ஜி ஆர் இ தேர்வு முறையில் மாற்றம்
ஜி.ஆர்.இ., தேர்வு முறையில் அடுத்த அக்டோபர் முதல் மாற்றம்
மும்பை: வெளிநாட்டில் மேற்படிப்பு படிக்க விரும்புபவர்கள் எழுத வேண்டிய ஜி.ஆர்.இ., தேர்வு முறையில் அடுத்த அக்டோபர் முதல் மாற்றம் கொண்டு வரப்படுகிறது.
வெளிநாட்டில் மேற்படிப்பு படிக்க விரும்புபவர்கள் இந்தியாவில் நடத்தப்படும் ஜி.ஆர்.இ., மற்றும் டோபல் தேர்வுகளில் பங்கேற்று தேர்ச்சி பெற வேண்டும். இதில், ஜி.ஆர்.இ., தேர்வு முறையில் அடுத்த அக்டோபர் முதல் மாற்றம் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு ஆண்டில் 29 முறை ஜி.ஆர்.இ., தேர்வு நடத்தப்படுகிறது. இதில் மாற்றம் ஏதும் இல்லை. தேர்வு எழுதும் நேரம் இரண்டரை மணி நேரத்தில் இருந்து நான்கு மணி நேரமாக உயர்த்தப்படுகிறது. பெரிய கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டிய முறை நாடு முழுவதும் ஒரே மாதிரியாகவே இருக்கும். 29 முறை ஜி.ஆர்.இ., தேர்வு நடத்தப்பட்டாலும் ஒவ்வொரு முறையும் கேள்வித்தாள் மாறுபடும்.
ஜி.ஆர்.இ., தேர்வு சொல்லாட்சி திறன் அறியும் முறை (வெர்பல் ரீசனிங்), மதிப்பறியும் திறன் அறியும் முறை (குவான்டிடேட்டிவ் ரீசனிங்), ஆய்வு திறன் அறியும் முறை (அனலிடிக்கல் ரீசனிங்) என மூன்று பிரிவாக நடத்தப்பட்டு வருகிறது. இதில், வெர்பல் ரீசனிங் பிரிவில் தற்போது 30 நிமிடம் தரப்படுகிறது. வரும் காலத்தில் இரண்டு 40 நிமிட பிரிவாக மாற்றப்படுகிறது. குவான்டிடேட்டிவ் ரீசனிங் பிரிவில் தற்போது 45 நிமிடம் தரப்படுகிறது. வரும் காலத்தில் இரண்டு 40 நிமிட பிரிவாக மாற்றப்படுகிறது. கால்குலேட்டர் பயன்படுத்த அனுமதிக்கப்படும். அனலிடிக்கல் ரீசனிங் பிரிவிலும் மாற்றம் ஏற்படுத்தப்படுகிறது. பல்வேறு விஷயங்களை நினைவில் கொண்டு இந்த தேர்வை சந்திக்கும் நிலை தற்போது உள்ளது. இதை தவிர்த்து உண்மையான ஆய்வு திறனை அறியும் வகையில் கேள்விகள் கேட்கப்படும்.
நன்றி: தினமலர்- 01-12-05 type="text/javascript">&cmt=0&postid=113342311810648805&blogurl=http://srishiv.blogspot.com/">
0 Comments:
Post a Comment
<< Home