குறுந்தகவலில் சில பெருந்தகவல்கள் ...:)
என் தம்பி டாக்டர்.ஸ்ரீதர் முதலான பலரிடம் இருந்து எனக்கு வந்த சில குறுந்தகவல்கள் எனக்கு எத்தனையோ தாழ்வான நேரங்களில் மனதைத்திடப்படுத்த உதவி இருக்கின்றன, அவற்றில் சிலவற்றினை இங்கே பகிர்ந்துகொள்கின்றேன்....
* எப்பொழுதும் தங்களை மேலாகவே எண்ணுங்கள்
ஒவ்வொருவரிடமும் , ஒவ்வொரு சூழ்நிலையிலும்
ஏதேனும் ஒரு மேன்மை இருக்கவே செய்கின்றது
நின்றுபோன கடிகாரம் கூட
ஒரு நாளைக்கு இருமுறை சரியாக
மணி காட்டுகின்றது,
நல்ல காலை வணக்கம்....:)
*ஒரு சிறு ஒற்றை மெழுகு
மொத்த அறைக்கும் ஒளி கொடுக்கிறது,
ஆனால் உன்னைப்போன்ற ஒரு
இனிமையான சகோதரன் என்
வாழ்வு முழுதும் ஒளி கொடுப்பானே?
நன்றிகள் அண்ணா, தங்கள்
ஒளிபொருந்திய அன்பிற்கு...
நல்ல இரவு...
*தவறுகள் என்பவை
எப்பொழுதுமே வலி மிகுந்தவை,
ஆனால், சில வருடங்களுக்குப்பின்
அதே தவறுகளின் ஒரு தொகுப்பே
அனுபவம் என்று அழைக்கப்படுகின்றது
எனவே, தொடர்ந்து தவறு செய்யுங்கள்...:)
*உன்னை உண்மையில் அறிந்த
உன்மீது அன்பு செலுத்தும் ஒரு மனிதன்
யார் என்றால், உலகமே உன் முகத்தில் இருக்கும்
சிரிப்பைக்காணும் பொழுதில்
உன் கண்ணில் உள்ள வலியைக்கண்டு ஆறுதல் சொல்பவன்....
*சமுத்திரத்தைப்போல் ஆழமானது
உனக்கான என் அன்பு,
வானத்தைப்போல் அகன்றது
உன் மேல் நான் வைத்த நம்பிக்கை,
பனியைப்போல் வெண்மையானது
உன் இதயத்தின் தூய்மை,
இருளைப்போல் கருமையானது
நான் உன்னைப்பிரிந்திருக்கும் வலி,
உன்னை விரும்புகின்றேன் என்
இனிய அன்பே....:)
ஸ்ரீஷிவ்...:) type="text/javascript">&cmt=6&postid=113502031120615027&blogurl=http://srishiv.blogspot.com/">
6 Comments:
//நின்று போன கடிகாரம் கூட..//
நம்பிக்கையைத் தூண்டுகிறது.. நேரம் வாய்த்தால் தனிமடலில் கூட தொடர்பு கொள்ளுங்கள்.
உங்கள் வலைப்பதிவிற்கு இதுதான் எனது முதல் வருகை..!!
Monday, December 19, 2005 1:52:00 PM
இவற்றில் சில எனக்கும் வந்திருக்கிறது. அதை மீண்டும் அழகான தமிழில் படிக்க இன்னும் அர்த்தப்படுகிறது. நன்றி சிவா.
இன்னொன்று...
நல்ல காலை வணக்கம்....:)
நல்ல இரவு...
ஆங்கிலத்தில் உள்ளதை அப்படியே தமிழ்ப்படுத்த வேண்டுமா? அல்லது அதே அர்த்தத்தில் சற்றே மாற்றி சொன்னால் நல்லாயிருக்குமா அல்லது சுமா காலை வணக்கம் அல்லது வெறும் வணக்கம் என்பது முடிப்பதா?
Monday, December 19, 2005 9:32:00 PM
எல்லாமே நல்லா இருக்கு. எடுத்துப் போட்டதற்கு நன்றி.
ஒரு பிளஸ் :-)
Monday, December 19, 2005 9:42:00 PM
அன்பின் திரு.ஜான் போஸ்கோ,
ஒரு நிமிடம் நான் திகைத்துவிட்டேன், ஏனெனில் என்னுடன் ஆய்வு செய்யும் ஒரு தம்பியின் பெயரும் ஜான் போஸ்கோ தான், அவன் வில்லியம் ஜான் போஸ்கோ, அவனும் வேதியியல் துறையே, அவனும் திருச்சி புனித சூசையப்பர் கல்லூரியின் மாணவனே, எப்படியோ, என் வலைப்பதிவிற்கு வருகைதந்தமைக்கு நன்றிகள் பல, தங்களின் மின்னஞ்சல் முகவரி எனக்குத்தெரியாதே? தெரிந்தால் தனிமடலிடுவேன்...
அன்புடன்
ஸ்ரீஷிவ்...
Monday, December 19, 2005 10:34:00 PM
அன்பின் அன்பு,
வணக்கம், நன்றிகள் தங்கள் பின்னூட்டத்திற்கு, ஆமாம் அன்பு, நான் என் தோழர்களுக்கு நேரிலே வணக்கம் சொல்லும்போதும் சரி, தொலைபேசியில் சொல்லும் போதும் சரி, அப்படியே சொல்லிப்பழகிவிட்டேன், எனவே எனக்கு இது ஒன்றும் புதிதாகத்தெரியவில்லை, என் தோழர்களும் அந்த வாக்கியங்களுக்குப்பழகிவிட்டனர்...:)
அன்புடன்
ஸ்ரீஷிவ்...:)
Monday, December 19, 2005 10:37:00 PM
நன்றிகள் உஷா
என் வலைப்பதிவிற்கும் வந்தமைக்கு :)
நன்றிகளுடன்,
ஸ்ரீஷிவ்..:)
Monday, December 19, 2005 10:38:00 PM
Post a Comment
<< Home