இது ஒரு கருத்த இளைஞனின் வெளுத்த இதயப்பதிவுகள்...

Thursday, November 17, 2005

வலையுலகில் ஒரு அகண்ட அலைவரிசை வானொலி...

பொன்னொன்று கண்டேன் பெண்ணங்கு இல்லை,
என்னென்று நான் சொல்லலாகுமா?
ஏனென்று நான் சொல்ல வேண்டுமா???


நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்?
நெருப்பாய் எரிகிறது? இந்த
மலருக்கு என்மேல் என்னடி கோபம்?
முள்ளாய் மாறியது???

அப்பப்பா, என்ன அருமையான பாடல்கள், கேட்டால் கேட்டுக்கொண்டே இருக்கலாமே? பழைய பாடல்கள், புதிய பாடல்கள், நகைச்சுவை, மென்பொருளாளர்களுக்கும் என்போன்ற ஆராய்ச்சியாளர்களுக்கும் ஒரு வரப்பிரசாதம் என்றே கூறலாம் ஷியாம் ரேடியோ அவ்வளவு அற்புதமான துல்லியமான ஒலிபரப்பு, அகண்ட அலைவரிசையில் ஒரு அற்புதம் ஷியாம் ரேடியோ. சென்னையில் இருந்து நேரடியாக ஒலிபரப்பாகின்றது. நிறைய பேருக்குத்தெரிந்திருந்தாலும் இதற்காக ஒரு பதிப்பு போடலாம் என்றே நினைத்ததன் நோக்கம், தெரியாத ஒரு சிலரும் தெரிந்துகொள்ளட்டுமே என்ற ஒரு எண்ணம்தான். இலவசமாகவும் கேட்கலாம், கட்டண வானொலியாக வெறும் முன்னூறே ரூபாய்கள் ஓராண்டுக்கட்டணமாகச்செலுத்தி சிறப்புப்பகுதிகளையும் கேட்டு ரசிக்கலாம்.டாக்டர்.ஷியாம் என்பவரால் சென்னையிலிருந்து இயங்கும் இந்த தமிழகத்தின் முதல் தமிழ் அகண்ட அலைவரிசை வானொலி சமீபமாக டெக்கான் ஹெரால்டு தினசரி நடத்திய உலகளாவிய வானொலிகளின் வாக்கெடுப்பில் ஐந்தாம் இடம் பெற்று முன்னிலை வகிப்பது நம் அனைவருக்கும் பெருமைக்குறியதே.

மேலும் இதில் நேயர் விருப்பமும் உண்டு, மின்னஞ்சலில் நம் விருப்பப்பாடல்களைத்தெரிவித்தால் நமக்காக ஒலிபரப்புகின்றனர். மேலும் தினசரி பிறந்தநாள் வாழ்த்துப்பகுதி உண்டு, காலை 7.30மணி அளவில் (இந்திய நேரம்) ஒலிபரப்பாகிறது, உங்கள் பிறந்தநாள் உங்கள் மனதிற்குப்பிடித்தவரின் பிறந்தநாள் போன்றவற்றினைத்தெரிவித்தால் அதனை வானொலியில் உலகளாவத்தெரிவித்து நமக்குப்பிடித்தப்பாடலையும் ஒலிபரப்புகின்றனர். அருமையான ஒரு பொழுதுபோக்கு வலைத்தளம். மேலும் இதன் சிறப்பு என்று கூறினால், இதில் பாடல்கேட்க உங்களிடம் எந்த ஒரு பிளேயரும் தேவை இல்லை, வின் ஆம்ப், விண்டோஸ் மீடியா பிளேயர், ரியல் மீடியா பிளேயர் என்று எந்த ஒரு பிளேயரும் இல்லாமலே வலைத்தள முகவரியை இட்டுஅப்படியே கேட்கலாம். நல்ல ஒரு வசதி அல்லவா? புதுப்பாடல்களுக்கென்று ஒரு சமயமும் பழையபாடல்களுக்கென்று தனிநேரமும் உண்டு, மேலும் தங்கள் விருப்பத்தினை தாங்கள் நேரத்தில் கேட்க மறந்துவிட்டால்கூட ஒரு நாளிலேயே 2,3 முறை ஒலிபரப்புவதால் எப்படியும் ஒருமுறையேனும் கேட்டுவிடலாம்... இன்னும் இது பற்றி அடுத்த பதிவில் எழுதுகின்றேன்..
ஸ்ரீஷிவ்...:)
type="text/javascript">&cmt=1&postid=113250113325738559&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

1 Comments:

Blogger manjoorraja said...

நல்லதொரு பதிவு தொடரட்டும்.
ஷியாம் ரேடியோ இணைய உலகில் சிறந்தவற்றில் சிறந்தது.

Tuesday, November 20, 2007 4:46:00 AM

 

Post a Comment

<< Home

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது