பிரிவு என்பதே உறவுக்காகத்தான்
பிரிவு என்பதே உறவுக்காகத்தான்
முழுமதி வானில்தோன்றி மறைந்து
முதல் கதிர் என் கண்ணை தாக்கும்
உறங்கினாலும் உறங்காத உன் நினைவுகள்
உச்சந்தலையில் சிலிர் என்ற சிலிர்ப்பொடு
இரங்கும் முதல் துளி மழை போல்
என்றோ நீ வாசிதத அந்த கவிதை வரிகள்
தமிழ்தாய் வாழ்த்தாய் காதுகளில் ஒலிக்க
அன்றைய பொழுதை துவக்குவேன்
அகம் நிறைஉன் முகத்தோடு...
ஏன் இந்த மூன்று மாதத்தை
மூன்று மாதம் என்று நினைக்கிறாய்?
வெறும் 90 நாட்கள் என்று எடுத்துக்கொள்
90 நொடிகளாய் கரைந்துவிடுமே இந்த நாட்கள்
என்று நீ அன்று கூறியது
எனக்குநினைவுபடுத்தியது ஒரு வாசகத்தைதான்
பிரிவு என்பதே உறவுக்காகத்தான்
இந்த பிரிவும் நம்மை வலுவாக்கவே.
உனக்குத்தெரியுமா?
என் வீட்டில் நாட்காட்டிக்கு அருகே
எனக்காய் ஒரு நாட்காட்டி....
அதில் மாதத்திற்கு 30 நாட்களும் இல்லை
வருடத்திற்கு 365 நாட்களும் இல்லை
மொத்தம் தொன்னூறே நாட்கள்
ஒவ்வொரு நாளும் குறைவது
ஓராண்டுகுறைவது போல்?
உன் குரல் கேட்குமா என்று
என் தொலைபேசியை கேட்ட நாட்கள் எததனை?
உன் அஞசல் கானாமல் என்
மின்னஞ்சல் பெட்டியைஏக்கத்துடன்
மூடிய நாட்கள் எத்தனை?
ஆயிரம் இருப்பினும் இந்த
பிரிவு என்பதும் உறவுக்காகத்தானே??? type="text/javascript">&cmt=3&postid=112324521408423869&blogurl=http://srishiv.blogspot.com/">
3 Comments:
இந்த கவிதை நான் தினம் ஒரு கவிதை இணையக்குழுவில் இருந்தபோது, அதில் வந்த ஒரு கவிதைப்போட்டிக்காக எழுதி, அனுப்பாமல் நானே வைத்துக்கொண்டது...
ஸ்ரீஷிவ்..
Saturday, August 06, 2005 2:04:00 AM
இதைப் படித்த போது இயக்குனர் கதிர் சொன்ன அவரால் போஸ்ட் செய்யப்படாத காதல் கடிதங்கள் தான் நினைவுக்கு வருகிறது.
"மேகத்தில் ஒன்றாய் நின்றோமே அன்பே...
மழை நீராய் சிதறிப் போகின்றோம் அன்பே...
பிரிவென்பதால் நெஞ்சிலே பாரமில்லை
மழையென்பது நீருக்கு மரணமில்லை"
Monday, August 22, 2005 4:50:00 AM
நன்றிகள் திரு.சுதர்சன் மற்றும் பாலாஜி,
என்னை உழுதால் வாழ்வு முனைபடும் என்றுரைத்த தோழா, மிக்க நன்றிகளடா...:) பிரிவென்றால் நெஞ்சிலே பாரமில்லை மழை என்பது நீருக்கு மரணமில்லை என்று தட்டிக்கொடுத்தமைக்கும் நன்றிகள்..:)
ஸ்ரீஷிவ்...:)
Friday, November 18, 2005 2:14:00 AM
Post a Comment
<< Home