இன்று நட்பு தினமாம்...
இனிய தோழனே என அழைக்க
ஈராயிரம் கோடி இதயங்கள் இருப்பினும்
அந்த இரண்டு இதயங்களுக்கே என்
இதய காணிக்கையை அளிக்க விருப்பம்...
செந்தில் , வில்சன், துணையாய் ஒரு
தூண் ஏசையா....
பள்ளி நாட்கள் பலவிதமாய் கழிந்தாலும்
கல்லூரி நாட்களைக் களிப்புடனே கழித்தாலும்
காலம் ஒரு காலனைப்போன்றதல்லவா?
அது கற்றுக்கொடுத்த பாடங்கள் எத்தனை?
அதன் வலி அனைத்தையும் நானே வாங்கியிருப்பின்
வதங்கிப்போய் இருப்பேனே நண்பா????
இறுதிவரை இடிதாங்கியாய் என்
இதயம் தாங்கினீரே நண்பா???
கடமையிலும் சரி
காதலிலும் சரி
எதுவேண்டும் என்றாலும் என்னோடு
நின்றாயே? எனக்காக எத்தனை நாள்?
பள்ளியிலும் பணியிலுமே
ஏச்சுக்கள் பேச்சுக்கள் வாங்கினாயே நண்பா?
முன்பின் முகமரியா
மூடப்பெண் ஒருவளிடமும்
முன்பே அறிமுகமாயினும்
முயலுக்கு மூன்றேகாலென்ற
முடிவரிந்த மங்கையிடமும்
நான் கூட கேட்டிருப்பேனா அப்படி?
அவள் தாழ் பணிய தயாராய் இருந்தீரே தோழா???
அவளுக்காக எழுதிய வரிகள் ஆயிரம் இருக்கலாம்
ஆயினும் தோழா,இந்த அருமையான தோழர் தினத்தில்
உங்களை நினையாவிடின் நான் உயிரில்லாப்பிணத்தின்
ஒப்பாவேன் என் அன்பு சோதரரே....
தாயினும் மேலாக என்
தமையர்களினும் உயர்வாக
என் தலை நிமிர்த்தி விட்ட உங்களுக்கு
என் தோழர் தின வாழ்த்துக்கள்...
இணையமோ, மின்னஞ்சலோ
அறியாத அவர்களுக்கு என்
இதயப்பூர்வமான வாழ்த்துக்கள்...
மேலும்,
இணையத்தில் என் அறிமுகமாகி
இதயத்தில் இடம் கொடுத்து இடம் பெற்று
இணைபிரியாமல் என்னுடன் இருக்கும் என்
இனிய இணைய இதயங்களுக்கும் ஏனைய
இதயங்களுக்கும் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்....
இதயம் முழுதும் இளமை சுமந்த,
இனிய உங்கள்,
ஸ்ரீஷிவ்... type="text/javascript">&cmt=2&postid=112290548991184539&blogurl=http://srishiv.blogspot.com/">
2 Comments:
என் தோழர்களை எண்ணி எழுதியது இந்த கவிதை...
ஷிவ்...
Monday, August 01, 2005 8:17:00 AM
அன்பு நண்பா,
நன்றிகள் உன் விமர்சனத்திற்கு, நட்பை மதிப்பேன், அதே சமயம், காதல் மறுக்கப்பட்டிருந்தால் தானே மிதிக்க? மறைக்கப்பட்டல்லவா இருக்கின்றது? வெளிக்கொணர்வதே உத்தமம் அல்லவா? :)
அன்புடன்
ஸ்ரீஷிவ..:)
Thursday, November 17, 2005 10:40:00 AM
Post a Comment
<< Home