என் இனிய அஸ்ஸாம் - பகுதி 5
வணக்கம் தோழர்களே, தோழியரே
வாழிய நலம், நீண்ட நாட்களூக்குப்பின் மீண்டும் என் இனிய அஸ்ஸாமுடன் உங்களைச்சந்திப்பதில் சந்தோசம், சரி, போன முறை எந்த இடத்தில் நிறுத்தினோம்? நாகாலாந்து நாய்க்கறி , சரியா? உங்களில் பெரும்பாலோருக்கு, நாகாலாந்து மானிலத்தில் மனிதர்கள் நாய்க்கறி சாப்பிடுவதுதான் தெரிந்திருக்கும், ஆனால் நாய்க்கறியை எந்த எந்த வித்த்தில் சாப்பிடுகிறார்கள் என்று பலருக்குத்தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. அது பற்றி இந்த அத்தியாயத்தில் சொல்லலாம் என்று நினைக்கின்றேன்..
அதற்கு முன்பு, அஸ்ஸாமில் நானிருக்கும் குவஹாத்தியில் இருக்கும் இரண்டு தேவாலயங்களின் சில புகைப்படங்களையும் அவற்றின் பழமையையும் இங்கு சொல்ல ஆசைப்படுகிறேன், நீங்கள் இங்கே காணும் தேவாலயம் கிட்டத்தட்ட 138 ஆண்டுகள் பழமை வாய்ந்தது, christians of north India ( CNI) என்னும் அமைப்பினரால் கட்டப்பட்டது. மிக அருமையான ஒரு வேலைப்பாடமைந்த தேவாலயம் இது, இது குவஹாத்தியின் மையப்பகுதியான பான் பஜார் அருகிலுள்ள நேரு பூங்கா எனும் பூர்வீகப்பூங்கா (heritage park) அருகில் உள்ளது. நேரு பூங்காவும் ஒரு அருமையான இடம், அங்கு அஸ்ஸாமின் பழங்குடிகள் பற்றிய ஒலி ஒளிக்காட்சி மாலைவேளைகளில் நடைபெறும். அஸ்ஸாமின் பாரம்பரிய பழங்குடிகள் பற்றிய சிலைகள் அழகாக வைக்கப்பட்டிருக்கின்றன. அங்கு நின்று புகைப்படம் கூட எடுத்துக்கொள்ளலாம், நுழைவுச்சீட்டு 10 ரூபாய்கள் மட்டுமே. இங்கும் அதிக அளவு இளைஞர்கள் கூட்டம் பார்க்கலாம். அதன் அருகிலேதான் இந்த தேவாலயம் இருக்கின்றது.கீழே இருக்கும் தேவாலயம் தான் அது, அருகில் நான் :).
அதே தேவாலயத்தில் போன கிருஸ்துமஸ்ஸின் போது எடுத்த இன்னொரு படம் இது கீழே உள்ளது.
அடுத்து இருக்கும் மற்றுமொரு தேவாலயம் இந்த நூற்றாண்டில் கட்டப்பட்டது, டேனிஷ் மிஷன் அறக்கட்டளையால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது. இது ஒரு குழந்தை யேசு ஆலயம், அருமையாகக்கட்டப்பட்டிருக்கின்றது, இதுவும் பான் பசார் நடுவிலேயே இருக்கின்ற ஒரு தேவாலயமே . நல்லமுறையில் இதுவும் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. ஒரு பள்ளியையும் இந்த தேவாலயம் நிர்வகித்து வருகின்றது, நல்ல தேர்வு முடிவுகள் தரும் பள்ளி. ஒரு பெரிய ஆடிட்டோரியமும் உள்ளது இங்கு. அருமையான பள்ளி , அங்கும் கிருஸ்துமஸ் நிகழ்ச்சியில் எடுத்தப்புகைப்படமே இது. மிகவும் மன உளைச்சல் இருந்தால் நான் இந்த தேவாலயத்திற்கும் நம் பாலாஜி கோவிலுக்கும்தான் செல்வேன், மனம் மிகவும் லேசாகிவிடும்.கீழே உள்ள படம்தான் அந்த தேவாலயம்.
சரி சரி, நம்ம நாய்க்கறி சமாச்சாரத்திற்கு வருவோம், நாய்க்கறி மூன்று வகைப்படும், ஒன்று : நாயை அப்படியே அடிச்சி , கறி சமைச்சி சாப்பிடறது. இரண்டு : நாயை அடிச்சி, அதோட இரை குடலை வெளியே எடுத்து அல்லது அதன் ஆசன வாயில் அரிசியை நன்கு துருத்து அந்த நாயை அப்படியே நெருப்பில் வாட்டி, அதில் வெந்துபோகும் அந்த அரிசியை எடுத்து, அதனுடன் அப்படியே அந்த நாயையும் துண்டு துண்டாக வெட்டி சாப்பிடுவது, மூன்று : இது கொஞ்சம் விசேஷமானது, மனதைரியம் இல்லாதவர்கள் இதற்கு மேல் படிக்க வேண்டாம் :) நாயைப்பிடித்து, ஒரு கம்பியால் அடித்துக்கொன்று ஒரு சிமெண்ட் தொட்டியில் போட்டு அதன் மேல் ஒரு வேதிப்பொடியைத்தூவி விடுவர், வேதிப்பொடியின் காரணமாக நாய் வேகமாகப்புழுக்க ஆரம்பிக்கும். புழுக்க ஆரம்பிக்கும் நாயில் இருந்து பல ஆயிரம் புழுக்கள் வெளியே வந்தாலும் அந்த புழுக்கள் மாமிச பட்சினிகள் ஆதலால், ஒன்றை ஒன்று பிடித்து உண்டு ஒரு பெரிய புழு கடைசியில் மீதம் நிற்கும். அந்தப்புழுவை எடுத்து வெட்டி கறி போட்டு எடைக்கு விற்பார்கள், ஒரு கிலோ 500 ரூபாயில் இருந்து 1500 ரூபாய் வரை விற்கும் அது, உண்ண மிகவும் ருசியாக நெய் வடிய அற்புதமாக இருக்கும் என்று கேள்வி ;) அடுத்த பகுதியில் அங்கு சாப்பிடும் பாம்பு உணவு பற்றி எழுதுகின்றேன்.. இந்த வாரத்திற்கு இது போதும் என்றே நினைக்கின்றேன்...:)
பிரியமுடன்,
ஸ்ரீஷிவ்....:) type="text/javascript">&cmt=0&postid=112992588635472507&blogurl=http://srishiv.blogspot.com/">
0 Comments:
Post a Comment
<< Home