காதல் வலை - பகுதி 6
தனம் என்னிடம் அவள் கேட்ட முதல் வார்த்தை...."என்னை மறந்துடுங்க ஈஷ்வர், இன்னுமா என்னை நெனச்சுகிட்டு இருக்கீங்க? இது ஒத்து வராதுங்க...."
"எங்க வீட்டுல ஒரு முறை எங்க தம்பி ஒரு முஸ்லிம் பொண்ணை சைட் அடிச்சுட்டான் அப்படினு இன்னைக்கு வரைக்கும் அவன் கிட்ட அவங்க பேசரது இல்ல, மேலும் அவன் அப்படி பன்னப்பொ வீட்டோட எல்லோரும் மருந்து குடிச்சுட்டு செத்துப்போகலாம்மா அப்படினு எங்க அப்பா மருந்து வாங்கி வந்துட்டார்,
அதனால எங்க அப்பா அம்மாவுக்கு எதிரா நான் எதுவும் செய்ய விரும்பல. ஜான்சன் அப்புறம் முருகன் கூட என்கிட்ட பேசினாங்க நீங்க அங்க இருந்தப்ப....ஆனா என் பதில் இதுதான் என்னால எங்க வீட்டை விட்டு எல்லாம் வர முடியது"
" அப்பொ நீ என்னை லவ்வே பன்னலயா தனம்? "
" இந்த கல்யாணம் நடக்காது, என்னால வரமுடியாது, நான் லவ் பண்ணலைன்னு எல்லாம் சொல்லலயெ?
எங்க சித்தி கூட இதை ரொம்ப எதிர்க்கறாங்க, எங்க வீட்டுல யாருக்கும் இது பிடிக்காது,அப்படி ஒரு கல்யாணம் எனக்கு வேண்டாம்...இதோ 28 வருஷம் எங்க அப்பா அம்மா பேச்சைக்கேட்டு இருந்திட்டேன், இனிமெலும் அப்படியே இருந்துட்டு போறேன்"
"ஏன் அப்படியெ இருக்கனும்?"
"ஏனக்கு அதுதான் பிடிச்சு இருக்கு, என்னை விட்டுடுங்க"
மீண்டும் தலைநகர் திரும்பினேன், பழையவாழ்க்கையாகிப்போயிருந்தது தலைநகர் வாழ்க்கை. பழகித்தான் போய் இருந்தது. இந்தி, ஆங்கிலம், சில நேரங்களில் தமிழ். ஆய்வுப்பணியும் செவ்வனே சென்றவண்ணமிருந்தது.வாழ்வில் ஒரே லட்சியம் முனைவர் பட்டத்தினை அடைவது.தோழன் ஒருவன் என் இளங்கலைக்கல்வி சமயத்தில் கொடுத்த ஆட்டோகிராப் நினைவில் நின்றது.
"வேலை ஒன்று தேடிக்கொண்டு
சேலை ஒன்று தேடும்போது
ஓலை ஒன்று அனுப்பு நண்பா!!!" என்ன ஆத்மார்த்தமான வரிகள்?
அன்று மறுநாள் எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு, எங்கள் பாட்டி ஊரிலிருந்து, என்னுடய
பெரியம்மா ரொம்ப நாளாக புற்றுநோயால் அவதியுற்றவாறு இருந்தவர்கள் இறந்து விட்டார்கள் என்று :( உண்மையிலேயே மனம் குமுறி அழுதேன், புறக்கணிக்கப்பட்ட ஆனாலும் மனதளவில் வெற்றிபெற்ற என் காதலுக்கும் சேர்த்து.....பெரியம்மாவின் கடைசி காரியங்களுக்கு ஊருக்கு வந்தேன், எல்லாம் முடிந்தது, கடைசியா பால் ஊற்றி வீடு வந்து சேர்ந்தோம்.
எதிர்பாரா வண்ணம், அவளிடமிருந்து ஒரு அழைப்பு, அன்று மாலை என்னைச்சந்திக்க வேண்டும் என்று. பத்தாம் நாள் காரியங்கள் அன்றுதான் முடியும், அன்று இரவு எனக்கு ரயில் வண்டி தலைநகருக்கு. எனக்கு ஒன்றும் புரியவில்லை, மாலையில் தான் வேலை அதிகம் இருந்தது, ஆயினும் எப்படியோ சரிக்கட்டி விட்டு , 5 மணிக்கு கோவிலுக்கு வரச்சொன்னவளை, 5.45 மணிக்குத்தான் சந்திக்க முடிந்தது...என் தோழர்களுடன், மெல்லிய இருள் கவிழும் ஒரு மாலை நேரம், அரையிருளிள் ஆள் பாதி மட்டுமே தெரியும், முகம் தெரியா வெளிச்சம், என் ஹீரோ ஹோண்டா பைக்கின் முன் விளக்கு வெளிச்சத்தில் தேவதை ஒன்று துணையாக ஒரு குட்டி தூதுவளுடன் கோவிலில் இருந்து வெளியே வந்துகொண்டிருந்தது. அதன் முன் வண்டியை நிறுத்தினேன்...
தொடரும்.. type="text/javascript">&cmt=4&postid=113410877643084284&blogurl=http://srishiv.blogspot.com/">
4 Comments:
நன்றிகள் பல்லவி,
இப்போதுகூட ஆட்டோகிராப் படத்தில் வரும் "நினைவுகள் நெஞ்சில் புதைந்ததினால்..." என்ற பாடல் கேட்டுக்கொண்டிருக்கின்றேன், அதில் வரும் அற்புதமான சில வரிகளுக்காக, "காத்திருந்து காத்திருந்து பழகியவன், நீ என்னைக்கடக்கின்ற ஒரு நொடிக்காக காத்திருந்து காத்திருந்து பழகியவன்..." எத்தனை ஆண்டுகள் காத்திருப்பு அந்த காத்திருப்பு? 12 முழு வருடங்கள்? ஒரே ஒரு பெண்ணின் நினைவில்...சில நேரங்களில் இந்த ஈஸ்வரை நினைத்தால் சிரிப்பாகவும் இருக்கின்றது, சந்தோசமாக இருக்கின்றது, அடுத்த பகுதியை உடனே இட ஆசைதான், நேரப்பற்றாக்குறை, சற்றே பொருத்துக்கொள்ளுங்கள், இன்றிரவு தட்டச்சி இடுகின்றேன்...:)
அன்புடன்,
ஸ்ரீஷிவ்...:)
Thursday, December 08, 2005 11:49:00 PM
அடுத்த பதிவு எப்போங்க?
- Dev
http://sethukal.blogspot.com
Friday, December 09, 2005 1:02:00 AM
அடுத்த பதிவுதானே? இன்று இரவு போட்டிடலாம் தோழர் :) தங்களின் செதுக்கல்கள் பார்த்தேன் அருமை..:) நன்றிகள் தோழர், என் பக்கத்திற்கு வந்தமைக்கு...:)
பிரியமுடன்,
ஸ்ரீஷிவ்..
Friday, December 09, 2005 1:49:00 AM
பல்லவி, அடுத்த பகுதி உங்கள் பார்வைக்கு இப்பொழுது.....படித்துப்பார்த்து தங்கள் கருத்தினை அளித்தால் மகிழ்வேன்....:)
ஸ்ரீஷிவ்....:)
Friday, December 09, 2005 2:35:00 PM
Post a Comment
<< Home