காதல் வலை - பகுதி 4
ஆமாம், இணையத்தினால் கிடைத்த இன்ப அதிர்ச்சி என்றே அதனை சொல்லலாம். அதுவரையில் ஆராய்ச்சியில் ஆர்வம் இல்லாத எனக்கு, அன்று ஏதோ ஒரு இணையத்தளத்தில் தேடியதில் வேறொரு இணையம் கிடைத்தது அது, AIIMS, ஆல் இண்டியன் இன்ஸ்டிடுட் ஆப் மெடிக்கல் சயின்ஸஸ், கடைசியில் அந்த ஆராய்ச்சி படிப்புக்கு விண்ணப்பத்தினை இறக்கம் செய்து என்னுடைய கல்லூரியிலேயே பிரின்டவுட் எடுத்து அப்ளை செய்தேன்.
நேர்க்காணல் அழைப்பு வந்த பின்புதான் அந்த தூரம் கண்ணிற்கு பட்டது, அவளை பிரிந்து, அம்மா, அப்பாவை, அக்கா, தங்கையை, அண்ணா, தம்பியை பிரிந்து மிகவும் ஒரு கடினமான விஷயம் கூட, சென்னை எங்கே, புதுடெல்லி எங்கே? இருந்தும், வாழ்கையில முன்னேறனும்னா சில சமயம் சில காலத்துக்கு வீட்டைவிட்டு விலகி இருப்பதில் தவறு இல்லை, அப்பாகிட்ட சொல்லி டிரெயின் டிக்கெட் புக் பண்ணசொன்னேன், அம்மா அழுதார்கள், அப்பாவும் சிறிது தயக்கம் காட்டினார். நான் என்ன காட்டிற்கா போகிறேன்? இதோ இருக்கிற டெல்லி, பிளைட் பிடிச்சா இரண்டரை மணிநேரத்தில் இருக்கிறது தானே?
டெல்லி என்னை அன்போடு வரவேற்றது, அந்த வெயிலிலும் எனக்கு குளிரியது. புது இடம், முதன் முதலில் தனியாக வருகின்றேன், என்ன எப்படி? ஒன்றும் பரியவில்லை, மனசு முழுக்க கனவுகளோடு வந்து இருக்கேன், எப்படியும் இங்கே இருந்து போகறப்ப Ph.D பட்டம் வாங்கிட்டு தான் போகணும். மனசு முழுக்க கனவுகளோடு வந்தவனுக்கு இங்கும் இன்ப அதிர்ச்சி, நேர்முக தேர்வு அட்டெண்ட் பண்ணிய 150 பேர்ல 4 ஸீட், 2 பேர் தமிழ்நாட்டுக்காரங்க, அதுல நானும் ஒருவன். அட்மிஷன் கார்ட் வாங்கிட்டு, அம்மாவுக்கு போன் பண்ண, அவங்க என்னடா கிடைக்கலைதானே? அப்படின்னு சந்தோஷமா கேட்கிறாங்க, கிடைச்ச செய்தியை சோகமா சொல்லிட்டு, டிரெயின் பிடிச்சு திரும்ப தமிழ்நாடு திரும்பினேன்.
வேலையை அந்தக் கல்லூரியிலிருந்து ரிஸைன் பண்ணிட்டு, பிஎச்டி சேர்ந்தேன். வந்தவனுக்கு இங்க ஒரு புது அனுபவம், 24 மணிநேர இன்டர்நெட், எல்லா பெண்ணு பையன்கள் சரி சமமாய் பழக... மீண்டும் அந்த இணைய தளத்திற்குள் நுழைந்தேன், அங்குதான் அந்த மாய வலை என்னை கட்டிப்போட காத்திருந்தது தெரியாமலே... அவளை சந்திக்கும்முன்புவரை, வாழ்வு அதன் வழியில் போய்க்கொண்டிருந்தது... அவளை சந்தித்த அந்த முதல் நாள் தான் என்னுடைய முதல் பகுதி நான் எழுதியது. அடுத்து இதற்கு முன்பு ஒரு நிகழ்ச்சி மறந்துவிட்டேன். அது ஒரு முக்கியமான போன் கால் என்றே சொல்லலாம், நான் ஊருக்கு கிளம்பிய அன்று இரவு 8.30க்கு வந்த அந்த தொலைபேசி மணி அழைப்பு என்னுடைய 12 வருட விரதத்துக்கு ஒரு வரமாய் அழைத்தது.
இரவு 8.30 மணி, ரெயிலுக்கு கிளம்புறதுக்கு பெட்டி, படுக்கைகளை தயார் செய்து கொண்டிருந்தவனை அழைத்தது அந்த தொலைபேசி அழைப்பு, யார் இந்த நேரத்தில? யாராவது பசங்களா இருக்கும். ஆல் த பெஸ்ட் அண்ட் ஹாப்பி ஜேர்னி சொல்ல போன் பண்ணுவாங்க என்று எடுத்த எனக்கு அது ஒரு புதிய குரல்.
“ஹுல்லோ, நான் ஸ்ரீனி பேசுறேன், ஈஸ்வர் இருக்கிறாரா?”
“நான் ஈஸ்வர்தான் பேசுறேன், நீ யாரு?”
“நான் தனத்தோட பிரதர் பேசுறேன்”
சில்லீர் என்று என்னுள் ஏதோ ஒன்று உடைந்தது போல உணர்வு.
“எந்த பிரதர்?”
“அவங்களோட கசின் நானு, ஈரோடுல இருந்து பேசுறேன்”
“என்ன விஷயம்?”
“இல்லை, அக்கா எப்பவும் உங்களை பத்தி என்கிட்ட சொல்லுவாங்க, உங்க போன் நம்பர் கூட அவங்க தான் கொடுத்தாங்க”
“நீங்க சொல்லுங்க?”
“நீங்க அவங்களை புரோபோஸ் பண்ணீங்க, அவங்கதான் பெரியப்பாவுக்கு பயந்துக்கிட்டு வேண்டாம்னு சொல்லிட்டாங்க, எல்லாம் சொல்லுவாங்க”
மனம் முழுக்க ஒரு பட்டாம்பூச்சி கூட்டம் பறந்தது போன்ற ஒரு உணர்வு.
“இப்ப என்ன சொல்றாங்க? என்னை லவ் பண்ணுறாங்களா?”
“அவங்க கிட்ட கேட்கலையே? இன்னிக்கு நீங்க ஊருக்கு போறீங்கன்னு சொன்னாங்க அதான் போன் பண்ணினேன்.”
மனம் முழுக்க மீண்டும் எதிர்பார்ப்புக்களுடன் கேட்டேன்.
“அவங்க கிட்ட கேட்டு சொல்றியா?”
“சரி, அவங்கள கேட்டுட்டு உங்களுக்கு ஒரு மணிநேரத்தில் போன் பண்ணுறேன்.”
“ஓகெ போன் பண்ணு, ஆனா இன்னும் ஒரு மணிநேரத்தில் கரெக்டா பண்ணிடுப்பா, நான் நைட் டிரெயினுக்கு ஊருக்குப்போறேன்”
சொன்னமாதிரியே ஒரு மணிநேரத்தில் அவனிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது,
தொடர்வேன்..... type="text/javascript">&cmt=6&postid=113389803503818852&blogurl=http://srishiv.blogspot.com/">
6 Comments:
நல்லாயிருக்கு ஸ்ரீஷிவ்
சன்,ஜெயா,விஜய்,ராஜ் எதுலயாவது உங்க கதைய சீரியல்
எடுக்க கேட்டிருக்காங்களா?
ஒத்துக்கப் போறீங்களா?
கேட்டா சரின்னு சொல்லிடுங்க:-)
///மனம் முழுக்க ஒரு பட்டாம்பூச்சி கூட்டம் பறந்தது போன்ற ஒரு உணர்வு.///
சரிதான்
நமக்கும் வளர்ச்சி தேவையா இருக்கில்ல
Tuesday, December 06, 2005 11:56:00 PM
என்ன பண்றது சாப்ட் டெஸ்டர்? சொந்தக்கதையே சீரியல் கணக்காப்போச்சி ;) இதுல எழுதுற கதையும் அப்படித்தானே வரும்? ஒரு உண்மை சொல்லவா? நான் தமிழ் சேனல்களில் சீரியல்கள் பார்த்து 5 வருஷம் ஆச்சு...இன்னும் சொல்லனும்னா டீவியே பார்க்கறதில்லைனு சொல்லலாம், வடநாட்டுக்கு வந்ததற்கு பிறகு தமிழ் எங்கே பார்க்கிறது? இதுல சீரியல் வேறயா? எல்லாம் சொந்த சரக்குத்தான் :)
ஸ்ரீஷிவ்...:)
Wednesday, December 07, 2005 5:17:00 AM
மதுமிதா
டீவில எல்லாம் நம்ம கதைய படிக்கிறாங்களானு தெரியலைங்க ;) கேட்டா கண்டிப்பா உங்கபேர் சொல்லித்தான் போடுவேன் சரியா? :)
ஸ்ரீஷிவ்...
Wednesday, December 07, 2005 5:18:00 AM
நன்றிகள் பல்லவி
இது சீரியல் இல்லீங்கோ, தெரிஞ்சவங்களோட சொந்தக்கதைய்ங்கோ....:)
ஸ்ரீஷிவ்..:)
Wednesday, December 07, 2005 10:04:00 PM
'தெரிஞ்சவங்க' கதை மாதிரி இல்லை ஸ்ரீஷிவ், உங்க கதை தானோன்னு எனக்கு தோணுது :)
Thursday, March 16, 2006 2:39:00 AM
அப்படி உங்களுக்குத்தோன்றினால் கதாசிரியர் அதற்குப்பொறுப்பல்ல....:)
Thursday, March 16, 2006 3:30:00 AM
Post a Comment
<< Home