காதல் வலை - பகுதி 9
"யார் அது மாது ? என் கிட்ட சொல்லலாமா? "
"எதுக்கு ஈஸ்வர் அதெல்லாம் இப்ப? "
"அது முடிஞ்சு போன ஒன்னு"
"இல்ல மாது, என்னோட காதல் ஆரம்பிச்சதில இருந்து இன்னைக்கு இருக்கற நெலமை வரைக்கும் உனக்குத்தெரியும், அது மாதிரி
உன்னோட கதையும் தெரிஞ்சுக்கலாம்னு ஒரு ஆவல்லதான் கேட்கறேன், சொல்லலாம்னா சொல்லு, இல்ல சொல்லப்பிடிக்கலைன்னா
வேண்டாம்"
"அப்படி எல்லாம் ஒன்னுமில்ல ஈஸ்வர், அப்படி சொல்லறதுக்கு அது ஒன்னும் பெரிய லைலா மஜ்னுகதையும் இல்ல"
"பரவாயில்ல மாது, சொல்லேன், எனக்கும் கொஞ்சம் மாற்றமா இருக்கும்"
"சரி சொல்லறேன், ஆனா அப்புறம் நீ என்கிட்ட ஏன் இப்படி பண்ண? அவர் ஏன் இப்படி பண்ணார்னுல்லாம் குறுக்கு கேள்விகள்
கேட்கக்கூடாது, அப்படின்னா சொல்லறேன்"
"சரி மாது நான் எதுவும் கேட்கல, போதுமா? சொல்லேன் ப்ளீஸ்"
"சொல்லறேன்,அவர் பேர் சூர்யா, அவரும் உன்னைப்போல் ஒரு ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றவர்தான்"
"வாவ், அப்படியா? உன்னோட கிளாஸ்மேட்டா? யூஜி, பீஜி ல? "
"ஏய், நான் படிச்சது எல்லாம் மகளிர் கல்லூரிலப்பா, அப்புறம் எப்படி கிளாஸ்மேட்?"
"எனக்குத்தெரியாது இல்ல? அதுதான் கேட்டேன், அப்புறம் எப்படித்தெரியும் அவரை?,இப்போ என்ன பண்றார் அவர்? "
"வேண்டாம் ஈஸ், அதெல்லாம் இப்ப வேண்டாமே? "
"அப்போ ஏன் போனமுறை உன்னைப்பார்த்தப்ப சொல்லல?"
"இல்ல, நீயே சோகத்தில இருந்த, இதை வேற எதுக்கு சொல்லி உன்னோட சோகத்தை அதிகமாக்கனும்னுதான்........."
மனம் சிறிதே கனிந்தது, தன் சோகம் கூட என்னைத்தாக்கக்கூடாது என எவ்வளவு கனிவாக என்னுடன் இருந்திருக்கின்றாள்?
ஹ்ம்ம்ம்...மீண்டும் பலமுறை கேட்டு அவளிடம் அறிந்துகொண்ட தகவல்கள் ஒன்றும் அவ்வளவு சுவையானவையாக இல்லை, அவர் இப்பொழுது, பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப்பணியாற்றுகின்றாராம், அவர்களும் எங்களைப்போல் மின்னஞ்சல் மூலம் நட்புகொண்டவர்கள் தானாம்.
"அப்புறம் ஏன் பிரிஞ்சீங்க? "
"ஒத்து வரல,ரெண்டுபேரும் நேர்ல பார்த்து பேசிப்பிரிஞ்சிட்டோம் ஈஸ்"
மனம் சிறிதே வலித்தது.
அதன் பின்பு அதிகம் அவளைப்பற்றி பேசினோம். அதிகம் அவள் வாயைத்திறக்கவில்லை என்றாலும் எப்படியோ வார்த்தையை பிடுங்கி தெரிந்துக்கொண்டேன். பின்பு நிறைய பேசினோம். ஏன் அவளுக்கு அந்த காதலில் விருப்பமில்லை என்று. ஒருமுறை கேட்டேன் அவளை,
"என்ன உனக்கு பிரச்சனை? ஏன் கல்யாணம் பண்ணிக்க மாட்டேங்கிற? "
"பிடிக்கல ஈஸ்வர், எனக்கு பிடிக்கல, வேண்டாம்னு சொல்லறதுக்கு பல காரணம் சொல்லலாம்"
"ஏண்டா பிடிக்கல?"
"பிடிக்கல ஈஸ்வர், அதுதான்"
"சரி , கல்யாணமாச்சும் செய்துக்கலாம் தானே?"
"அதுதான் பிடிக்கல ஈஸ்வர்"
"ஏண்டா எதுனா பிரச்சனையா? ****சீரியல்ல வர்ற மாதிரி?? ;) "
"ஐயோ, எப்படிடா தெரியும்?"
"ஹேய், நெஜம்மாவா சொல்லற?"
"ஆமாம்டா" என்றவளின் கண்களின் நீர் எனக்கு இங்கே தொலைபேசியில் தெரிந்தது....:(
தொடர்வேன்... type="text/javascript">&cmt=2&postid=113526641938747816&blogurl=http://srishiv.blogspot.com/">
2 Comments:
ஆரம்பமே நல்லா இருக்கு. தொடருங்கள்... தொடருங்கள்...
தொடர்ச்சியைக் காண ஆவல்...
Thursday, December 22, 2005 12:03:00 PM
அன்பின் சத்யா
வணக்கம்,நன்றிகள் தங்கள் பின்னூட்டத்திற்கு, ஆனால் இது என் காதல் வலை கதையின் ஒன்பதாம் பகுதி, மீதிப்பகுதிகளையும் படித்து பின்னூட்டமிட்டால் மகிழ்வேன்...
ஸ்ரீஷிவ்...
தங்கள் தளத்தினை பார்வையிட்டேன், கவிதைகள் அருமை, புகைப்படங்களும் தான்....:)
Thursday, December 22, 2005 1:01:00 PM
Post a Comment
<< Home