இது ஒரு கருத்த இளைஞனின் வெளுத்த இதயப்பதிவுகள்...

Monday, December 05, 2005

காதல் வலை - பகுதி 3



அவளின் அந்த ஆட்டோகிராப் என் மனதிலும் அப்படியே பதிந்து யாரும் அறியாமல்
இன்றும் என்னுடைய பர்ஸனல் பெட்டியில் இருக்கிறது. அதற்கு அப்புறம் நான் +2 பரிட்சையில் எங்க ஸ்கூல்லயே பர்ஸ்ட் மார்க் வாங்கி M.B.B.S போறதுக்கு கூட அவளே காரணம்னு சொல்லலாம், பள்ளியின் கடைசி நாட்களில் அவள் வந்து என்னிடம் சொன்னாள்,

“ஈஸ்வர், நீங்க 10த்ல நல்ல மார்க் வாங்கி இருக்கீங்க, உங்களோட +2 மார்க்ஸ் குறைகிறதுக்கு பொண்ணுங்க எல்லாம் சேர்ந்து நாங்க செய்த வேலை இது, நீங்க எனக்கு கெமிஸ்டிரி லேப் பைனல் எக்ஸாமில சால்ட் அனலைஸிஸ் சொல்லி கொடுத்தது என்னிக்கும் உறுத்திக்கிட்டேயிருக்கும். எனக்காக எவ்வளவோ செய்து இருக்கீங்க, நீங்க என்னால ஃபெயில் ஆவறத என்னால ஏத்துக்க முடியாது, என் பின்னால வராதீங்க”

இந்த வார்த்தைகள் என் மனதில் இடியாக இறங்கினாலும், உட்கார்ந்து படிக்க வைத்தது என்னுடைய அம்மா, அப்பா, அண்ணாவின் வார்த்தைகள், படிக்க, எனக்கு கிடைத்தது அருமையான மெடிக்கல் சீட், மருத்துவன் பட்டம், அவள் இரண்டு பாடங்களில் தோல்வி அடைந்ததால், பின்பு அஞ்சல் வழி கல்வியில் பிஏ, எம்ஏ படித்தவள், ஒரு பள்ளியில் டீச்சராக வேலை பண்ணிக்கொண்டே படித்தாள். நான் M.B.B.S செகண்ட் இயர் இடித்தபோது நடந்த ஒரு சம்பவம், ரொம்பவே என் மனதில் பதிந்துவிட்டது...

வழக்கம் போல அன்றும் எனக்கு நன்றாகவே பொழுது விடிந்தது, ஆனால் ஒரு ஆச்சர்யத்துடன். சூரியன் வந்து என்னை எழுப்புவதற்கு பதில் என்னோட அப்பா வந்து எழுப்பினார்.

“ஈஸ்வர், அம்மா கூட வந்து இருக்காங்க, அங்க கோவில்ல காத்துக்கிட்டிருக்காங்க, வாடா போலாம்”

நான் என்ன சொல்ல முடியும், எதற்காக, அப்பாவும் அம்மாவும் வந்திருக்காங்க, புரியலை எனக்கு, அம்மா கேட்குறாங்க, “என்னடா பண்ணுன நீ? ஏன் இப்பிடி பண்ணின?”

எங்க அப்பா “வீட்டுல இருக்குறவங்களுக்கு லெட்டர் போடு, பெரியப்பாவுக்கு லெட்டர் போடு, அத்தைக்கு லெட்டர் போடு, தாத்தாவுக்கு லெட்டர் போடு, ஏன்ப்பா வேண்டாதவங்களுக்கு லெட்டர் போட்ட? நீ நல்ல விதமாத்தான் லெட்டர் போட்டிருக்க, ஆனால் பார்க்கிறவங்க என்ன நினைப்பாங்க? அந்தப் பொண்ணுக்கு நாளைக்கு கல்யாணம் ஆகணும், ஊர்ல என்ன நினைப்பாங்க?”

அம்மா கடைசியாக எடுத்து போட்டாங்க அந்த வெடிகுண்டை, என்னோட லெட்டர், அந்த ஆட்டோகிராஃப் என்ன சொல்லுது அப்பிடிங்கிறதை பத்தி நான் விளக்கம் கேட்டு எழுதினதை எங்க அப்பாக்கிட்ட அந்த பிரின்ஸிபால் கொடுத்து இருக்கிறார். அதுவரை என்னோட அப்பா அந்த ஸ்கூல்ல ஒரு போர்டு ஆப் சேர்மென் அப்படிங்கிற விஷயம் எனக்குத்தெரியாது.

எங்க அம்மா கடைசியில சொன்னாங்க, “தம்பி, நீ படிச்சு முடிடா, இப்ப நீ உங்க அப்பா கால்ல நிக்கிற, உன்னோட சொந்த கால்ல நில்லு, அப்புறம் இந்த பெண்ணையே கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லு, நாங்க என்ன வேண்டாம்னா சொல்லப்போறோம்?”

எவ்வளவு சத்தியமான வார்த்தைகள்? வந்தேன் என்னுடைய படிப்புலகுடன், அவளை தவிர வேற எதுவும் நினைப்பில் இல்லாமல், படிப்பு மட்டுமே எண்ணமாய், அவளை வெல்வதே லட்சியமாய், படித்து மருத்துவர் பட்டம் வாங்கினேன். பட்ட மேற்படிப்புக்கு அப்ளை பண்ணினேன். கிடைத்தது, படிக்கும் போது பல பெண்கள் என்னுடன் படித்தாலும், என் மனதில் இருந்தது அவள் முகம், மேற்படிப்பும் முடிந்து, ஒரு அருமையான கல்லூரியில் விரிவுரையாளராக பணி, கூடவே, தனியாக மருத்துவராக பயிற்சியும், வாழ்க்கை நன்றாக ஓடிக்கொண்டிருந்த பொழுது தான் அந்த நிகழ்ச்சி. மீண்டும் என் வாழ்வில் ஒரு திருப்பம்... இணையத்தை பயன்படுத்தியதால் ஒரு இன்ப அதிர்ச்சி...
தொடர்வேன்....:)
type="text/javascript">&cmt=0&postid=113381237567067969&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

0 Comments:

Post a Comment

<< Home

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது