வெண்மை என்பதே உண்மை...
வெளிச்சமே வாழ்வு
வெள்ளையே நிறம்
கருமை என்பது வெறுமை
வெண்மை என்பதே உண்மை.
தளிர்நிலா வானில்
தவழ்ந்து வருதல் வெண்மை,
வாய்ப்பல் தெரிய குழந்தை
வழியச்சிரிப்பது வெண்மை.
சூரியன் அளிக்கும் வெளிச்சமில்லையேல்
அஸ்தமிக்குமே இக்குவலையம்?
பயிர்கள் பச்சயத்தை எங்கே தேட?
வெளிச்சமே உண்மை,
அதுவே வெண்மை, மென்மை, மேன்மை..
வெளிச்சம் இருப்பதால் தானே
இருள் ஒன்று இருப்பது தெரிகிறது?
பகலொன்றில் தானே இரவொன்றின்
இன்பம் புரிகிறது? பகலின்றிப்போனால்?
பரவசம் இல்லையே?
வெளிச்சத்தில் இருக்கும்
வெள்ளைப் பணத்திற்குத்தான்
என்றுமே மரியாதை ஐயா,
இருட்டில் இருக்கும் கருப்பு
பணத்திற்கு பலம் இல்லையே என்றும்?
வெள்ளை மனம் உள்ளவனையே
வெளிச்சம் உள்ளவனையே
உதாரணமாய் அளிக்கிறோமே?
இருளோடி இருக்கும் பாதையில் தானே
இன்னல்கள் அதிகம் என்றும்?
கயவன் வருவானோ?
காவலன் வருவானோ?;)
கருப்பு வருமோ?
காற்று வருமோ என்ற பயம்
வெளிச்சத்தில் இல்லையே என்றூம்?
வெள்ளை மனம் உள்ளவன் என்றே
வெளிப்படையாக இயம்புவரே பெரியோர்?
வெளிச்சமே விவேகம் ஐயா,
இருட்டு என்றும் நம்
மனதின் திருட்டே.....:)
பிரியங்களுடன்,
ஸ்ரீஷிவ்... type="text/javascript">&cmt=1&postid=112474845713461433&blogurl=http://srishiv.blogspot.com/">
1 Comments:
நல்ல கேள்வி பாலா,
ஆனால் இன்று பலர் அந்த பழமையிலிருந்து மீண்டாயிற்றே? வெள்ளைப்புடவைகளுக்கு விடுதலை கொடுத்து பல ஆண்டுகள் ஆகின்றன நண்பா :) இப்போ எல்லாம் கலர் ஜீன்ஸ் தான் ...:)அதுவும் இரண்டாம் திருமணம் என்பது இன்று சகஜமான ஒன்றுடா :)
ஸ்ரீஷிவ..:)
Thursday, November 17, 2005 10:22:00 AM
Post a Comment
<< Home