ஏதோ ஒரு நதியில்....
என்னவோ இன்று சிறிது மனம் கனத்து இருந்தது, ஜெயமோகனின் "காடு" நாவலில் வரும் ஸ்ரீதரன் போல எங்கேயோ ஒரு நதி தீரத்தில் அமர்ந்து வாழ்வினைக்கழித்திட மாட்டோமா என்ற ஒரு ஏக்கம். ஹ்ம்ம் அவனுக்குக்கொடுத்து வைத்திருந்தது , எனக்கு வாய்க்கவில்லையே என்ற சிறு வருத்தமும் மேலிட, ஷியாம் ரேடியோ வினை திருப்பினேன் என் கணினியில். இந்தப்பாடல் சரியாக மனம் அறிந்ததுபோல வந்தது...கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை....அடுத்து வந்த ஒரு அருமையான பாடல் இதயத்தினைக்கிழித்து உள்ளேயே உட்கார்ந்ததுபோல் ஒரு உணர்வு, எனக்காகவேவா அல்லது எல்லா ஆண்மக்களுக்காகவுமா தெரியவில்லை, ஆனால் அந்தப்பாடல் என்னை மிகவும் பாதித்துவிட்டது, அதை உங்களுடன் பகிர்ந்துகொள்ளலாம் என்றே இந்த பதிவை இடுகின்றேன்..
படம் : ஆட்டோகிராஃப்
பாடல் : நினைவுகள் நெஞ்சில்....
இயக்கம் : சேரன்
நடிப்பு : சேரன்.
நினைவுகள் நெஞ்சில் புதைந்ததினால்
நெருப்பால் எந்தன் நெஞ்சை சுடுகின்றேன்
உன் உருவம் கண்களில் புதைந்ததினால்
கண்ணீர்விட்டு கண்ணீர்விட்டு அழிக்கின்றேன்
தாய் தந்தைக்காக எனைப்பிரிய
காதலை காகிதமாய் தூக்கி எறிய
பெண்ணே உன்னால் முடிகிறதே
என்னால் ஏனோ முடியவில்லை
எனக்கே எனக்கே என்னைப்பிடிக்கவில்லை
காரணம் கேட்டால் தெரியவில்லை...( நினைவுகள்)
ஆஆஆஆஆஆஆஆ....
காத்திருந்து காத்திருந்து பழகியவன்
நீ என்னைக்கடக்கின்ற ஒரு நொடிக்காக
காத்திருந்து காத்திருந்து பழகியவன்
கஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு பேசியவன்
நீ என்னை காதலிக்க உன் தாய்மொழியை
கஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு பேசியவன்
நொடிகள் எல்லாம் நோய்ப்பட்டு
எனை சுமந்துபோக மறுக்கிறதே
மொழிகள் எல்லாம் முடமாகி
என் மௌனத்தைக்கூட எரிக்கிறதே
சுவாசிக்க கூட முடியவில்லை
எனை வாசிக்க மண்ணில் எவருமில்லை
என்னை எனக்கே பிடிக்கவில்லை
காரணம் கேட்டால் தெரியவில்லை ( நினைவுகள்...)
கனத்த இதயத்துடன்,
ஸ்ரீஷிவ்... type="text/javascript">&cmt=2&postid=113216360684769712&blogurl=http://srishiv.blogspot.com/">
2 Comments:
நன்றிகள் பல்லவி
தங்களின் பாடல்வரிகளும் அருமையானவையே...கேட்கும்போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்.....
ஸ்ரீஷிவ்..
Saturday, November 19, 2005 11:14:00 AM
நன்றிகள் நண்பா
உன் அருமையான வரிகளுக்கு...
ஸ்ரீஷிவ்...:)
Sunday, December 04, 2005 12:30:00 PM
Post a Comment
<< Home