இது ஒரு கருத்த இளைஞனின் வெளுத்த இதயப்பதிவுகள்...

Thursday, July 28, 2005

என் இனிய அஸ்ஸாம்....பகுதி 1.


இனிய தோழமைகளுக்கு,
வணக்கம் வாழிய நலம், நீண்ட நாட்களுக்குப்பின் எதை எழுதுவது என்று யோசித்துக்கொண்டிருந்த நேரம், துளசி அம்மா,மரத்தடி யாஹூ குழுமத்தில் இருந்து எனக்கு கொடுத்த ஒரு யோசனையைவைத்து இந்த கட்டுரையை எழுதலாம் என்றே ஆரம்பிக்கிறேன்.

ஒரு இனிய 25 வருடங்களுக்கு முன் நம் தமிழகம் எப்படி இருந்து இருக்கும்? அதுதான் அஸ்ஸாம், இந்தியாவின் வடகிழக்குப்பகுதியில் இருக்கும் ஒரு அழகான மானிலம். 2001 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் நான் இந்த அஸ்ஸாம் மாநிலம் குவஹாத்திக்கு பி.ஹெச்டி எனும் முனைவர் பட்டத்திற்கான ஆய்வுப்பணி மேற்கொள்ள இந்திய தொழில்நுட்பக்கழகம் (Indian Institute of Technology, Guwahati) வந்து சேர்ந்த பொழுது கண்ணைக்கட்டிக் காட்டில் விட்டது போல் இருந்தது, தமிழ் தவிர வேறு இந்திய மொழிகள் அறியாமல் போனது எவ்வளவு பெரிய தவறு என்றூ முதல் முதல் என்னைச் சிந்திக்க வைத்த ஒரு பயணம்.

தமிழ் பேச ரொம்ப ஆசையாக இருக்கும், யாராச்சும் வழில தமிழ் பேசினா கூச்சப்படாம நீங்க தமிழா? அப்படினு கேட்ட நாட்கள், சாப்பாடு அப்படினு பார்த்தா உருளைக்கிழங்கும், ரொட்டியும், வேகாத அரிசி சாதமும் எங்களோட கல்லூரி விடுதியில், கஷ்ட ஜீவனம்தான், அப்படி ஒருமுறை ஊருக்குள்ள சாப்பாடு எங்கனா கிடைக்குமானு தேடினப்போ, கிடைச்ச 3 ஹோட்டல்கள் பால்டன் பஜாரில் இருக்கும் உட்லேண்ட்ஸ், கேரளா பவன் இரண்டு தென் இந்திய உணவு விடுதிகள் ( இன்னும் இருக்கு), மேலும் புகைவண்டி நிலையத்தினுள் ஒரு தென்னிந்திய உணவு விடுதி ( தோசை கிடைக்கும், இட்லி கிடைக்கும்) ஆகிய 3 உணவு விடுதிகள் இருந்தன. கிடைக்கறத வாரா வாரம் போய் சாப்பிடுவோம், தமிழ் பசங்க ஒரு 3 பேர் இருந்தோம் அப்போ...

அஸ்ஸாமின் சில முக்கிய இடங்களை உங்களுக்கு அறிமுகப்படுத்த விரும்புகிறேன். முதலில் குவஹாத்தி எனும் தலைநகரே (அஸ்ஸாம் தலை நகர் திஸ்பூர் என்று படித்திருப்பீர்கள், அந்த திஸ்பூர் குவஹாத்தியில் ஒரு பகுதி, சென்னையில் எப்படி கோட்டை இருக்கோ அதுமாதிரி இந்த திஸ்பூர்) 7 மானிலங்களின் சகோதரி என்று அழைக்கப்படுகிறது. ஓரளவு சுமாரான வசதிகள் கொண்டஒரு நகரம். இந்த நகரைச்சுற்றிப்பார்ப்போமேயானால், இந்த நகருக்கு நுழையும் முன்னரே நாம் கடந்து வருவது சராய்காட் என்னும் ஒரு 1.5 கிலோமீட்டர் நீளமுள்ள பாலம், இரும்பு கர்டர்களால் ஏறத்தாழ 25 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் முக்கிய ஒரே ஆண் நதி ஜீவநதியான பிரம்ம புத்திராவின் குறுக்கே கட்டப்பட்ட்து இது, இரு அடுக்குக்களைக்கொண்ட ஒரு அற்புதமான பாலம், மேலே பேருந்துகள், சிற்றுந்துகள் செல்லும், அதன் கீழே புகை வண்டி, அதன் கீழே படகு ஆற்றில், அற்புதமாக இருக்கும் அந்த ஆற்றைக்கடப்பது.

ஆற்றைக்கடந்து வந்ததும் நம்மை அஸ்ஸாமிற்குள் வரவேற்பது நிலாச்சல் மலைத்தொடர், அருமையாக இருக்கும் பார்க்க, அதன் மேல்தான் காமாக்கியா தேவி கோவில் எனும் ஓர் அற்புதமான சரித்திரப்புகழ், இதிகாசப்புகழ் வாய்ந்த கோவில், இது பற்றி வேறு ஒரு கட்டுரையில் சொல்கிறேன், இந்த காமாக்கியா தேவி கோவிலுக்கு மேல் புவனேஸ்வரி கோவில், அங்கு இருந்து பார்க்க, ஒரு புறம் அற்புதமான நகரத்தின் தோற்றம், மறுபுறம் அமைதியாக ஓடிக்கொண்டிர்ருக்கும் பிரம்மபுத்திரா நதி, அதில் ஓடிக்கொண்டிருக்கும் சிறிய மீன் பிடிப்படகுகள்....ஒஹ்ஹ் அப்படி ஒரு அற்புதமான காட்சி எங்குமே காணக்கிடைக்காது என்பது நிச்சயம், என் தோழி ஒருத்தி சொல்வாள், இயற்கை அழகு என்பது அஸ்ஸாமிற்கு இயற்கை தந்த கொடை என்று, உண்மைதான், வாழ்வில் அனைவருமே ஒருமுறை வந்து பார்த்துச்செல்ல வேண்டிய இடம்.

அங்கு செல்வதற்கு முன்பே, நுழைவு வாயிலில் ஜாலுக்பாரி (jalukbaari) என்று ஒரு சிறிய இடம், அங்கு இருந்து நான்கு வழிப்பாதை பிரிகிறது, ஒன்று விமான நிலையம் , குவஹாத்தி பல்கலைக்கழகம் நோக்கி செல்ல, மற்றது பாலாஜி மந்திர் என்று சொல்லப்படும் பெருமாள் கோவில் மற்றும் ஷில்லாங், சிரபுஞ்சி என்று சொல்லப்படும் உலகின் அதிக மழை பொழியும் ஊருக்குச் செல்லும் வழி, மற்ற ஒன்று ஊருக்குள் செல்லும் வழி, இன்னொன்று எங்கள் ஐஐடி க்கு செல்லும் வழி, அதே வழியில் மேற்கொண்டு சென்றால் ரங்கியா என்னும் ஊருக்கு சென்று அங்கு இருந்து இந்தியாவின் உட்பகுதிக்கு வரலாம், அருமையான ஒரு ஊர் இது. இந்த ஊரின் ஒரு அருமை என்ன என்றால், ஊரைச்சுற்றினாற்போல் ஆறு ஓடுவது ஒரு கண்கொள்ளாக் காட்சி... அப்படி ஒரு அமைதியான அருமையான நகரே குவஹாத்தி, பலர் கூறக்கேள்விப்படுவீர்கள் இங்கு தீவிரவாதம் அதிகம் என்று, என்னைப்பொருத்தவரை, அப்படி எதுவும் இங்கு தொல்லைகள் இல்லை என்றே சொல்வேன், 4 ஆண்டுகளாக இங்கு இருக்கும் அனுபவத்தில் சொல்கிறேன்.

இனி ஒவ்வொரு வழியாக இங்கு பார்க்கலாமா? முதல் வழி, ஜாலுக்பாரியிலிருந்து விமான நிலையம் செல்லும் வழியை எடுத்துக்கொள்வோம், அந்த பாதையில் நுழைந்ததும் முதலில் நம்மை வரவேற்பது குவஹாத்திப்பல்கலைக்கழகம் , 57 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. பல பாடப்பிரிவுகள் உள்ளன, அதனைக்கடந்து செல்ல நாம் காண்பது லங்கேஷ்வர் கோவில், அது தாண்டிச் செல்ல நாம் அடைவது LGB Airport (Lokamanya Gopinath Bordoloi) பண்ணாட்டு விமான நிலையம் என்று சொல்லும் அளவிற்கு இல்லை ஆயினும், பரவாயில்லை எனுமளவு இருக்கிறது. சரி , இந்த பக்கம் வருவோம், பாலாஜி மந்திர் என்று இங்கு இருக்கும் மக்களால் அழைக்கப்படும் பெருமாள் கோவில் செல்லும் வழி, அதன் ஆரம்பத்திலேயே அழகான ஒரு பூங்கா, செயற்கை குளம் ஒன்று சில பல சிறு படகுகளுடன் உங்களை வரவேற்கும், பல காதலர்களையும் பார்க்கலாம் அங்கு, தாண்டிச்செல்ல, truckker எனும் சிறு ஜீப் போன்ற வாகனத்தில் 5 ரூபாய்கள் கொடுத்தால் பெருமாள் கோவிலை 5 நிமிடத்தில் அடையலாம், அற்புதமாக ஒரு தலம், காஞ்சி மடத்தினரால் நிர்வகிக்கப்படும் இது தமிழர்களுக்கு ஒரு சந்திப்பு மையம், இதன் தலைவராக இந்த மானிலத்தின் முன்னாள் உயர் காவல் அதிகாரி (Ex DGP) திரு.சுப்பிரமணியம் அவர்கள் அன்போடு உங்களை வரவேற்றுப்பேசுவார், அந்த கோவிலில் மாலை 5 மணிக்கு கிடைக்கும் பிரசாதமும், லட்டு மற்றும் நெய் முறுக்கும் குவஹாத்தி முழுதும் பிரசித்தி பெற்றது.
வந்து சேர்ந்தபோது என்னை வரவேற்றது இங்கு இருந்த வெப்பமும், சுற்றுப்புற தட்பவெப்பத்தின் ஈரப்பதம் அதிகமாக இருந்தது சட்டையைக்கழற்ற வைத்தது. வெற்றுடம்புடன் சுத்தியது இன்றும் ஈரம்மாகவே நினைவிற்கு வருகிறது, ஏறத்தாழ 4 வருடங்களுக்குப்பின் இந்த வருடம் அதே அளவிற்கு ஈரப்பதம், வேர்த்துக்கொட்டும், சட்டை போட முடியாது.(தொடர்வேன் நாளை...)
type="text/javascript">&cmt=10&postid=112258340452178929&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

10 Comments:

Blogger மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

shiv,

increase the font size. it's quite impossible to read.

-Mathy

Thursday, July 28, 2005 2:04:00 PM

 
Blogger துளசி கோபால் said...

சிவா,
ஆரம்பமே அசத்தலா வந்திருக்கு. அங்கே ஒரு விஸிட் அடிக்கணும் என்ற ஆவலையும் தூண்டுது!!

சமீபத்துலேதான் ஒரு பதிவுலே ஹைதராபாத் லே தமிழ்நாட்டு உணவுவிடுதி ஒண்ணும் இல்லைன்னு படிச்சேன். உங்க ஊர்லே 3 இடமா? ஜமாய்ங்க!!!!

இங்கே நான் இருக்கற ஊர்லேயும் ஒண்ணே ஒண்ணுதான் இருக்கு. அதோட பேரு என்ன தெரியுமா? 'துளசி விலாஸ்'

அதே அதே. நம்ம வீடுதான்:-)

Thursday, July 28, 2005 2:15:00 PM

 
Blogger Dr.Srishiv said...

நன்றிகள் மதி
இப்பொழுது போதுமா என்று பாருங்களேன்? லார்ஜ் அளவு வைத்திருக்கிறேன் ஃபாண்ட் சைஸ், போதுமா???

Thursday, July 28, 2005 2:16:00 PM

 
Blogger Dr.Srishiv said...

நன்றிகள் துளசி அம்மா,
உங்களின் ஊக்கம்தான் என்னை இந்த கட்டுரை???? எழுதத்தூண்டியது, இன்னும் எழுதுவேன், இப்போ 3 மட்டும் இல்லைங்கம்மா, அது 4 வருஷத்திற்கு முந்திய நிலை, இப்போ ஒரு 10 உணவு விடுதிகளுக்கு மேல் இருக்கு குவஹாத்தில, எப்போ வேணா வாங்க, நல்ல சாப்பாடு சாப்பிடலாம் :)

Thursday, July 28, 2005 2:19:00 PM

 
Blogger மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

நன்றாக வந்திருக்கிறது ்ஷிவ்.

புகைப்படங்கள் இருந்தால் போடுங்கள். பொதுவாக வடகிழக்கு இந்தியாவைப்பற்றி அதிகம் யாரும் பேசுவதில்லை. பலருக்கும் தெரியாது. நீங்கள் இருக்கும் பிராந்தியத்தின் வரலாற்றையும் அடிக்கடி சொல்லுங்கள்.

[அம்பலம் அரட்டையில் சந்தித்தது நினைவிருக்கிறது. உ்ஷா வந்து ராகிங் செய்வார். ;) ]

-மதி

Thursday, July 28, 2005 2:30:00 PM

 
Blogger Dr.Srishiv said...

ஹா ஹா ஹா,
நன்றிகள் திரு.மதி, உஷா அக்காவோ யாரோ, இது என்னோட வலைப்பூவுங்கோ, யாரும் நம்ம ராகிங் பண்ண முடியாது, அதுக்குதான் இப்போ எல்லாம் நான் மரத்தடியிலேயே எழுதறது இல்லையே? :( எனக்குனு ஒரு வலைப்பூ, போதுமுங்கோ....வாரா வாரம் சுஜாதா சார் இருக்கார் பேசறதுக்கு....:)
ஷிவ்...

Thursday, July 28, 2005 2:43:00 PM

 
Blogger Simulation said...

Please also visit the following URL to know my Assam Anubavangal.

http://maraththadi.com/article.asp?id=2482

Simulation

Thursday, July 28, 2005 8:28:00 PM

 
Blogger Sud Gopal said...

நல்ல ஆரம்பம் ஷிவ்.
தொடர்ந்து கலக்குவீங்கன்னு எதிர்பார்க்கிறேன்.
அப்படியே அசாமுக்கு மத்த இந்தியப் பகுதிகளில் இருந்து இருக்கும் connectivity(by train/bus/air) பத்தி சொன்னீங்கன்னா கொஞ்சம் புண்ணியமாப் போகும்.

Thursday, July 28, 2005 9:51:00 PM

 
Blogger Ramya Nageswaran said...

வெளிநாடுகளுக்கு செல்வதே fashionable என்று பல இந்தியர்கள் நினைக்கிறார்கள் (என்னையும் சேர்த்துத்தான்!) இந்தியாவிலே இருக்கிற அற்புதங்களையேல்லாம் எப்ப பார்க்கப் போறோமோ என்று தோன்றும். நிச்சயம் அஸாமுக்கு வர வேண்டும் என்று நினைக்க வைக்கும் பதிவு.

Thursday, July 28, 2005 10:11:00 PM

 
Blogger Dr.Srishiv said...

சிமுலேஷன், சுதர்சன் மற்றும் ரம்யா, நன்றிகள், சிமுலேஷன், தங்கள் இணைப்பைப்பார்த்தேன், அருமை, சுதர்சன், இங்கு வர ரயில், பேருந்து, விமான வழித்தடங்கள் உள்ளன, அவை பற்றி அடுத்த பகுதியில் எழுதுகிறேன், விமானம் எனின் கொல்கத்தா வந்து அங்கிருந்து வரவேண்டும், தில்லியிலிருந்தும் நேரடி விமான சேவை உண்டு, இது ஒரு பண்ணாட்டு விமான முனையம், ரம்யா, அவசியம் வாங்க, ரொம்ப அருமையான இடம் இது பார்க்க, உயிரே படம் எடுத்தது இங்கதான்.....:)
ஸ்ரீ....

Thursday, July 28, 2005 11:31:00 PM

 

Post a Comment

<< Home

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது