ஃபீனிக்ஸ்
மனம் முழுதும் ரணமாய்
மறுமுறை அந்த வார்த்தைகளை
நினைவுகூர்கின்றேன்....
"மறந்துவிடு என்னை"
"மரித்துவிடு நீ" என்று சொல்லியிருந்தால்கூட
மயங்கி இருக்கமாட்டேன்.
மனது ஒன்றும் மாயக்கண்ணாடி அல்ல
நினைத்தால் நினைத்த நேரம் மாற்றி
முகம் பார்க்க,
மரித்த என்னை உயிர்ப்பித்தாய்
ஒரு ஃபீனிக்ஸ் பறவையாய்
உயிர்த்தெழுந்தேன்,
இன்றுதான் புரிந்தது,
உண்மையில் நான் ஒரு
ஃபீனிக்ஸ் பறவைதான் என்று,
என்றும் தொடரும் என் பயணம்
உனை நோக்கி, மரிப்பினும்
மறுபடி உயிர்த்தெழுந்து பறப்பேன்
உன்னைத்தேடி, உன் அருகில்.
என் சாம்பலிலும் இருக்கும் உன் சலனம்,
மீண்டும் என்னை எரிப்பாயா?
உயிர்ப்பேன் மீண்டும் உன் நினைவுகளால்....
ஸ்ரீஷிவ்... type="text/javascript">&cmt=3&postid=113424210148806391&blogurl=http://srishiv.blogspot.com/">
3 Comments:
நன்றிகள் சாப்ட்,
தங்கள் வருகைக்கும் பின்னூட்டமிட்டமைக்கும்.....
அன்புடன்
ஸ்ரீஷிவ்...
Sunday, December 11, 2005 3:47:00 AM
வணக்கம் பல்லவி
அடுத்த கவிதை நான் தமிழகம் நோக்கி தொடர்வண்டியில் பயணம் செய்த போது எழுதியது, எனக்கு மிகவும் பிடித்த கவிதைகளுள் ஒன்று, ஆனால் அதற்கு முன் காதல் வலை பாகம் 8 வேண்டாமா? என் எழுத்தோட்டத்தில் இப்படி ஒரு நடையை பின்பற்ற ஆசைப்படுகின்றேன், இரண்டு கவிதை, இரண்டு பகுதி காதல் வலை, எப்படி? தங்களின் கருத்தென்னவோ???
ஸ்ரீஷிவ்..
Sunday, December 11, 2005 11:00:00 PM
செய்திருவோம் பல்லவி
ஆனா புது பதிவு எப்படி ஆரம்பிக்கறதுன்னுதான் தெரியல, கொஞ்சம் சொல்லுங்க, எழுதிடுவோம், அதேபோல் என்ன தலைப்பு வைக்க்கலாம்னும் சொல்லிடுங்க....அதுலயே எழுதிடறேன்..
வணக்கமுடன்,
ஸ்ரீஷிவ்...
Monday, December 12, 2005 4:28:00 AM
Post a Comment
<< Home