கடந்துவந்த காவியம் - பகுதி 11.
கழுத்திலிடுவாய் மூன்று முடிச்சு
உன் காதிலிடுவேன் என் உயிர் மூச்சு,
காதலைச் சொல்ல கேட்டதற்கு
என் கண்மணியின் பதிலிது..
காதலைக் காசு கொடுத்து
வாங்க முடியாதே, அது
கடையிலும் கிடைக்காது...
காதலியர் கடைக்கண் காட்டிவிட்டால்
காளையர்க்கு மாமலையும் ஓர்க்கடுகாம்,
எத்துனை உணர்ந்து சொல்லி இருக்கிறார்கள்?
என்னவோ ஒரு சிறு பிணக்கு
அன்று அஷ்டமத்தில் சனி எனக்கு,
ஏனடி என் கடவுச்சொல்லைத்தந்தேன்?
என் மனதில் கள்ளம் ஏதுமில்லை என்றுதானே?
ஏன் என்னை சந்தேகித்தாய்?
இன்று சவமாய் நான்....
இருப்பினும் இறக்கவில்லை கண்மணி
நான் இறக்க நீ என் செய்வாய்?
நாகம் போல சீறினாலும் என்
நல்விளக்கல்லவா நீ?
நலம் பாடுவேன் நாயகியே,
எத்தனை முறைகள் சத்தியம் செய்ய?
எவர்மேல் நான் சத்தியமிட?
உனையன்றி என் உளத்தில்
ஒருவருக்கும் இடமில்லையென?
காத்திருக்கிறேன் கண்மனி
கேட்கிறதா என் காலடி???? type="text/javascript">&cmt=0&postid=112272787062259664&blogurl=http://srishiv.blogspot.com/">
0 Comments:
Post a Comment
<< Home