மாட்டுப்பொங்கல் வாழ்த்துக்கள்...
இது கீற்று மின்னிதழுக்காக எழுதப்பட்ட கவிதை, அதில் பிரசுரமாகும் என்ற நம்பிக்கையில் இங்கும் என் வலைப்பூவிலும் இடுகின்றேன்...என்றும் அன்புடன்,
ஸ்ரீஷிவ்...
சிறுவயதில் என் வீட்டு
தொழுவத்தில் வீற்றிருந்த
எருதுகளும் ஆக்களுமே
கண்விட்டு அகலாது காலமும்
என் கண்களில் ஆடும்...
மாட்டுப்பொங்கல் என்றதுமே
மனதில் நின்று இடம்பெற்று
பசுமையாக வருவது என்
பசுவான லட்சுமியே..
தைப்பொங்கல் திருநாளில்
திருத்திய ஒரு திலகமிட்டு
தண்ணீர் ஊற்றி குளிப்பாட்டி
பன்னீர் தூபம் அதைக்காட்டி
வெண்ணீர் கொண்டு முகம் கழுவி
திருநீறனிந்தே தொழுதிடுவோம்...
வடையுடன் பொங்கல் வாய் ஊட்டி,
விளையாட்டுப்பல அதில் காட்டி,
தரையில் இலையை இடம் சுட்டி,
வாயால் உண்போம் மாட்டைப்போல்.
வருடம் ஒருமுறையேனும் அந்த
வாயில்லாத ஜீவன்களின்
அருமை பெருமைகள் புரிந்திடவே
அன்னை தந்தை அருமையாக
அருளித்தந்த பாடம் இது...
கைகளை பின்புறம் கட்டி
பின் தலையை தரையில் முட்டி
வாயால் உண்ணும் உணவு
அது வயது தந்த தினவு,
சிறுவனாய் மீண்டும் மாறி
அந்த சிறுவயது ஞாபகத்தை
இன்றும் தேடுகின்றேன்
இந்த இணையவெளிதனில் எங்கும்.....
எங்கே சென்றன அந்த,
வயலும், கிராமமும், மண்ணும்???
வயலும் வாழ்வும் என்று,
இன்று தொலைக்காட்சியில் தான் பொங்கல்...
தமிழர் திருநாள் என்றே, நாம்
தலை நிமிர்ந்தே கொண்டாடிடினும்,
வறுமை போக்க வந்த
அந்த லட்சுமிக்கு சொல்வோம் நன்றி...
நாளை என்றொரு நாளை,
நம் வாழ்வில் நம்பிக்கையூட்டி,
தன்வாழ்வே கேள்விக்குறியாய், தினம்
த்வித்தே வாழும் என் மாடு,
மாடு என்றால் அது செல்வம்,
நம் மனையில் வாழும் செல்வம்,
பொங்கல் தைத்திருநாளில்
அவற்றிற்கு நாம் நன்றி சொல்வொம்
மாடுகளை வளர்ப்போம்
நம் மக்கட்பண்பையும் காப்போம்...
வாழ்க இப்பொங்கல் திருநாளில்
என வாழ்த்தி விடையும் பெறுகின்றேன்...
என்றும் வணக்கமுடன்,
உங்கள் சிவா...
பொங்கலோ பொங்கல், மாட்டுப்பொங்கல்... type="text/javascript">&cmt=2&postid=113740950716620243&blogurl=http://srishiv.blogspot.com/">
2 Comments:
எந்தூரு மாடு என்றாலும் அது நம்மூரு மாடு போல வருமா? ஹி ஹி!!!
Monday, January 16, 2006 4:31:00 AM
உண்மைதான் தேவ்,
நம்ம ஊரு மாடு நம்ம ஊரு மாடுதான் :)
ஸ்ரீஷிவ்..
Monday, January 16, 2006 10:39:00 AM
Post a Comment
<< Home