யாகவா, மெய்யாகவா?
அன்பு நண்பர்களுக்கு
வணக்கம், வாழிய நலம், திடீரென்று ஒரு விஷயம் ஞாபகம் வந்தது அதுதான் இந்தப்பதிவு, எத்தனைபேருக்கு இங்கே யாகவா முனிவரை ஞாபகம் இருக்கும் என்று எனக்குத்தெரியவில்லை, ஆனால் அவரும் இன்னொரு சாமியார் சிவசங்கர்பாபாவும் தொலைக்காட்சியில் அடித்துக்கொண்டது ஞாபகம் இருக்கலாம். அவர் கூறிய ஒரு ஸ்டேட்மெண்ட் இன்று உண்மையாகிவருகின்றதே???? யாரேனும் அதை யோசித்தீர்களா?
இந்தப்புகைப்படத்தைப்பாருங்கள், நினைவு வருகின்றதா??
இல்லை இப்போதாவது நினைவு வருகின்றதா?
என்ன? நினைவு இல்லையா? 2005ல் மவுண்ட் ரோடில் படகு விடுவார்கள் என்று சொன்னார், அன்று எல்லோரும் சிரித்தார்கள், என்ன இப்படி தமாஷ் பண்றார்னு, இன்னைக்கு உண்மையிலேயே மவுண்ட் ரோடில் படகு போகுதே? சற்று சிந்தித்துப்பாருங்கள், சில நேரங்களில் சில மனிதர்கள், அன்று வேடிக்கையாகத்தோன்றிய விசயம், இன்று உண்மையில் நடக்கையில், எதுவும் நடக்கும் இந்த மர்மதேசத்தில் என்றல்லவா தோன்றுகிறது? அவருக்கும் ஏதேனும் சக்தி இருந்திருக்கும் என்றே தோன்றுகின்றது...என்ன சொல்கின்றீர்கள்???
பிரியமுடன்,
ஸ்ரீஷிவ்...:) type="text/javascript">&cmt=1&postid=113379262995057034&blogurl=http://srishiv.blogspot.com/">
1 Comments:
உண்மைதான் நண்பா :)
ஆனால் வரும் வரும்படியை நம் மக்கள் சேமிப்பதாக ஒன்னும் தெரியவில்லையே:( மீண்டும் அடுத்த கோடையில் தண்ணீருக்கு மக்கள் குடம் எடுத்துக்கொண்டு தவிப்பார்களோ என்று கவலையாக இருக்கிறது நண்பா :( அனாவசியமாக ஆக்கிரமிப்பாளர்களால் ஏரிகள் உடைக்கப்படுகின்றன, தண்ணீர் சேமிப்பு இல்லையே :( ஐயகோ, என்று தமிழகம் திருந்துமோ...விடிவுகாலம் வருமோ???
அன்புடன்
ஸ்ரீஷிவ்...
Monday, December 05, 2005 11:48:00 AM
Post a Comment
<< Home