என் இனிய அஸ்ஸாம் - பகுதி 4.
இங்கு இடதுபுறம் இருப்பது பிரம்மபுத்திரா நதி ஒரு அழகிய மாலை நேரம்...வலதுபுறம் இருப்பது பாலாஜி கோவில் எனும் பெருமாள் கோவில்.....ஹ்ம்ம்...எந்த இடத்தில் விட்டுச்சென்றேன்??? ஜேபி'ஸ் ரெஸ்டாரெண்ட்டில்தானே? சரி சரி எல்லோரும் பன்னீர் பட்டர் மசால் தோசை 48 ரூபாய் கொடுத்து ஆளுக்கு ஒன்னு வாங்கி சாப்பிட்டீங்களா? நல்லது...அப்படியே வெளிய வாங்க, இப்போ நீங்க பார்க்கறது ஃபேன்சிபஜார் பகுதி. இங்க குவஹாத்தில கொஞ்சம் நெருக்கடியான பகுதி இது..இங்க இருந்து கொஞ்சம் அப்படியே மேல வந்தீங்கன்னா சுக்ரேஷ்வர் மந்திர் (சுக்லேஷ்வர் மந்திர் அப்படினும் சொல்லறாங்க) இது ஒரு சிவாலயம், இந்த மாசம் (ஆகஸ்ட்) இங்க ரொம்ப விசேஷம், திங்கள் , வியாழன் தினங்களில் ஃபோல்பம் என்று ஒரு நிகழ்ச்சி, போன வாரம் நான் மேல் அஸ்ஸாம் (upper assam)போயிட்டு விடியற்காலம் வந்து இறங்கி எங்க ஐஐடி பஸ் பிடிக்கறதுக்கு வரேன், ஒரே கூட்டம், இங்க பேன்சி பஜார்ல இருந்து, ஒரு 15 கிலோமீட்டர் தொலைவில் வசிஷ்டா என்று ஒரு இடம் உண்டு, அங்கு வசிஷ்டமாமுனி அந்த காலத்தில் வாழ்ந்து தவம் செய்ததாக ஒரு நம்பிக்கை, இங்கு ஒரு திரிவேணி ஓடை இருக்கிறது.
அந்த ஓடையில் கங்கா, யமுனா, சரஸ்வதி மூன்று நதிகளும் சங்கமித்து தரைக்கு வருவதாக ஐதீகம், அந்த ஓடையிலிருந்து நீர் முகர்ந்துகொண்டு வந்து, இங்கு சுக்ரேஷ்வர் கோவிலின் பின்புறமிருக்கும் பிரம்மபுத்திராவில் கலப்பார்கள், நதிகளின் சங்கமமே இதன் தத்துவம், நம் மானிலங்களில் மக்கள் அடித்துக்கொண்டு செய்ய நினைப்பதை, இங்கு சாதாரண பாமரன் கூட செய்ய நினைக்கின்றான். பாருங்கள்.
சரி , அது தாண்டி வந்தால் பான்பஜார் எனும் மிக முக்கியமான ஒரு மார்க்கெட் பகுதி, அதன் ஆரம்பமாக பானி டாங்கி எனும் தண்ணீர் தொட்டி நிறுத்தம். இங்கு இறங்கி நேரே சென்றால் லாக்டோக்கியா, இங்குதான் எங்கள் ஐஐடியின் நகர அலுவலகம் உள்ளது, இங்கிருந்தே நாங்கள் எங்கள் கல்வி நிலையத்திற்கு வர பேருந்து பிடிக்கவேண்டும், அதை விட்டால் வேறு பேருந்துகள் கிடையாது இந்த ஊரில்...பாருங்கள், இதே நம்ம சென்னை ஐஐடி அப்படினா 1000 பஸ், இங்க வெறும் ஐஐடி பேருந்து மட்டுமே ஐயா.....ஹ்ம்ம்ம்...அங்க இருந்து 10 நிமிட நடை பயணம் ரயிலடி, ரயிலடியின் பின்புறமே பேருந்து நிலையம். அங்கிருப்பது பால்டன் பஜார். அங்கு ஒரு தென்னிந்திய உணவகம் கேரளா பவன் என்று இருக்கிறது, உணவு சற்று விலை அதிகம்தான், அதைவிட சற்று தள்ளி வந்தால் ஒரு அருமையான உட்லேண்ட்ஸ் உணவகம், முதல்மாடியில் இருக்கிறது, அற்புதமான சைவ உணவு கிடைக்கும், மீன் மற்றும் கோழி வேண்டுமாயின் கேரளாபவனிலேயே சாப்பிடலாம்....
ஹ்ம்ம்ம்...அது கடந்துவரின் உள்ளுபாரி , அதைத்தாண்டி வரின், கணேஷ்குரி, பெரிய ஒரு பிள்ளையார் கோவில், அதைத்தாண்டி வரின் பங்காகர் எனும் ஒரு இடம், அரசு அலுவலகங்கள் அதீகம் இருக்குமிடம், மேலும் குவஹாத்தி மருத்துவக்கல்லூரி, மருத்துவமனை உள்ளது இங்கு, இதைத்தாண்டி வரின் டவுந்தவுன்(downtown)மருத்துவமனை, ஒரு நல்ல மருத்துவமனை, அதனையும் கடந்து வரின், அஸ்ஸாமின் தலைநகர் என்று நாம் புத்தகங்களில் படித்த திஸ்பூர்...அங்குதான் நம்ம ஊர் கோட்டை மாதிரி தலைமைச்செயலகம் உள்ளது.
இதனைக் கடந்து செல்லுங்கால் நாம் அஸ்ஸாமின் எல்லைக்கு வருகிறோம், கானாபாரா என்னும் ஒரு சிறிய கிராமமே அஸ்ஸாமின் எல்லை, மேகாலயா மானிலத்தின் நுழைவுவாயில், நம் அண்டை மாநிலமாகிய பாண்டிச்சேரி போல ஒரு யூனியன் டெரிட்டரி, சரக்கு ;) சகாயமாகக்கிடைக்கும்...அஸ்ஸாம் எல்லையான கானாபாராவிலும் விலை குறைவாகவே கிடைக்கும் என்று கேள்வி ;). மேகாலயாவில்தான் ஷில்லாங் எனும் கோடைவாசஸ்தலமும் சேராபுஞ்சி எனும் சிரபுஞ்சி (உலகிலேயே அதிக மழை பொழியும் இடம், அந்த இடம் பற்றி அடுத்துவரும் பகுதிகளில் பார்க்கலாம், ஒரு தகவல் மட்டும் தருகிறேன், சேரா+புஞ்சி என்றால் ஒன்றுக்கும் உதவாத நிலம் என்று பொருள்.
சரி, இந்த பக்கம் வருவோமா? ரயில் நிலையத்தில் இருந்து இந்தப்பக்கம் வந்தால் உயர்நீதி மன்றம், அதன் அருகில் திகாலி புக்கூரி எனும் ஒரு அருமையான குளமும் பூங்காவும், இந்த குளத்தில் படகுகள் விடலாம், காலால் மிதித்து இருவர், நால்வர் என போகும் படகுகள், நன்றாக இருக்கும். குளம் என்று சொல்வதைவிட செயற்கை ஏரி என்றே சொல்லலாம், அதன் கரைகளில் அருமையாக திண்டுகள் போட்டு வைத்திருப்பார்கள் அருமையாக இருக்கும். ரயிலடியிலிருந்து நேராக வந்தால் மேகதூத் பவன் எனும் தலைமை அஞ்சல் நிலையம். அது கடந்து வரின் எதிரிலேயே பாரத மானில வங்கியின் மாநில தலைமை அலுவலகம் (State Bank of India- Regional zonal office). அது தாண்டி வரின், நேரு பார்க் எனும் ஹெரிடேஜ் பார்க், அஸ்ஸாமின் பழங்குடிகள் பற்றிய விளக்கப்பூங்கா, அற்புதமாக இருக்கும், அதுதாண்டி வரின், மியூசியம் எனும் அருங்காட்சியகம், அஸ்ஸாமின் பழைய கற்காலா நாகரிகங்களைப்பதிய வைத்திருக்கிறார்கள்...
தாண்டி வாருங்கள், நூலகம், ரிசர்வ் வங்கி, அம்பாரி , அடுத்து சில்புகுரி (புகுரி என்றால் குளம் என்று அர்த்தமாம் அஸ்ஸாமிய மொழியில், இங்கும் ஒரு குளம் உள்ளது, நம்ம மைலாப்பூர் குளம் போல) அங்கிருந்து மேலே சென்றால் ஒரு சிறு குன்றின்மேல் காந்தி மண்டபம் உள்ளது. இந்தப்புறம் வரின், சந்த்மாரி, ஒரு பெரிய சிற்றூர், அடுத்து நூண்மாட்டி, இங்குதான் அஸ்ஸாம் ரீபைனரீஸ் தன் கிளையை வைத்திருக்கிறது...இது தாண்டி சென்றால் மேலஸ்ஸாம் செல்லும் வழி...இதுவே குவஹாத்தி என்று சொல்லமாட்டேன், இருப்பினும் இதுபோதும் ஆரம்பத்தில் வருபவர்களுக்கு, இந்த இடங்களை முதலில் பார்வையிடுங்கள்....என் அடுதத பகுதியில் , தின்சுகியா, மற்றும் துலியாஜன், டிக்பாய் எனும் எண்ணைச்சுரங்கங்கள் இருக்கும் மேல் அஸ்ஸாம் பற்றியும், அதனைத்தொடர்ந்து அருகமைந்த மானிலங்களாம் மேகாலயா, மணிப்பூர், நாகலாந்து, சிக்கிம், அருணாச்சலப்பிரதேசம் போன்றவற்றைப்பார்ப்போமா? ஒரு சுவாரசியமான விஷயம், நாகாலாந்தின் நாய்க்கறி ரொம்ப சுவையான ஒரு உணவாம், அதுபற்றியும் எழுதுவேன்.....தங்கள் பின்னூட்டங்களையும் கருத்துக்களையும் தொடர்ந்தே......
ஸ்ரீஷிவ்....
type="text/javascript">&cmt=1&postid=112387500530247779&blogurl=http://srishiv.blogspot.com/">
1 Comments:
என்ன நாய்க்கறி பற்றி அறிந்துகொள்ள யாருக்கும் ஆவல் இல்லை என எண்ணுகிறேன், உற்சாகமூட்ட ஒரு பின்ன்னூட்டம் கூட இல்லையே....பரவாயில்லை, துளசி அம்மா சொன்னதுபோல, நான் ஒரு பெரிய எழுத்தாளன் ஆகும்போது என் எழுத்துக்களைத் தேடிப்படிப்பீர்கள் அல்லவா? அப்பொழுது படிக்க இப்பொழுதே எழுதுகிறேன்...
பாசமுடன்,
ஸ்ரீஷிவ்...:)
Saturday, August 13, 2005 11:13:00 AM
Post a Comment
<< Home