கண்திறந்த கண்ணகி
இதயத்தில் விஷத்தையும்
உதடுகளில் அமுதையும்
எப்படியடி உன்னால் இயல்பாக
கொடுக்க முடிந்தது?
தவறிழைத்தான் என்ற
தகவல் வந்ததும்
தவறிழைத்தேனே நானும்
பாண்டியன் கோவலனுக்கு
இழைத்த அதே கொடுமை,
இங்கே அரண்மனையாட்களுக்கு
மாறாக ஆரணங்கு..........
யானோ கள்வன் என
கேட்கக்கூட கோவலனிற்கு
சந்தர்ப்பமளிக்கவில்லையே?
நானே கொடியோன்,
மன்னிப்பாயா கோவலா?
மாதவியாய் மற்றவரை நீ
நோக்கினாயா என நான் கேளேன்,
மரபிலக்கியம் இல்லையே யாரும்?
அதிலே கூட தளை தட்டுவதில்லையா?
எதுவுமே ஒரு முற்றுப்புள்ளி இல்லை,
அனைத்திலுமே ஒரு காற்புள்ளி (,)
இருக்கின்றதென்றுரைத்து என்
கண்திறந்த கண்ணகிக்கு கடிதம் மூலம்
நன்றி கூற எண்ணினேன், அதைவிட
இந்த கவிதை மூலம் கூறுவதே
சாலச்சிறந்ததெனப்பட்டதால்
இந்தக்கவிதையுடன் களத்தில்...
சமயம் கிட்டும் கால் சந்தம் படிக்க
வந்துசெல்வேன்...
சரணமென்றேன்.... type="text/javascript">&cmt=6&postid=112430962254828763&blogurl=http://srishiv.blogspot.com/">
6 Comments:
சிவா,
கவிதையைப் படிச்சேன்.
நான் கவிதை ஆள் கிடையாது. அதனாலே எதுவும் சொல்லமுடியலை(-:
என்றும் அன்புடன்,
துளசி.
Wednesday, August 17, 2005 5:54:00 PM
நன்றிகள் அம்மா
பரவாயில்லை, படித்ததைச்சொல்லவேனும் ஒருவர் இருக்கின்றீர்களே? சந்தோசம் அம்மா....:)
பிரியமுடன்,
ஸ்ரீஷிவ்...
Thursday, August 18, 2005 12:58:00 AM
சிவா, கவிதையை நான் படித்தேன். மீண்டும் படித்தேன். நீங்க சொல்ல வருவதை என்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. கொஞ்சம் விளக்குங்களேன். சிலப்பதிகாரத்தை ஓரளவிற்குப் படித்தவன் என்ற வகையில் நீங்கள் சொல்ல வருவதை தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.
அன்புடன்,
கோ.இராகவன்
Thursday, November 17, 2005 1:39:00 AM
அன்பின் ராகவன்
நன்றிகள் தங்கள் பின்னூட்டத்திற்கு, இதில் நான் கூறவருவது, கண்ணகியைப்பற்றி,அவள் சபித்த மதுரையைப்பற்றி, மேலும் அவள் கணவனை கொன்ற பாண்டியமன்னன், கொண்டுவா என்று கூறியகூற்று அந்த கூற்றுவன் செவிபுகுந்த காவலோன்களுக்கு கொன்றுவா என்று விழ அவன் தலைகொய்தார்களே? என்னவென்று சொல்ல? இதனை சரியாகப்புரியாமல் கண்னகியும் அனாவசியமாக ஒரு ஊரையே எரித்தாளே...இவை எல்லாவற்றையும் மனதில் கொண்டெ இந்தக்கவிதை எழுதப்பட்டது...
ஸ்ரீஷிவ்...
Thursday, November 17, 2005 11:16:00 AM
ஸ்ரீஷிவ், கொண்டு வரச் சொன்னதற்கு கொன்று வந்ததாகச் சிலப்பதிகாரத்தில் எந்தச் சான்றும் இல்லை என்றே நினைக்கிறேன். கள்வன் என்றதுமே கொல்லச் சொன்னதாக நினைவு. நான் வாரயிறுதியில் கொஞ்சம் படித்து விட்டுச் சொல்கிறேன்.
அதே போல கண்ணகி மொத்த ஊரையும் எரிக்கவில்லை. பெரும்பாலானவர்கள் தப்பித்திருக்கின்றார்கள். கண்ணகியைப் பலர் இன்னமும் தப்பாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.
Thursday, November 17, 2005 8:52:00 PM
நன்றி ராகவன்,
எதிர்பார்க்கின்றேன் தங்கள் பதிவினை, தக்க சான்றோடு, அப்படியே மாதவியைப்பற்றியும் மணிமேகலை பற்றியும் சிறிது சொன்னால் மகிழ்வேன் :)
ஸ்ரீஷிவ்...:)
Friday, November 18, 2005 3:17:00 AM
Post a Comment
<< Home