மறவாதே கண்மணீ....
பசுமையான புல்வெளிகள்
பாய்ந்தோடும் புனலாய் நதி
பால் போன்ற வெண்ணிலா
பஞ்சனை போல் உன் மடி
மலர்ந்த உன் முகம்
மதியை பழித்துக்காட்ட
கண்ணின் பாவைகளோ
கண்மணி உன்னில் தேட,
விரைந்தோடும் அந்த காற்று
வெப்பமாய் என்னைத்தொட்டுச்செல்ல
அமர்ந்திருக்கும் உன் முகத்தில்
ஆயிரம் கவலைகள் ஏனடி?
உன் வீட்டில் பழிப்பாரோ?
என் வீட்டில் பழிப்பாரோ?
உலகம்தான் என்சொல்லுமோ?
ஊமத்தை மலரை விடையாக்குமோ?
ஆயிரம் கேள்விகள் உன் நெஞ்சில் இருந்தாலும்
அன்பான உன் தலைகோதலில்
அயர்கின்றேன் கண்கள் நான்
அனைத்தையும் மறந்தேயடி.
ஒவ்வொரு நாள் விடியலிலும்
உன் முகம்தான் சூரியனே
என்ன இந்த அதிசயமே?
சூரியனும் குளிருதடி.
அஞ்சல் பெட்டி காலம் மாறி
அழைக்கும் தொலைபேசி மாறி
மின்னலென எதிர்பார்ப்பேன்
உன்னஞ்சலை என் மின்னஞ்சல் பெட்டியில்.
உன்னஞ்சல் காணாத இன்னாளில்
இப்போதும் கண் துஞ்ச மறந்தேனடி
கண்மணியே கண் திறவாய்.
கடைவாயில் எச்சிலூற
அம்மாவரும் வழிபார்த்து
காத்திருந்த காலங்கள்
கடந்து சென்று நாளாச்சு,
காதலியின் வரவுக்காய்
கணங்களுமே வருடங்களாய்
காத்திருந்த காலங்களும்
கற்காலம் ஆயாச்சு.
மனைவி என்றே உனை நினைத்து
மனதால் உடலால் உருகி
மருங்கி மருங்கி மாய்ந்த காலங்கள்
மறுமுறைதான் வந்திடுமோ?
தொன்னூறின் அனுபவங்கள்
முப்பதிலே வந்துவிட்டால்
முன்னூறின் அனுபவத்தை
தொன்னூறில் அனுபவிக்க
இருப்பேனா இல்லை இறப்பேனா?
மறவாதே கண்மணி என
மருங்கி நின்ற நாட்கள்!
பிரியாத வரம் வேண்டி
புலம்பித்திரிந்த நாட்கள்.
உறவாக வராவிடினும்
பிரிவாக நினைக்காதே
கண்மூடிப்பார்த்திடினும்
கயல்போன்ற உன்விழிகள்
கண்முன்னே நிற்குதடி,
கண்ணகியே கண்தாடி.....
என்றும் அன்புடன்
ஸ்ரீஷிவ்,.... type="text/javascript">&cmt=5&postid=113465961168815814&blogurl=http://srishiv.blogspot.com/">
5 Comments:
நன்றிகள் பல்லவி :)
என்ன உங்களோட வலைப்பதிவை இன்னும் அப்டேட் பண்ணலையா? காத்திருக்கின்றேன் படித்து பின்னூட்டமிட :)
என்றும் அன்புடன்
ஸ்ரீஷிவ்...
Thursday, December 15, 2005 12:44:00 PM
என்னங்க பல்லவி?
உங்களோட வலைப்பதிவு காலியா இருக்கு? எல்லாத்தையும் எடுத்திட்டீங்களா?எதுவுமே காணோம்?????
Friday, December 16, 2005 2:17:00 AM
காத்திருக்கின்றோம், அறிந்துகொள்ள, நன்றிகள் பல்லவி,....
Saturday, December 17, 2005 12:10:00 AM
ம்... மறவாதே கண்மணீ....
என் மனதையும் தொட்டன உங்கள் கவிவரிகள். வாழ்த்துக்கள்.
Thursday, December 22, 2005 12:10:00 PM
நன்றிகள் பல, சத்யா
தங்கள் பின்னூட்டத்திற்கு....:)
ஸ்ரீஷிவ்...
Thursday, December 22, 2005 1:13:00 PM
Post a Comment
<< Home