அகர வரிசையில் என் காதல்
உண்மையாய் உனை நினைத்து
ஒரு துளி கண்ணீர் சிந்துவேன்
என் உயிர் பிரியும் முன்னால்.....
அன்பே என உனை அழைக்க
ஆசைதான் என் நெஞ்சில்,ஆயினும்
இல்லையே இந்த நெஞ்சில் இடம்,
ஈன்றெடுத்த தாய் தந்தைமுன்
உன் நினைவை வெளிப்படுத்த
ஊக்கத்தைக்கொடு எனக்கு.
என்றேனும் ஓர்நாள் உனை
ஏதோ ஒரு புள்ளியில் சந்திப்பேன்
ஐம்புலன்கள் என்னில் அடங்குமுன்
ஒரு நாளில் கூறிமுடிக்கமுடியவில்லை
ஓராண்டும் எனக்குப் போதவில்லை
ஔவை கொடுத்த பாடல்களில் ஒன்று
எஃகுபோல் என் நெஞ்சில் நிற்க
ஜோதிடம் கற்கிறேன் நான்,
திறமை, இருப்பினும் இல்லாதுபோயினும்
மோகத்தீயை அனைத்து ஞானப்பால் குடித்திடவே
இளவேணிற்காலத்தில் இந்திரனின் தவத்தோடு
உனை நினைத்து பாடிடவே
உருகுகின்றேன் உனை மறவேன்....
என்றும் அன்புடன்,
ஸ்ரீஷிவ்... type="text/javascript">&cmt=2&postid=113424158316047403&blogurl=http://srishiv.blogspot.com/">
2 Comments:
இந்தக்கவிதை நான் மூன்று ஆண்டுகளுக்கு முன் எழுதியது தோழர், இப்போ நெலமையே வேற :) அதுவும் அகர வரிசைக்காக எழுதியது அது, அ முதல் ஃ வரை, அதுவே...
ஸ்ரீஷிவ்...
Sunday, December 11, 2005 11:02:00 PM
ஐயோ நான் அந்த ஊருக்கு எல்லாம் வந்தது இல்லைங்க, என்னவோ கிராண்டு அது இதுனு சொல்லறீங்க, இது எங்க ஐஐடில இருக்கற மலை உச்சிக்கு போற வழில எடுத்த படம், :) ஹில்டாப் போற வழில எடுத்த படம், எங்க கேம்ப்பஸ்லதான் இருக்கு இந்த இடம்....:)
ஸ்ரீஷிவ்...
Sunday, December 18, 2005 1:55:00 AM
Post a Comment
<< Home