப்பிரிக்கவிரும்பவில்லை, என்
பள்ளிகாலத்திலிருந்து இன்று வரை தோழர்கள்)
3) என் தங்கை ( காஞ்சனா, அவருக்கு தெரியாத விசயங்கள் ஏதுமில்லை
என் வாழ்வில்)
4)என் இணைய நண்பர்கள் ( என் சுவாசங்கள்)
என் இணைய நண்பர்கள் 4 பேர்(நெஞ்சிற்கு நெருக்கமானவர்கள்)
1)சம்பத் என்னும் அன்புச்செல்வன்(அமெரிக்கா)
2)சங்கீதா (லண்டன்)
3)வில்லி ஜாய்ஸ் ஃபியாட்டி (அமெரிக்கா)
4)சிமீனா (ximena) (ச்சிலி) type="text/javascript">&cmt=5&postid=114250286459674587&blogurl=http://srishiv.blogspot.com/">
5 Comments:
உங்களுக்கும் பிடித்த நான்கு விசயங்களை எனக்கு எழுதலாமே? :)
ஸ்ரீஷிவ்..
Friday, March 17, 2006 2:49:00 AM
// என் தாத்தாவின் தாத்தா பிறந்த இடமான சின்ன காஞ்சிபுரம் (எங்க
இருக்குன்னு தெரியல) //
அடுத்த முறை நம் இருவரின் விடுமுறையும் ஒன்றாக வந்தால், நாங்கள் தங்களை எங்கள் ஊருக்கு (காஞ்சிபுரம்) அழைத்துச் செல்கிறோம்
Friday, March 17, 2006 10:45:00 AM
நன்றிக்ள் பாலா
எங்க இருக்கீங்கன்னு சொன்னா நானும் சேர்ந்துக்குவேன் அடுத்த பயணம்...:)
ஸ்ரீஷிவ்
Friday, March 17, 2006 7:41:00 PM
பிடித்த பறவை கோழியா..குறும்புதானே சிவா இது..
பிடித்த காலேஜ் உயிர் காலேஜ் அப்புறம் செத்த காலேஜ்..படா குறும்பு பார்டியா இருப்பீங்க போலகீதே...
Saturday, March 18, 2006 5:43:00 PM
ஹா ஹா ஹா
அதுதான் பறவைக்காய்ச்சல் வந்து அழிந்துகொண்டிருக்கும் இனம் சம்பத், அதனால்தான் கோழி எனக்கு ரொம்பப்பிடிக்கும், ஆமாம்பா, செத்தகாலேஜி, உயிர்காலேஜி எல்லாம் நாமதானே வாய்க்க கொடுக்கனும்? அத்தான் போட்டேன் ;)
ஸ்ரீஷிவ்...:)
Sunday, March 19, 2006 8:40:00 AM
Post a Comment
<< Home