காதல் வலை - பகுதி 7
கோவில், என்ன ஒரு புனிதமான இடம்? அந்த தூய்மையான இதயங்கள் சந்தித்த அந்த சந்திப்பொழுது இன்னும் என் சிந்தையில் பசுமையாய் இருக்கின்றது. அவள் கூறிய அந்த வார்த்தைகளும் தான், இன்னுமே என் காதுகளில்....தூதுதான் பேச ஆரம்பித்தது,
"எவ்ளோ நேரம் காத்திருக்கறது? 45 நிமிஷம் ஆச்சு, இப்போதிரும்பப்போறோம்"
அப்பொழுதுதான் என் பெரியம்மாவின் பத்தாம்நாள் காரியத்தில் கலந்துகொண்டு சற்று முன்னரே கிளம்பி ஊருக்கு வந்து கோவிலுக்கும் வந்த விசயத்தைஅவளிடம் சொன்னேன்.வருத்தம் கூறியவள் கடைசியாகப்பேசினாள்.
"ஈஸ்வர், என்ன இது சின்னப்புள்ள மாதிரி? இதுதான் ஒத்துவராதுன்னு சொல்லறேன் இல்ல? நீங்க இவ்வளவு வளர்ந்திருக்கீங்க, இந்த விசயம் ஒரு calf love (கன்றுக்காதல்) என்று உங்களுக்குப்புரியல? சின்னவயசுல எல்லோருக்கும் ஒரு கவர்ச்சி வர்றது சகஜம் தான், ஆனா அங்கேயே தத்தி நின்னுடக்கூடாது, நீங்க இன்னும் மேல வரனும், உங்களுக்கு என்னை விட நல்ல பொண்ணு கிடைப்பா, கண்டிப்பா உங்க கல்யாணத்திற்கு நான் வருவேன்"
மனம் சுக்குநூறாயொடிந்தது. அவளுக்காக வாங்கி வந்திருந்த ஒரு கேம்லின் பேனா, ஒரு முருகர் படம், என் கடவுச்சீட்டு அளவிலான புகைப்படம், போன்றவற்றைக்கொடுத்தேன், அவள் அதில் பேனாவை மட்டுமே எடுத்துக்கொண்டாள், முருகன் படத்தினை அவளின் தோழி எடுத்துக்கொள்ள, இறுதிவரை என் விரல் நகம்கூட படாமல் நாகரீகமாய் பேசியபின் பிரியாவிடை பெற்று அவளை அனுப்பினேன். நண்பர்கள் அழுது நீங்கள் பார்த்திருக்கின்றீர்களா? எனக்காக அன்று என் நண்பர்கள் அழுதார்கள். கண்ணீர் கரைய, ஒரு பாக்கெட் கோல்ட் பிளேக் கிங்ஸ் தீர்ந்தது. ஆனாலும் அதிலும் ஒரு பெருமை என்னவென்றால் போவதற்கு முன் என்னிடம் ஒரு சத்தியம் வாங்கினாள், "நான் கிடைக்கவில்லை என்ற காரணத்தால் நீங்க தண்ணியடிக்கக்கூடாது, இது என் மேல சத்தியம்"
மனம் சின்னாபின்னமாய் சிதற, சோகத்தை நெஞ்சில் சுமந்து வீட்டிற்கு வந்து அம்மாவின் கையினால் கடைசியாக உணவு உண்டபின் தலைநகருக்கு கிளம்பினேன்,கனத்த இதயத்தோடும் , கை நிறைந்த பைகளோடும் மனதோடு அவளின் நினைவுகள் மட்டுமாக..... ஸ்ரீனி என்னைத்தொலைபேசியில் அழைத்துப்பேசினான், இருந்தாலும் மனம் காயப்பட்டது பட்டதுதானே? அந்த நேரத்தில் என் மனதிற்கு ஆறுதலாகவும் களிம்பாகவும் இருந்தவள்தான் மாது.....அவள் கூறிய சில வார்த்தைகள் தான் என்னை மீண்டும் எழுப்பி நிறுத்தி என் வாழ்விற்கே ஒரு அர்த்தத்தினை அளிப்பதாக இருந்தன.....அவள் கூறியவை......
தொடர்வேன்.... type="text/javascript">&cmt=1&postid=113416706775848488&blogurl=http://srishiv.blogspot.com/">
1 Comments:
நன்றிகள் பல்லவி
அப்படி செல்லவிருந்தவனைத்தான் நேர்வழிப்படுத்த வந்தவளே மாது, ஆனாலும்.......
வரும் பகுதிகளில் படியுங்கள் காதல் வலையினை....அதற்காகவே இந்தக்கதைக்கு காதல் வலை என்று பெயரிட்டேன்....
அன்புடன்
ஸ்ரீஷிவ்...
Friday, December 09, 2005 9:55:00 PM
Post a Comment
<< Home