காதல் வலை - பகுதி 5
“பெரியப்பா எல்லாம் வீட்டில் இருக்காங்க, அதனால அவங்க இது விஷயமா பேச தயங்கறாங்க, உங்க டெல்லி நம்பர் தாங்க, நான் அங்க போன் செய்து பேசுறேன், என்னோட நம்பர் வேணும்னாலும் எழுதிக்கோங்க, 04243 234561”
நான் முழுக்க மீண்டும் வண்ணக் கனவுகளையும் சுமந்துக்கிட்டு, என்னைப்போலவே சந்தோஷமாகவே புறப்பட்டது அந்த மின்சார ரயில் வண்டி.
டெல்லி வந்து சேர்ந்தவனுக்கு அங்கு நல்ல வரவேற்பு, ஹிந்தி தெரியாது, தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டுமே தெரியும். என்ன செய்ய போகின்றோமோ என்று பயத்தில் AIIMS ஹாஸ்டலுக்குள் நுழைந்தேன். தெலுகு நண்பர்கள் எப்பொழுதும் போல, இங்கும் அதிகமே, அவர்களுள் சிலருக்கு தமிழ் ஓரளவுக்கு தெரிந்திருக்க, அதை வைத்து சமாளித்தேன். தமிழ் பேசவே மீண்டும் வலைக்குள் நுழைந்த என்னை கட்டிப்போட்டவள்தான் என் பிரியமான மாது. மீண்டும் நிகழ்காலத்திற்கு வந்தேன் மாதுவிடம் இருந்த வந்த அந்த வார்த்தைகள் என்னுள் மீண்டும் ஒரு சிறு சலனத்தை தோற்றுவித்தன. அவள் என்னிடம் கேட்டது...
(கொசுவர்த்தி இருந்தால் கொஞ்சம் சுத்திக்கோங்க, பிளாஸ்பேக் ;) )
மாது என் வாழ்வில் நுழைந்த இன்னொரு மின்னல், மிக விரைவில் என்னோடே கலந்த ஒரு தென்றல்.
"ஹாய் ஈஷ்வர், இன்னைக்கு உங்க ஆள் கிட்ட பேசினேன்...அவங்க குரல் ரொம்ப நல்லா இருந்தது, என் கிட்ட பேச ரொம்ப பயப்பட்டாங்க, அவங்க அம்மா கூட இருந்ததால என்னோட நம்பர் வாங்கி அப்புரம் ஈவினிங் என்கிட்ட பேசினாங்க. "என்னை மறந்திடச்சொல்லுங்க அவர, எங்க வீட்டுல ஒத்துக்க மாட்டாங்க இதுக்கு, எங்க சித்தி கிட்ட கூட இது பத்தி சொல்லி இருக்கேன், அவங்க கேட்டாங்க, "என்னடி நீ அந்த பையன் கூட ஓடிப்போறயா?" அப்படினு, நான் சொன்னேன், "அவர் அந்த மாதிரி இழுத்துக்கிட்டு ஓடற பையன் எல்லாம் இல்லை சித்தி" அப்படினு. அதுக்கு அவங்க சொல்லறாங்க "என்னோட பொண்ணு யார் கூடனா ஓடிப்போனாக்கூட பரவாயில்ல, ஆனா நீ எங்கனாச்சும் ஓடிப்போனா நம்ம குடும்ப கௌரவம் என்னாகும்?"னு . என்ன சொல்லறது நான்? என்னை மறந்திடச்சொல்லுங்க அவரை " இப்படியே திரும்பத்திரும்ப சொல்றாங்கடா.....என்ன பண்ண?"
நான் என்ன சொல்ல அவகிட்ட? ஒன்னும் புரியல, அதே நேரம் , அவ கிட்ட பேசனும், அதனால , மாதுவிடம் சொல்லி, தனம் கிட்ட பேசறதுக்கு ஏற்பாடு செய்ய சொன்னேன், அந்த நாளும் வந்தது, பிப்-17, வாலன்டைன்ஸ் டே முடிந்தஇரண்டாம் நாள், அது ஒரு 3 மணி நேர உரையாடல். மதிய உணவு சாப்பிடல, அதுக்கு முன்னாடி நாள் ராத்திரி மாது ஃபோன் பண்ணி சொல்லி இருந்தா...
"நாளைக்கு உனக்கு ஃபோன் பன்றேன், அவங்க அப்பா அம்மா , அவங்களுக்கு மாப்பிள்ளை பார்க்க போராங்களாம், அந்த டைம்ல நீ அவங்க கிட்ட பேசு" அப்படினு.
மதியம் 12 மணிக்கு மாதுவிடம் இருந்து ஃபோன் வந்தது, :அவங்க மதியம் 3 மணி
வரைக்கும் வெய்ட் பண்ராங்களாம், உன்னை ஃபோன் பண்ண சொன்னாங்க"
ஆவலுடன் ஒடிப்போய் பேசினேன், வாழ்வில் முதல் முறை, அவளிடம் என் மனதில் இருந்த
எல்லாவற்றையும் கொட்டி அந்த 3 மணி நேரத்திற்கு பிறகு, கடைசியாக அவளிடம் கேட்டேன்.
"தனம், நான் உன் கிட்ட ஒண்ணு சொல்லவா?"
"சொல்லுங்க"
"ஐ லவ் யூ"
"ஹ்ம்ம் சரி, அப்புறம்?"
"ஹேய் நான் என்ன கதையா சொல்லரேன்?ஐ லவ் யூ சொல்றேன், நீ என்ன சொல்ற?"
"எனக்கு பயமா இருக்கு, எங்க வீட்டுல இதுக்கு ஒத்துக்க மாட்டாங்க ஈஷ்வர், இப்ப கூட
அம்மா அப்பா எனக்கு மாப்பிள்ளை பார்க்கத்தான் போயி இருக்காங்க, நான் எதுவும் செய்ய முடியாது, என்னை மறந்துடுங்க"
"நான் மே மாசம் வரப்ப இது பத்தி பேசுவோம், பேசி முடிவு எடுப்போம்"
"சரி , அப்பவும் என்னோட பதில் இதுவாதான் இருக்கும்"
"அதை அப்பொ சொல்லு"
"சரி"
மன நிறைவுடன் வந்து மாதுவுக்கு ஃபோன் செய்து நன்றி சொன்னேன். எங்கள் நட்பும் நன்றாகத்தொடர்ந்தது. மே மாதமும் வந்தது....வீட்டிற்குப் போனேன்....அன்று மாலை அவளை சந்திக்க என்னுடய நண்பன் ஜான்சன் வீட்டிற்கு வரச்சொல்லி இருந்தேன், சரியாக 3.30 மணிக்கு அவள் ஜான்சனின் கடைக்கு வந்தாள்...என்னிடம் அவள் கேட்ட முதல் வார்தை.....
தொடர்வேன்... type="text/javascript">&cmt=0&postid=113402542974219611&blogurl=http://srishiv.blogspot.com/">
0 Comments:
Post a Comment
<< Home