இதயம் வலிக்குதடி.....:(
இரக்கமின்றி உன் வார்த்தைகள்
இடி போல இறங்க,இமயமாய்
இருந்தவன் இருண்ட வீடாய் ஆனேன் :(
இறந்து விடு என்றே சொல்லி இருக்கலாமடி நீ...
இதயம் இறந்து இழி பிறப்பாய்
இன்னும் இந்த உலகில் இருந்துகொண்டுதானே இருக்கிறேன்???? :(
இரும்பாய் இருந்தவனை இளக வைத்து !
இன்று “யாரோ” நீ எனக்கேட்டு மீண்டும்
இரும்பாக்கினாயடி!..வேண்டாம் வேண்டாம்
என நீ விலகி நின்று முட்கள் தந்தாலும் !..
என் பூவைக்கு பூவை மட்டுமே கொடுக்கும்
இந்த இதயம்!..”உன் நலத்தில் தானடி
என் சுய நலம
அட நீ இன்றும் என் விழிகளுக்குள்! நான் கண்
மூடினால் என் கண்மணீயை யார் பார்ப்பது?
அதற்காகவேனும் நான் வாழ வேண்டும்!...
உன் நினைப்போடு!..நீ நீங்க நீங்க
நீண்டு போகும் உன் நிழலோடு!.. type="text/javascript">&cmt=5&postid=112210385995400867&blogurl=http://srishiv.blogspot.com/">
5 Comments:
வணக்கம்
எப்படி இருக்கிறது என் கவிதை? தங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்...
ஸ்ரீஷிவ்....
Sunday, July 24, 2005 12:27:00 PM
//நீ நீங்க நீங்க....
நீண்டு போகும் உன் நிழலோடு//
நல்ல எழுதிருக்கீங்க.எல்லாவற்றையும் விட இந்தக் கடைசி வரிகள்ல உங்களோட வலியை உணர முடியுது.
காலம் எல்லாக் காயங்களையும் ஆற்றட்டும்.
உங்க படிப்பு உங்களோட நேரங்களைக் கண்டிப்பா விழுங்கும்.ஆனாலும் நேரம் கிடைக்கரபோதெல்லாம் அடிக்கடி எழுதுங்க.
காதல் மட்டுமில்லாமல் எல்லா உணர்வுகளையும் கவிதையாக்க முயற்சி செய்யலாமே...இது என்னோட சஜஷன்.
சுதர்சன்.கோபால்
http://konjamkonjam.blogspot.com
Monday, July 25, 2005 1:47:00 AM
நன்றிகள் சுதர்சன்,
கண்டிப்பாக சமயம் கிடைக்கும்போது பதிவுகளைத்தொடர்வேன், சமயம் கிட்டும்போது, என் கடந்து வந்த காவியம் தொடர்கவிதையைப்படியுங்கள், அவை மே, சூன் மாத இழைகளில் உள்ளன என நினைக்கிறேன்....தங்கள் வலைப்பூ மிக்க அருமை...நன்றிகள்....தாங்களே என் முதல் பதிவாளர்...
பிரியமுடன்,
ஸ்ரீஷிவ்...
Monday, July 25, 2005 2:29:00 AM
அன்புள்ள ஸ்ரீஷிவ்,
கவிதை நல்லா இருக்கு.
உங்க profileஐ பார்த்தேன்.
அசாம் பற்றி, அங்குள்ள மக்கள், அவர்களின் கலாச்சாரம், நீங்க பார்த்த சுவாரஸ்யமான விஷயங்கள் இதெல்லாம் எழுதியிருக்கீங்களா? அவங்களைப் பற்றி தெரிஞ்சுக்க ஆவலா இருக்கு.
Monday, July 25, 2005 4:28:00 AM
நன்றிகள் ரம்யா்,
நானிருக்கும் மானிலம் ஒரு அருமையான இயற்கை எழில் கொஞ்சும் மானிலம், எழுதவேண்டும் அது பற்றி, ஒருமுறை கீதம் குழுமத்தில் எழுதினேன், இதிலும் எழுதுகிறேன், நன்றிகள் ஆலோசனைக்கு....:)
பிரியமுடன்,
ஸ்ரீஷிவ்...
Monday, July 25, 2005 5:58:00 AM
Post a Comment
<< Home