அசோக மித்திரனின் "மண வாழ்க்கை"
எதேச்சையாக இன்று காலை , பழைய புத்தகங்களைப் புரட்டிக்கொண்டிருந்தபோது 16-9-2002 தேதியிட்ட குமுதம் கன்ணில் பட, சற்றே கண்ணை ஓட்டினேன், அசோகமித்திரனின் ஒரு சிறுகதை படிக்க நேர்ந்தது, மண வாழ்க்கை என்று பெயரிட்ட கதை அது, அப்படியே மனதில் நின்றுவிட்டது.
கதை என்னவோ ரொம்ப சாதாரணக்கதைதான், ஆயினும், அதை எடுத்துச்சென்ற விதம், கதைப்படி தன் மகளுக்கு 15 வயதில் திருமணம் முடித்துக்கொடுக்கும் தந்தை, கணவன் ஒரு ராணுவ வீரன், ராணுவத்தில் இருக்கும்போது மனைவிக்கு குழந்தை பிறக்கிறது, தாய் வீட்டிலே வளர்கிறது, பணியிலிருந்து ஒய்வு பெற்று திரும்பும் கணவனிடம் குழந்தை ஒட்டமாட்டேனென்கிறது, முரட்டுத்தனமாக எடுத்து அணைக்கும் கணவனிடமிருந்து திமிரும் குழந்தையை ஓங்கி ஒரு அறை, அப்படியே மூர்ச்சையாகி விழுந்து இறந்துவிடுகிறது....அதன் பின் ஏற்படும் விளைவுகளையும அற்புதமாக எழுதி இருக்கிறார்....அந்த நடை.....அப்ப்ப்ப்பா...அற்புதம்....சில வரிகளை உங்கள் பார்வைக்குக் கொடுக்கிறேன்...
'ஒரு வார காலம் வீட்டில் மரண அமைதி எங்கே எதைப்பார்த்தாலும் குழந்தை நினைவு வந்தது. ஒரு சிறிய நாற்காலியைப் படுக்கப்போட்டு அதைத்தள்ளு வண்டியாக வீடெங்கும் தள்ளிப்போகும் அந்த நாற்காலியை நாங்கள் புரட்டி நிறுத்தவில்லை. குழந்தை அடிவாங்கி கீழே கிடந்த இடத்தைப் பெருக்கவில்லை. அறையைக் கூட்டினால் அந்த இடத்தை அப்படியே விட்டு விடுவோம். அப்பாவே பலமுறை அங்கு நின்று குலுங்கி குலுங்கி அழுதார்........'
மனதை மிகவும் பாதித்த சிறுகதைகளில் இதுவும் ஒன்று....
ஸ்ரீஷிவ்.... type="text/javascript">&cmt=0&postid=112037217238087444&blogurl=http://srishiv.blogspot.com/">
0 Comments:
Post a Comment
<< Home