காதல் வலை - பகுதி 1
இனிய நண்பர்களுக்கு வணக்கம், வாழிய நலம், புதியதாக ஒரு தொடர்கதை எழுதலாம் என ஒரு முயற்சி, வழக்கம் போல் படித்து தங்கள் கருத்துக்களை பகிர்ந்தால் மகிழ்வேன்.
ஸ்ரீஷிவ்..
"ஹாய் தேர்"
எல்லோரைப் போலவும், அவளிடமும் என்னுடைய உரையாடல் ஆரம்பமானது இப்படித்தான். வணக்கம், எப்படி இருக்கீங்க, என்ன பண்றீங்க, வழக்கமான வரிகள், இருப்பினும் அதில் ஏதோ ஒரு ஈர்ப்பு இருந்ததை அன்று நான் உணரவில்லை. மறுநாளும் அதே நேரம், அவள் வரவில்லை வலையில், ஏதோ சில வேறு மக்களோடு பேசிவிட்டு சகஜமாய் திரும்பினேன், என்னுடைய மின்னஞ்சலை அறைக்கு வந்து பார்த்ததும் மின்னதிர்ச்சி வாங்கினேன். அவளின் முதல் மடல்,
நவம்பர் 23, 2001, 7.20PM
பெறுநர் ஈஸ்வர்
அனுப்புனர் மாதவி கண்ணன்
ஹாய்,
நைஸ் டாக் வித் யூ, ஐ ஃபீல் சோ ஹாப்பி.
பை ஃபார் நவ்
பை
மாதவி. க
இதுதான் அந்த முதல் மடல், மின்னதிர்ச்சியுடனே சிறு மலர்ச்சி.
அந்த மடலில் எதுவும் வித்தியாசமாக இல்லை என்றாலும், ஏதோ ஒரு ஈர்ப்பு அந்த மடலில், அதன்பின்பு அவளுடைய மடல்கள் எனக்கு மழையாய் வர துவங்கினபோதும் மனதில் ஒரு சலனமும் இல்லை. பல பெண்களிடம் இதற்கு முன்பு பேசி இருக்கின்றேன். அவளுடைய அந்த மடல்கள் ஏதோ ஒரு நீண்ட நாள் பழகின ஒரு தோழமை. நட்பு தெரிந்தது எனக்கு, அவளிடம் எதையும் மறைக்க இல்லாமல் போனது எனக்கு அன்று. என்னுடைய பலநாள் தோழிகளிடம் பகிர்ந்து கொள்ளாத பல விஷயங்களை அவளிடம் பகிர்ந்து கொண்டேன். எங்கள் நட்பு அந்த எல்லையில் தொடர்ந்தது. என்னுடைய பல விஷயங்கள் அவளுக்கு தெரிந்ததுபோல், அவளுடைய விஷயங்களையும் என்னுடன் பகிர்ந்து கொள்வாள். ஒவ்வொரு வாரமும் வெள்ளி இரவு 9.45க்கு எங்களுடைய தொலைபேசி உரையாடல் தொடங்கி இரவு 10.30 வரையில்தொடரும். அந்த வாரத்திற்கான அத்துனை விஷயங்களையும் பேசி முடிப்போம். என்ன என்ன விஷயங்களையோ பேசிய நாங்கள். எங்களின் கடந்து வந்த காதல் பாதையை அலசியது...
“ஹாய், கல்யாணம் பத்தி நீ என்ன நினைக்கிற?”
“கல்யாணம், கசமுசா எல்லாத்திலையும் எனக்கு நம்பிக்கையில்லை ஈஸ்வர், இன்னிக்கு நாங்க தில்லை நடராஜர் கோவிலுக்கு போய் வந்தோம். அங்கே சுதா டான்ஸ் ரொம்ப நல்லா இருந்தது. ஓருத்தர் உன்னை மாதிரியே 60 வயசுல ஆட்டோகிராப் வாங்க வந்திருந்தார்.”
“என்னடி கிண்டலா?”
“இல்லையே, உனக்கு 60 வயசு தானே?”
“உங்க அப்பா வயசை நான் சொல்லலை”
"ஹேய் என்னோட பிக்சர் பார்த்து இருக்கியா?”
“இல்லையே?”
“போய் என்னோட வெப்சைட்டுல பாரு”
“உன்னோட வெப்சைட் என்ன?”
“அறிவுக்கொழுந்து, ஆன்லைனில் இவ்வளவு நாளா இருக்க, கண்டுபிடி பார்ப்போம்”
மறுநாள் அவளிடம் இருந்து ஒரு மின்னஞ்சலுடன் அவள் தந்தை 60ம் கல்யாணத்து புகைப்படம் வந்திருந்தது, அதில் இருப்பதில் அவள் யார்?
தொடர்வேன்...:) type="text/javascript">&cmt=0&postid=113372318597878944&blogurl=http://srishiv.blogspot.com/">
0 Comments:
Post a Comment
<< Home