என் இனிய அஸ்ஸாம்....பகுதி 2.
வணக்கம் மீண்டும்,
நேற்று எழுதிய இடத்திலிருந்தே தொடர்கிறேன். பாலாஜி மந்திர் போகும் வழியில் மற்றுமொரு முக்கியமான இடத்தைச்சொல்ல மறந்துவிட்டேன், இண்டர் ஸ்டேட் பஸ் டெர்மினஸ் எனப்படும் மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து நிறுத்தம், இங்கு இருக்கும் 7 மாநிலங்களையும் இணைக்கும் ஒரு முனையம், பெரிய அளவில் கட்டி வருகிறார்கள். மத்திய அரசின் தங்க நாற்கரத்திட்டத்தின் கீழ் வருகிறது என்று நினைக்கிறேன் அந்த பாதை.
அது மட்டுமன்றி, குவஹாத்தி நகர், தரை மார்கமாகவும், ரயில் மார்கமாகவும், ஆகாய மார்கமாகவும் வெளி உலகோடு இணைக்கப்பட்டுள்ளது. நான் முன்பே கூறியது போல், சராய்காட் பாலம் ஒரு பாலமாக இருக்கிறது வடகிழக்கு இந்தியாவிற்கும் இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கும், கொல்கத்தா, தில்லி, சென்னை, மும்பை, எங்கிருந்து வந்தாலும், தரை வழியாகவோ, ரயில் மார்கமாகவோ வருபவர்கள் இந்த பாலத்தின் வழியாகத்தான் வரவேண்டும். உறுதியான இரும்புப்பாலம் இது, இதற்கு முன்பு அதாவது இந்தப்பாலம் கட்டுவதற்கு முன்புவரை குவஹாத்திக்கும் அதன் துவக்க்கமாக கொண்ட வடகிழக்கு இந்தியாவிற்கும் பிரம்மபுத்திரா நதியைப்படகு மூலம் கடந்தே வந்து வணிகத்தை வளர்த்திருக்கிறார்கள்..
மேலும் ஒரு சிறு விஷயம், இந்தியத்துணைக்கண்டத்தினை மொகலாயர்கள் பிடித்து ஆண்டபோது, இந்த பகுதி மட்டுமே அவர்களால் பிடிக்கப்படாத பகுதியாகும். அஹோம் மன்னர்கள் என்ற அரச வம்சத்தினரால் ஆளப்பட்ட பகுதி இது. இன்றும் அவர்களின் வம்சாவளியினர் பருவாக்கள் (Baruas) என்ற இனத்தினராய் இங்கு இருக்கிறார்கள். ( எங்கள் ஐஐடியின் இயக்குனர் கூட ஒரு பருவா தான் (Gautam Barua)). சரி சரி நகருலவைப்பாதியில் விட்டுட்டோம் இல்ல? அதுக்கு வருவோம். ரயில் , பேருந்து மாதிரி, ஆகாய வழி அப்படி பார்த்தா, LGB International Airport, பண்ணாட்டு விமான முனையம், இங்கிருந்து நேரடியாக சிங்கப்பூருக்கு , சைனாவுக்கு விமானங்கள் உள்ளன, மேலும் கொல்கத்தாவிற்கு நேரடி விமானங்கள் உள்ளன, ஜெட், சகாரா, இந்தியன் ஏர்லைன்ஸ் என்று பல விமானங்களும் வந்து செல்லும் விமான நிலையம். இதுதான் வடக்கிழக்கு இந்தியாவீற்கான வழிகள் போதுமா???
மீண்டும் குவஹாத்தியில், இப்போ அடுத்த வழிக்கு போவோம், ஊருக்குள்ள போகும் வழி, அந்த வழியில் முதலில் வருவது, ஆதாபாரி பேருந்து நிலையம், இந்தப்பேருந்து நிலையத்திலிருந்து தான், பக்கத்து நாடான பூட்டானுக்கு பேருந்தில் செல்லலாம், எல்லை வரை சென்று அங்கிருந்து இன்லைன் பர்மிட் எனும் உள்நாட்டு அனுமதி பெற்று அங்கு செல்லலாம். அந்த பேருந்து நிலையம் கடந்து சென்றால், மாலிகாவுன் (maaligaon) குவஹாத்தியில் இரண்டாம் பெரிய சந்தை, குவஹாத்தி இரண்டாகப்பிரிந்து இயங்குகிறது. வாரத்தில் முதல் மூன்று நாட்கள் பான்பஜார் (paanbazar) இயங்கினால், அடுத்த 4 நாட்கள் மாலிகாவுன் இயங்கும். இது கடந்து செல்ல இனிய காமாக்கியா தேவி குடியிருக்கும் நிலாச்சல் மலைத்தொடர்கள், பார்க்கவே பசுமையாக இருக்கும். அதன் உச்சியில் தான் காமாக்கியா தேவி கோவில் இருக்கிறது, அதனைத்தாண்டி மேலே செல்ல புவனேஷ்வரி கோவில் இருக்கிறது, அங்கிருந்து பார்த்தால் குவஹாத்தி முழுதும் அருமையாகப் பார்வைக்குக்கிடைக்கும், மறுபுறம் பிரம்மபுத்திரா நதி....ஓஹ்ஹ்ஹ் ஓவியம் வரைந்ததுபோல் அமைதியாக ஓடிக்கொண்டிருக்கும், பார்க்க பல நூறு கண்கள் வேண்டும்.
இந்த காமாக்கியா தேவி பற்றி ஒரு சுவாரசியமான கதை இருக்கிறது, இவள்தான் நரகாசுரனின் தாயார், ஆமாம் தீபாவளி வரக்காரணமான அதே நரகாசுரன் தான், இந்த நகரில் தீபாவளியைக்கொண்டாடுவது இல்லை. இந்த தேவி கோவில் இந்தியாவில் இருக்கும் 108 சக்திபீடங்களில் ஒன்று, இதன் தலபுராணம் மிக மிக சுவாரசியமானது, அதன் கதையை உங்களுடன் திங்களன்று பகிர்ந்துகொள்கிறேனே????
( திங்கள் சந்திப்போம்)...
உங்கள் ஸ்ரீஷிவ்.....:)
type="text/javascript">&cmt=0&postid=112266619177125080&blogurl=http://srishiv.blogspot.com/">
0 Comments:
Post a Comment
<< Home