Thiruvasagam in Oratorio by Ilaiyaraaja - an experience...
திருவாசகம்...இளையராஜாவின் இசையில்....ஒரு இனிய அனுபவம்....
இனிய தோழமைக்கு வணக்கம்,வாழிய நலம், இந்த கட்டுரை, ஒரு பாமரன், எப்படி
இறைவனை அடைய எளிய முறையில் வழி காண்பித்து இருக்கிறான் என்பது பற்றியது...
என்னை,மிகவும் பாதித்த சில , மன்னிக்கவும் , மிக சில காவியங்களுள் இதுவும் ஒன்று என்றே
சொல்லிக்கொள்வதில் பெருமை அடைகிறேன். ஒரு சிம்பொனி இசை, அதுவும் தமிழில்
என் ஆயுள் காலத்தில் வந்து அதனை நான் கேட்கும் வாய்ப்பு பெற்றமைக்கு நான் மிகவும்
பாக்கியம் செய்தவனாகவே நினைக்கின்றேன்...
ஒவ்வொரு பாடலுமே ஒவ்வொரு சுவை, குறிப்பாக, பொல்லாவினையேன்....மிக்க அருமையான ஒரு பாடல்,
குறிப்பாக, 15.03 நொடியில் ஆரம்பமாகும் மாசற்ற சோதி வரிகள் , கண்களில் கண்ணீரை வரவழைப்பது திண்ணம்.
கேட்டுவிட்டு அழாதவர்கள் மிகக்குறைவு....ஒரு முறை கேட்டால் இந்த சுவை கிடைக்காது என்றே எண்ணுகிறேன்,
ஒரு 5 முறை கேட்பின், அதன்பின் ஒவ்வொரு முறையும் அந்த வரிகளில் உங்கள் கண்ணீர் உங்கள் கன்னத்தினை நனைப்பது
திண்ணமே....
உம்பார்க்கரசே..அது ஒரு வேறு விதமான அறீமுகம், புற்றில் வாழ் அரவம் அஞ்சேன்...ஒரு வினோதமான அனுபவம்,
சிம்பொனியின் பிரம்மாண்டம் அதில் காணலாம்...பூவிரு கண்ணும் , புரந்தரனும்...இது ஒரு அனுபவம்...பூவார் சென்னி மேனியன்....அது ஒரு
வேறு விதமான உற்சாகம்....சமயம் கிடைப்பின் தயய் கூர்ந்து அனைவரும் கேளுங்களேன்...
இளையராஜாவின் சிம்பொனி உங்களை கண்டிப்பாக ஆட்கொள்ளப்போவது திண்ணமே....
என்றென்றும் பிரியமுடன்,
உங்கள்,
ஸ்ரீஷிவ்.. type="text/javascript">&cmt=0&postid=112098040269819764&blogurl=http://srishiv.blogspot.com/">
0 Comments:
Post a Comment
<< Home