இது ஒரு கருத்த இளைஞனின் வெளுத்த இதயப்பதிவுகள்...

Sunday, December 04, 2005

காதல் வலை - பகுதி2



“யேய் மாது, யாரு இதுல நீ?”

“ஓ என்னோட பிக்சர் இன்னும் அனுப்பலையா? நாளைக்கு அனுப்பி வைக்கிறேன்”

“ஹேய் ஈஷ், உன்னோட லவ் பத்தி சொல்லவே இல்லை?”

"ஆமாடா மாது, நான் ஒரு பெண்ணை லவ் பண்ணுறேன் அவள பத்தி நாளைக்கு சொல்றேன்.”

“யேய் யாரு அந்த பாக்கியசாலி?”

“அவ என்னோட கிளாஸ்மெட்... +1ம் +2வும் நாங்க இரண்டு பேரும் ஒன்னா படிச்சோம்,

அதுக்கு அப்புறமா நான் மெடிக்கல் வந்துட்டேன், அவ பெயில் ஆனதுக்கு அப்புறமா

அட்டெம்ப்ட் எக்ஸாம் எழுதி பாஸ் பண்ணி, கரெஸ்பாண்டண்ட்ல பிஏ, எம்ஏ பண்ணினா,

அப்புறம் ஒரு தனியார் பள்ளில டீச்சரா ஒர்க் பண்ணினா.”

“ஓ அப்படியா? இப்ப அவ என்ன பண்ணுறா? எப்பிடி இருக்கிறா? அவ கிட்ட நீ புரோபோஸ்

பண்ணினயா?”

“அவள் நல்லா இருக்கிறாள்னுதான் நினைக்கிறேன், அவ வீட்டுல தான் இருக்கிறா, இல்லை

இன்னும் புரோபோஸ் பண்ணலை. சொன்னா எங்க அவ மறுத்துடுவாலோன்னு பயமா இருக்கு,

அதனாலத்தான் இன்னும் சொல்லலை, உனக்கு ஒன்னு தெரியுமா மது? அவள நான் லவ்

பண்ண ஆரம்பிச்சதே ஒரு ஆக்ஸிடெண்ட்”

என்னுடைய நினைவுகள் 12 வருடங்களுக்கு முன்னால் சிறகடித்து பறந்தன.

அரசினர் மேல்நிலைப்பள்ளி, அரசங்குளம். 12 வகுப்பு கிளாஸ் ரூம், மதியம் மணி 1.45 , உணவு

இடைவேளைக்கு பிறகு, கிளாஸ் லீடர் என்ற முறையில் அட்டெண்டன்ஸ் எடுத்து வருவதற்கு

ஹெட்மாஸ்டர் ரூமிற்கு போவதற்கு வேகமாக ஓடியவனின் எதிரில் வந்தாள் அந்த தேவதை.

எதிர் பார்க்காத சந்திப்பு, படிக்கட்டு இறக்கத்தில் நான், அருகில் இருந்த குழாயில் தண்ணீர்

குடித்துவிட்டு படியேறிய அவள், சில செண்டிமீட்டர் இடைவெளி, கண்கள் சந்தித்த வேளையில்

சிந்திக்கவேயில்லை. தொலைத்தேன என் மனதை, சில நொடிகளுக்கு மட்டுமே அந்த கண்களின்

சந்திப்பு. காலம் முழுக்க வருமா என்ற ஏக்கம் என் கண்ணிலும் அவள் கண்ணிலும் கூட,

அதற்குள் வகுப்புக்குள் இருந்து ஓ வென கூச்சல்...

“மச்சான் பாரல(barell) உருட்டிட்டாண்டா. ஹிஹி “ அவள் பார்ப்பதற்கு கொஞ்சம் பருமனாகவே

இருப்பாள்.

அதற்குப்பின் அவளின் பின்னே சென்ற நாட்கள் பல, அவளுக்காகவே அவள் படித்த லேடீஸ்

டியூஷனில் சேர்ந்து முதல் ஆண் மாணவன் நானாகத்தான் இருக்க முடியும். விடியற்காலையில்

அண்ணணோட ஓசி பைக் எடுத்து கொண்டு போய் ஒரு குழந்தை மேல மோதாம சருக்கி

விழுந்து, எல்லாத்தை விட உச்சமாக அவளுக்கு பால் மற்றும் அசைவ உணவு பிடிக்காது

அப்படிங்கிறதால நான் 12 வருடமாக பால் மற்றும் அதைச்சார்ந்த எந்தப் பொருட்களும் மற்றும்

அசைவம் சாப்பிடுவது இல்லை.


அவளுக்கு பாலும் நான்-வெஜிடேரியனும் பிடிக்காதுங்கற விஷயமே, எனக்கு நாங்க டியூஷன்

கடைசி நாள்ல ஃபேர்வெல் பார்ட்டியில டியூஷன் சார் காபி குடிக்க சொன்னப்பத்தான் தெரியும்.

“தனா, காபி எடுத்துக்கோங்க.”

“வேண்டாம், நான் காபி சாப்பிட மாட்டேன், பால் சம்மந்தப்பட்ட எதுவும் சாப்பிட மாட்டேன்,

நான்-வெஜ்ஜூம் சாப்பிட மாட்டேன்”

அன்றுதான் நான் குடித்த கடைசி காபி, உங்களுக்கு தெரியுமா எங்கள் வீட்டில் கறவை மாடுகள்

உண்டு, தினமும் 7 லிட்டர் பால் கறக்கும் பசுக்கள், என்னுடைய அம்மா கூட கேட்பார்கள், “பால்

ஏண்டா உனக்கு பகை ஆச்சு?” அப்படின்னு.

அந்த கிளாஸில அந்த வயசுல, பன்னிரண்டாம் வகுப்புல ஆட்டோகிராஃப் வாங்கியவன் நான்

ஒருத்தனாகத்தான் இருக்க முடியும். எல்லோரும் போட்டு கொடுக்க, அவளிடமும் அந்த

நோட்டுப் புத்தகம் போனது. நோட்புக் என்றால் பெரிதாக ஆட்டோகிராஃப் நோட்புக்,ஆர்ச்சீஸில்

வாங்கியது இல்லை, அந்தப் புத்தகத்தை நானே தயாரித்தேன், பெரிய பேப்பர்களை வெட்டி

சின்னதாக மாற்றி பிறகு அந்த தாள்களை தைத்து உருவானது அது.

பல கையெழுத்துக்கள் அதில் இருந்தபோதும், அந்த கை எழுத்துக்கு மட்டுமே அதிக ஒளி

இருந்ததாக தெரிந்தது அன்று எனக்கு, ஓ அவள் எழுதியதை சொல்லவே இல்லை? அவள்

அந்தப் புத்தகத்தில்,

“த ட்ரு லவ் ஹேஸ் டு பேஸ் மெனி டிபிகல்டீஸ்”
என்றும் அன்புடன்
தனலெட்சுமி. எம்
தொடர்வேன் ....
type="text/javascript">&cmt=0&postid=113376224930661778&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

0 Comments:

Post a Comment

<< Home

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது