இது ஒரு கருத்த இளைஞனின் வெளுத்த இதயப்பதிவுகள்...

Wednesday, December 07, 2005

உலக அதிசயமா? இல்லை நரி மாடுகளைப்பிரித்த கதையா?

இந்த இணைய தள வாக்கெடுப்பு என்று ஒன்று சொல்கின்றார்கள், உலக அதிசயங்களை மாற்றம் செய்யவேண்டுமாம் ( சிலர் ஐஸ்வர்யா ராயை கூட எட்டாவது அதிசயமாக ரெகமண்ட் செய்கிறார்கள் அதுவேறு ;) ) ஆனால், இந்த இந்தியர்கள் ஏன் இப்படி பிரிந்திருந்து அடித்துக்கொண்டு இருக்கும் தாஜ்மகாலைக்கூட விட்டுவிடுவார்கள் என்றே தோன்றுகின்றது எனக்கு. எதேச்சையாக இன்று தினமலரின் கடைசிசெய்திகளை எப்பொழுதும் போல் பார்த்தவன் மனம் கசந்தேன், 22ஆம் இடத்தில் இருக்கின்றதாம் மதுரை கோவில். இந்த மாதம் 24ஆம் தேதிக்குள் 20க்குள் வந்துவிட்டால் அடுத்த ஆண்டு முழுமையும் நடக்கும் வாக்கெடுப்பில் கலந்துகொண்டு உலகின் புது 7 அதிசயங்களுள் ஒன்றாக இடம்பிடிப்பார்களாம், என்ன ஒரு மடமை? இதுதான் பரங்கியரின் பிரித்தாளும் கொள்கை என்பதை படித்தவர்களும் இன்னும் புரிந்துகொள்ளாமல் இருப்பதுதான் வேதனை. அவர்களின் நோக்கம், தாஜ்மகாலை உலக அதிசயத்திலிருந்து நீக்குவது, அதற்காக இந்தியாவில் இருக்கும் குட்டிக்குட்டி நினைவிடங்களையும், ஆலயங்களையும் பட்டியலில் சேர்த்து வாக்குகளைப்பிரிக்கின்றனர். அதற்கு தமிழர்களும் பலியானதே வேதனைக்குறிய விஷயம். நம் அனைவரின் வாக்குகளையும் தாஜ்மகாலுக்கே மீண்டும் இட்டிருந்தால் நிச்சயம் அது உலக அதிசயத்தில் வந்திருக்குமே? இன்று அதுவே ஒரு கேள்விக்குறியாகிப்போனதே வேதனை. எங்கள் ஊரான திருவண்ணாமலைக்கோவில் கூட பட்டியலில் இருக்க, ஐஐடி சென்னையிலிருந்து ஒரு மாணவன் எங்கள் மாவட்டக்கோவிலை உலக அதிசயமாக்குவோம் என மடல் அனுப்பி இருந்தான்.
அவனைத்திட்டிவிட்டு தாஜ்மகாலுக்கே என் வாக்கினை அளித்தேன், ஏன் இப்படி நாட்டிற்குள்ளேயே பாகுபாடு? அவர்களும் நம் சகோதர சகோதரியர் தானே? ஏற்கனவே இருக்கும் அந்த பெருமையை உலகறியுமே? மதுரைக்கோவில் பழமை வாய்ந்ததல்ல என்பதல்ல என் வாதம், ஆனால் தாஜ்மகால் உலகறிந்ததாயிற்றே? அதற்கு ஓட்டுகள் விழுமா அல்லது புதிதாக நுழையும் மதுரைக்கா? சிறிதேனும் சிந்திக்க வேண்டாமா? எந்த ஒரு செயலைச்செய்யும்முன்னும் ஒரு நிமிடம் சிந்தியுங்களேன்...நம் சிந்தனைத்திறன் இன்னும் அந்த அளவிற்கு சீர்குலையவில்லை என்பதே என் அபிப்ராயம்...என்ன சொல்கின்றீர்கள்?
பிரியமுடன்,
ஸ்ரீஷிவ்...:)
type="text/javascript">&cmt=20&postid=113402291704399365&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

20 Comments:

Blogger பூனைக்குட்டி said...

தமிழனைத்திட்டி, தமிழ்நாட்டு கோவிலுக்கு ஒட்டுபோடாத சிவாவை வன்மையாக கண்டிக்கிறேன். அவர் தமிழ்நாடே திரும்பவேண்டாமென்றும், ஒரிசாவிலோ, ஆக்ராவிலோ இல்லை அமேரிக்காவிலோ செட்டில் ஆகவும் கேட்டுக்கொள்கிறேன்.

துடைப்பக்கட்டையும், செருப்புகளும் (சில தமிழ்ர்களையும் கூட) ஒரிசாவிற்கு ஏற்றுமதி செய்ய நினைத்திருக்கும்.

மோகன் தாஸ்

Wednesday, December 07, 2005 11:53:00 PM

 
Blogger Dr.Srishiv said...

வணக்கம் பல்லவி,
நன்றிகள் தங்கள் வாக்கிற்கு, அது காதலின் சின்னமா? அல்லது கடவுளின் சின்னமா? என்பதே இங்கு கேள்வியல்ல, எத்தனை பேருக்கு தாஜ்மகால் தெரியும்? எத்தனை பேருக்கு மதுரை கோவில் தெரியும்? நம் தமிழர் மட்டுமல்லாது அனைத்து இந்தியரும், மேலும் அயல்நாட்டவரும் அறிந்த ஒரு அதிசயம் தாஜ்மகால், ஆகையால் அவர்களின் வாக்குகளும் வரும், இந்தியாவில் இருக்கும் ஒரு நினைவுச்சின்னத்தினை அதிசயத்தினை தக்கவைத்துக்கொண்டு, மேலும் வேண்டுமாயின் கோவில்களுக்கு இடலாமே? தமிழர்களின் மொத்த ஜனத்தொகை உலகளவில்8 கோடி இருக்குமா? சிந்திப்பீர் வாக்களிப்பீர்..
அன்புடன்
ஸ்ரீஷிவ்...:)

Thursday, December 08, 2005 1:27:00 AM

 
Blogger Dr.Srishiv said...

வணக்கம் தல(மேகன் தாஸ்;) )
என்ன ரொம்பநாளா ஆளையே காணோம்? நீங்க ஒரிசாவிற்கு அனுப்பி அங்க என்ன செய்யப்போறீங்கப்பா? நான் அஸ்ஸாம்ல இல்ல இருக்கேன்? :) செரி செரி பார்த்து செய்யுங்க ;) ஏதோ அமெரிக்காவிற்கே இந்த பிரச்சனைகள் ஓயும்வரை போய் தங்கி இருந்திட்டு வாறேன்...
அன்புடன்
ஸ்ரீஷிவ்...:)

Thursday, December 08, 2005 1:29:00 AM

 
Blogger Dr.Srishiv said...

அன்பின் ராஜ்
யார் கொடுத்தார்களோ? இல்லை அவர்களாகவே எடுத்துக்கொண்டார்களோ? அது விசயமில்லை இப்போது, இருக்கும் அதிசயத்தினைக்காப்பாற்றிக்கொள்வோம் ஐயா, அப்புறம் புது அதிசயம் பார்ப்போம்...இருக்கறத விட்டுட்டு பறக்கறத புடிக்க நெனைக்கறது அவ்வளவு அறிவாளித்தனமா படல...:)
அன்புடன்
ஸ்ரீஷிவ்..

Thursday, December 08, 2005 1:31:00 AM

 
Blogger பூனைக்குட்டி said...

அப்படியெல்லாம் நேரா சொல்லிற முடியுமா, பக்கத்து மாநிலத்து பேரைச்சொல்லித்தான் மிரட்டணும்.

PS(மீசைல மண்ணு ஒட்டலைல :-))

Thursday, December 08, 2005 1:43:00 AM

 
Blogger கொழுவி said...

//அவர்களின் நோக்கம், தாஜ்மகாலை உலக அதிசயத்திலிருந்து நீக்குவது//

அப்போ ஏற்கெனவே உலக அதிசயப் பட்டியலில் தாஜ்மகால் இருக்கிறது என்கிறீர்களா?
நான் என்ன சொல்கிறேனென்றால் மக்கள் சும்மா கற்பனையில் ஒரு பட்டியலை நிறுவி, உலக அதிசயம் என்று சொல்லிக்கொண்டு திரிகிறார்கள். அவர்களின் பட்டியலிலுள்ள அந்த 7 விசயங்கள்கூட ஆளாளுக்கு மாறிக்கொண்டுதான் இருக்கிறது. உங்களிடம் அந்த 7 அதிசயத்தையும் சொல்லச் சொல்லிக் கேட்டால் தடுமாறுவீர்கள்.
இப்போது கருத்துக்கணிப்பு நடத்தும் அமைப்பும் அதிகாரபூர்வமானதாகத் தெரியவில்லை. அப்படி கருத்துக்கணிப்பு நடத்தி அமைக்கப்படும் பட்டியலில் சரியானதுதானா? இதில் நாடுகளின் மக்கள்தொகை, மக்களின் இணையவசதி - தொலைத்தொடர்பு வசதி என்பனவும் செல்வாக்குச் செலுத்துகின்றன. இதை இன்னும் தெளிவாகச் சொல்வதானால் அதிக வசூலைக் குவித்த திரைப்படம் தான் சிறந்த திரைப்படம் என்று தெரிவுசெய்யப்படுவதற்கு ஒப்பானது.

Thursday, December 08, 2005 3:36:00 AM

 
Blogger Dr.Srishiv said...

நன்றிகள் கொழுவி
அப்படித்தானே ஐயா இளையராஜாவின் ராக்கம்மாவும் உலகமெங்கும் கையைத்தட்டினாள்? அதுதான் ஐயா உலகம்..40% பேர் சேர்ந்து நம் தமிழகத்தின் தலைவிதியை நிர்ணயிக்கவில்லையா? மீதமுள்ள 60% பேர் அதனை ஏற்றுக்கொள்ளவில்லையா? அதுதான், தடி எடுத்தவன் தண்டல்காரன் அல்லவா? அதுவுமன்றி, எத்தனையோ ஆண்டுகளாக தாஜ்மகால் ஒரு உலக அதிசயம் என்பது ஆதாரபூர்வமாக கின்னஸ் முதற்கொண்டு அனைத்து புத்தகங்களிலும் வந்துள்ளனவே? :)
அன்புடன்
ஸ்ரீஷிவ்...:)

Thursday, December 08, 2005 4:09:00 AM

 
Blogger பூனைக்குட்டி said...

//எத்தனையோ ஆண்டுகளாக தாஜ்மகால் ஒரு உலக அதிசயம் என்பது ஆதாரபூர்வமாக கின்னஸ் முதற்கொண்டு அனைத்து புத்தகங்களிலும் வந்துள்ளனவே? //

உங்களுக்கெல்லாம் யாரு இதுமாதிரி செய்தியை தர்றாங்கன்னு தெரியலை.

ஒரு வேளை உங்களுக்கே சந்தேகம்னுதான் கேள்விக்குறி போட்டுறிக்கீங்களா???? முதல்ல விவரத்தை சரிபார்த்து எழுதுங்கள்.

Thursday, December 08, 2005 4:23:00 AM

 
Blogger Dr.Srishiv said...

கேள்வி அவருக்குத்தான் தம்பி...:)
எனக்கு சந்தேகம் இல்லை, ஏற்கனவே கின்னஸ் புத்தகத்தில் பார்த்தேன் தம்பி, இருக்கு, எனவே கவலை வேண்டாம், சரிபார்க்கப்பட்ட பதிவே இது ...:)
அன்புடன்
ஸ்ரீஷிவ்...:)

Thursday, December 08, 2005 4:58:00 AM

 
Blogger kirukan said...

Shrishiv,

First, there is no universal agency to declare world wonders. UN has a wing to declare only heritage sites. There are 100s of such heritage sites in the world.

http://kirukalkal.blogspot.com/2004/12/7.html#comments

pls. read my post regarding this written in december 2004.I also went thru the website of that organisation.. Its completley a private.. Nothing related to world wonders..

Thursday, December 08, 2005 7:05:00 AM

 
Blogger aathirai said...

இந்த வாக்கெடுப்பே fraudஓ என்னமோ? ஒருவரே பல முறை ஓட்டு போட வைக்கிறது.
இது எப்படியிருந்தாலும் தினமலரின் கோணை புத்தியைத்தான் காண்பிக்கிறது.

தாஜ்மஹாலை யாரும் மதச்சின்னமாக பார்ப்பதில்லை. அதை காதலின் சின்னமாக தான்
பார்க்கிறார்கள் . என்னுடன் வேலை செய்யும் அமெரிக்க பெண் சொல்வாள். ' monument
for love. how romantic! என்று இழுப்பாள். உள்ளபடிக்கே மதுரைக் கோயில் இதைவிட
பிரமாதமான கட்டடமாக இருந்தாலும், இந்த ரொமாந்டிக் வரலாறு இல்லாததால் இத்தனை
புகழ் அடையாது. அதை ஒரு கட்டமாக தான் பார்ப்பார்கள். கோயில்கள் பிரமிக்க
வைத்தாலும் இது போன்ற ஒரு உணர்வை எழுப்பாது.

Thursday, December 08, 2005 8:42:00 AM

 
Blogger கொழுவி said...

கின்னசில் வந்ததற்கும் உலக அதிசயத்துக்கும் என்ன தொடர்பு?
உலக அதிசயங்கள் என்ற பட்டியல் கின்னசில் வந்ததா?
சரி. அப்படியே அந்த ஏழு அதிசயங்களையும் பட்டியலிட்டால் அடியேன் அறிந்து கொள்வேன்.

Thursday, December 08, 2005 9:21:00 AM

 
Blogger கொழுவி said...

http://www.vikatan.com/av/2004/dec/26122004/av0203.asp

அதிசயத்துக்கு வாக்குப்போடச் சொல்லிக் கேட்டு எழுதப்பட்ட விகடன்
கட்டுரையொன்று.

அதிலும் இந்த அதிசயப்பட்டியலின் குளறுபடிகளை ஓரளவுக்குச் சொல்லியிருக்கிறார்கள். இன்னொரு விசயம். ஐஸ்வர்யாராய் சொல்லித்தான் நிறைய மக்கள் வாக்குப்போட்டதாகக் கட்டுரை சொல்கிறது. தேர்தல் பிரச்சாரத்துக்கும் இதற்குமுள்ள வித்தியாசம் என்ன?

மேலும் இதை நடத்துபவர்கள் தனிப்பட்டவர்கள். தொழிலதிபர் என கட்டுரை சொல்கிறது. யுனெஸ்கோ, அல்லது அதுபோன்ற எந்த அமைப்புமே இந்த வேலையைச் செய்யவில்லை. இவர்கள் வெளியிடப்போகும் பட்டியலுக்குள்ள பெறுமதி என்ன? இதை வைத்துக்கொண்டு ஓர் அறிவியல் தகவலாக இதைச் சொல்லலாமா? பாடத்திட்டங்களில் சேர்க்கலாமா? என நிறையக் கேள்விகள் உள்ளன.

ஒரு சிறப்புக் குழுவை அமைத்து, கட்டடங்களின் சிறப்பு, பழமை, பெருமைகளை ஆராய்ந்து அறிவியல்பூர்வமாக ஒரு பட்டியல் தயாரிப்பதுதான் முறை. அதை ஐ.நா.வின் பண்பாட்டுத்துறையோ வேறு ஏதாவது பொறுப்புள்ள துறையோ செய்யலாம். அதைவிட்டுவிட்டு இப்படி வாக்கெடுப்பு வைப்பது ஏன்?

நீங்கள் சொன்னது போல் ராக்கம்மா பாட்டு பி.பி.சியின் வாக்கெடுப்பில் அதிகவாக்குகள் பெற்று முன்னிலைக்கு வந்ததுதான். அப்பாட்டுக்குக் கொடுக்கும் மரியாதை, "அதிகமக்களால் வாக்களிக்கப்பட்ட தமிழ்ப்பாடல்" என்றது மட்டுமே. உலகில் சிறந்த நான்காவது பாடல் என்று யாராவது சொன்னால் எவ்வளவு முட்டாள்தனம்?
அதுபோலவே இவ்வாக்கெடுப்பு மூலமாக கிடைக்கும் பெறுபேறும் அதிக மக்களால் வாக்களிக்கப்பட்டது என்ற தகுதியைத்தான் கொண்டிருக்கும்.

Thursday, December 08, 2005 9:43:00 AM

 
Blogger Dr.Srishiv said...

அன்பின் கிருக்கன் மற்றும் ஆதிரை
நன்றிகள், தங்கள் விமர்சனத்திற்கும் வருகைக்கும், ஆதிரை சொன்னதுபோல், அததுக்கு ஒரு brand name வேணுங்க, அது இல்லாம ஒன்னும் பண்ண முடியாது, தெரிஞ்சோ தெரியாமலோ அது தாஜ்னு ஆகிப்போச்சா அதையே மெயிண்டெய்ன் செய்யவேண்டியதுதான்...
அன்புடன்
ஸ்ரீஷிவ்..

Thursday, December 08, 2005 11:46:00 AM

 
Blogger kirukan said...

Shrishiv,
Talking of brandname either for Taj or any other location is bullshit. I dont care for that.

What I wanted to tell you is, the whole episode itself is not a genuine one.

What you do is just one more version of what Dinamalar is doing? promoting Taj.

I hope you got my point now.

Thursday, December 08, 2005 12:00:00 PM

 
Blogger Dr.Srishiv said...

நல்லது கிறுக்கன்
சற்று காரமாக இருந்தாலும் தங்கள் விமர்சனங்கள் சுவையாக இருந்தது, நன்றிகள்...
வணக்கமுடன்,
ஸ்ரீஷிவ்..
பி.கு: தாஜ்மகாலுக்கு விளம்பரம் தேவை இல்லை அண்ணாச்சி, அது ஏற்கனவே காய்த்த காய்க்கும் மரம், கல்லடிகள் தான் அதற்கு...

Thursday, December 08, 2005 1:13:00 PM

 
Blogger பினாத்தல் சுரேஷ் said...

நீங்கள் ஆயிரம்தான் கூறினாலும், பினாத்தல்கள் தமிழகத்தின் ஒரு முன்னோடி என்று கூறிக்கொள்ளக் கடமைப்பட்டுள்ளேன்.. போன வருடமே, இந்த ஜங்க் பெரிய அளவில் தொடங்கும் முன்னரே, பிற சாதாரண அதிசயங்களை (தாஜ் மஹால், மதுரைக்கோயில்) விடுத்து, தன் இல்லத்தை அதிசயமாக்க அறைகூவி உள்ளார். தமிழர்கள் மட்டும் அல்லாது, உலகத்தின் அனைத்து மூலையிலும் (மூளையில் இல்லை) உள்ள மக்களை நம் புனிதப்பணிக்குத் திருப்பி விடுமாறு வலைஞர்களை வேண்டி, விரும்பி, நாடி, நயந்து கேட்டுக்கொள்கிறேன் என்ச் சொல்ல கடமைப்பட்டுள்ளேன் என்பதை இத்தருணத்திலே கூறினால் அது மிகை ஆகாது என்று அடக்கத்துடன் கூறி அமைகிறேன், நன்றி வணக்கம்.

பி கு (உரல் கிடைக்கவில்லை. இன்டர்னெட் சொதப்புகிறது.. டிசம்பர் 2004 archives-இல் இருக்கும்!

Thursday, December 08, 2005 11:10:00 PM

 
Blogger இராம்/Raam said...

appadi'lam illainu yenakku thonuthu.yenna karanam'nu sonna tajmahal'um antha list'la irukku. summa thevaiyellama puthu prachinai arappikithienga mister.

Thursday, December 08, 2005 11:42:00 PM

 
Blogger Dr.Srishiv said...

அன்பின் சுரேஷ்
தங்கள் வருகைக்கு நன்றி,அருமையாகச்சொன்னீர்கள், தங்கள் வீடு கூட ஒரு காலத்தில் உலக அதிசயமாகலாம்,அது உங்கள் கையில் உள்ளது, ஒரு நோபல் பரிசு விஞ்ஞானியாக தாங்கள் மாறும் சமயம் அது நடைபெறலாம், விரைவில் அது நிறைவேற என் பிரார்த்தனைகளும் ஆசிகளும்.
அன்புடன்,
ஸ்ரீஷிவ்...:)

Friday, December 09, 2005 3:44:00 AM

 
Blogger Dr.Srishiv said...

அன்பின் ராம்
சரியாகச் சொன்னீர்கள், தாஜ்மகாலும் பட்டியலில் உள்ளது, ஆனால் வாக்குகள் பிரிகின்றனவே ஐயா? இன்று அரசியல் கட்சிகள் , துக்கடா கட்சிகள் என்ன செய்கின்றன? அந்த வேலைதானே? ஓட்டுப்பிரிக்கும் வேலை, இந்த மதுரை கோவிலுக்கு வாக்களித்தவர்கள் அனைவரும் அப்படியே தாஜ்மகாலுக்கு இந்த வாக்குகளை அளித்திருந்தால் இன்னும் முன்னனியில் இருந்திருக்குமே நம் நாட்டின் சின்னம்? ஒவ்வொருவரும் தங்கள் மானிலத்தில் உள்ள ஒரு சிறப்பிடத்தினை புதிதாக உலக அதிசயமாக்க முயன்றால் நரி, மாடுகளைப்பிரித்துவிட்டு அடித்து சாப்பிட்ட கதைதான் ஆகும்.

எனக்கே தெரியும், ராக்கம்மாவிற்கு நான் போட்ட வாக்குகளின் எண்ணிக்கை 1500ஐயும் தாண்டும் என்பது, இருப்பினும், இறுதிநேரத்தில் அவன் ஏதோ ஒரு பாடலை முதலிடம் என்று போட்டுவிட்டான் அல்லவா? அதேதான் இது, ஆயினும், வாக்குகள் மொத்தமாக ஒரே தலைமையை நோக்கி இருந்தால் தானே வலிமையான ஒரு தலைமை நம் நாட்டை ரெப்ரசெண்ட் செய்ய சரிப்பட்டு வரும்? இல்லையேல் நீயும் கெட்டாய், நானும் கெட்டேன் கதை போல் ஆகிவிடும் அல்லவா???
அன்புடன்
ஸ்ரீஷிவ்...

Friday, December 09, 2005 3:49:00 AM

 

Post a Comment

<< Home

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது