காதல் வலை - பகுதி 12
அவளைக்காணாமல் தவித்திருந்த நேரம், நினைவுகள் மீண்டும் பின் செல்ல, கல்லூரியின் விடுதிவிழாவில் நான் நடித்த ஒரு நாடகம் நினைவிற்கு வந்தது. சிறு வயதில் பள்ளி நாட்களில் நாடகம் போட்டது தவிற வேறு அனுபவம் இல்லாத காரணத்தால் அப்படியே ஒரு வழியாக சமாளிக்க நினைத்து ஒத்துக்கொண்டேன். முதலாமாண்டு என் ஆராய்ச்சி சமயம் அது, எங்கள் விடுதியில் ஆராய்ச்சி மாணவர்களின் தலைமையில் அனைத்து விடுதி விழா நடைபெற்றது, அதில் ஒவ்வொரு விடுதியும் தங்கள் தனித்திறமையை காட்ட வேண்டும், எங்கள் விடுதியில் இருந்து நாடகம் போட்டனர், சீதா ஹரன் என்பது நாடகத்தின் பெயர். நவீன ராமாயணம் என்று வைத்துக்கொள்வோமே? அதில் என் தோழர்களுடன் நானும் ராவணன் வேடமேற்று நடித்தேன். அது உண்மையிலேயே எனக்கு ஒரு வித்தியாசமான அனுபவம். நாடகத்தின் சாராம்சம் இதுதான், எங்கள் விடுதியின் சார்பாக எங்கள் கல்லூரி ஆண்டுவிழாவில் ஒரு நாடகம் போடுகின்றோம், அதில் ராமர், லட்சுமணர், சீதை, மற்றும் ராவணன் வருவதுபோல் காட்சி, அதற்காக வடக்கு மானிலங்களைச்சேர்ந்த தோழர்கள் பெயர் கொடுத்து, அந்த அந்த வேடங்களுக்கான வசனங்களை வாங்கிப்படித்து மனனம்செய்துவைக்கின்றனர். ஆனால் நாடகம் போடும் தினம் அன்று காலை திடீரென்று ராமன் வேடம் போடும் மாணவன் தன் தோழியுடன் நகருலா சென்றுவிட, ராவணனும் தனியே நடிக்க பயந்து நடிக்கமாட்டேன் என்று சொல்லிவிட, விடுதியின் பெயரைக்காப்பாற்றியாகவேண்டிய கட்டாயத்தில் மாணவர்கள் திடீரென்று சிலரை பிடித்து வசனங்களைக்கொடுத்து படித்துவந்து மாலை நடிக்கச்சொல்கின்றனர், அதில் நடக்கும் அமர்க்களங்களை ஒரு ஒருமணிநேர முழுநீள நகைச்சுவை நாடகமாக கொடுத்திருந்தோம்.
அதில் என் பாத்திரம், ராமன், ராவணன் ஓடிவிட்டபின்னர், அவசரத்திற்கு கைகொடுக்கும் தென்னிந்திய இந்தி தெரியாத தமிழ் ராவணன் வேடம், இந்தியை தமிழில் எழுதி நம் வழக்கு மொழி சொலவாடையில் பேச, கைத்தட்டல் பிய்த்துக்கொண்டு போனது. உண்மை சொன்னால் அதன்பின்னர் எங்கள் கல்லூரி வட்டாரத்தில் அந்த நாடகத்திற்குப்பின் எனக்கு ராவணன் என்றே பெயர் வந்துவிட்டது.:) , பேராசிரியர்கள் எனைக்காணும்போது செல்லமாக ,ராவணா, கஹான் ஜாரஹேஹூம்?? கார் மே ஆவோ, என்று தமது காரில் லிப்ட் கொடுத்து அழைத்துச்செல்லுமளவிற்கு ஆகிவிட்டதென்றால் பார்த்துக்கொள்ளுங்களேன் :). அதில் நடிக்கின்றேன் என்றதும் கண்மனிக்கு ஒரே சிரிப்பு, எனக்கு அவள் அனுப்பிய வாழ்த்து அட்டையில்," கம்சன், ராவணன் என அனைத்து வேடங்களும் இப்பவே போட்டுக்க, வாழ்க்கைல கடைசி கடைசியா கல்லூரில படிக்கற, அதனால போடற ஆட்டம் எல்லாம் இப்பவே போட்டுக்க "என்று வசனம் போட்டு அனுப்பி இருந்தாள்.
இதை எல்லாம் நினைத்தபடியே தற்சமயமாக கோமா நிலைக்குச்சென்றிருந்த என் செல்பேசிக்கு உயிரளிக்க தொடர்வண்டி நிலையத்தின் வெளியே இருந்த ஒரு தொலைபேசியகத்திற்கு சென்றேன், அங்குதான் மின்னிணைப்பு இருந்தது. ஒரு 15 ரூபாய் வாங்கிக்கொண்டு 10 நிமிடங்கள் மின்னேற்றம் செய்து கொடுத்தான். சென்னையும் ஏமாற்று இடமாகிப்போனதை எண்ணி நொந்தபடியே திரும்பி வண்டியை நோக்கி காலெடுத்து வைத்தவனின் கண்ணில் சிக்கிய காட்சி.....என் கண்மணி கண்ணெங்கும் பதற்றமுடன், மனமெங்கும் என்னைத்தவறவிட்டுவிடுவாளோ என்ற சோகத்துடன் வெளியே வந்துகொண்டிருந்தாள் தண்ணீரருந்த ( காலையிலிருந்தே சாப்பிடாமல் தொடர்வண்டி நிலையத்திற்கு வந்து தவம் கிடந்திருக்கின்றாள் :( )வெளியே வந்துகொண்டிருந்தாள். தூரத்தில் என்னைக்கண்டதும் அவளால் நம்பமுடியவில்லை, மாது....என் குரல் அவளின் காதுகளை அடையும்முன் அவள் கால்கள் என்னை அடைந்திருந்தன. அப்ப்ப்ப்பா , என்ன ஒரு வேகம்??? வந்தவள் அப்படியே என் கைகளை இருக்கப்பிடித்துக்கொள்ள, அவள் கண்கள் அவளறியாது மாலை மாலையாக தேக்கிவைத்திருந்த கண்ணீரை எனக்கு பன்னீராக சொறிய, " என்னடா செல்லம்? என்ன இது சின்ன புள்ளமாதிரி?" என்று அவளின் கையை ஆதரவாகப்பற்றி முதல்முறையாக நேரில் அவள் காதலனாய் அவளை என் தோளில் அனைத்தபடி என் தொடர்வண்டியை நோக்கி நடந்தேன். என்னவோ எத்தனையோ ஆண்டாண்டுகளாக பழகிய ஒரு பந்தம் மனதில், என் பெட்டி வந்ததும், அவளை உள்ளே அழைத்துச்சென்று என் இருக்கையிலிருந்து ஒரு இனிப்புத்துண்டை எடுத்து கொடுத்தேன்.என்னவோ கட்டிய மனைவியிடம் இருக்கும் ஒரு உரிமை, நெருக்கம், முதல்முறை நேரில் சந்திக்கையிலேயே இருந்தது கண்டு இருவரும் மகிழ்ந்தோம். நடைமேடைக்கு வந்து அவளின் மென்பொருள் குறுந்தகடுகளை அவளிடம் அளித்துவிட்டு, இருவரும் ஒரு கோப்பை ஆப்பிள் சாறு வாங்கி அருந்தினோம். பாதி அருந்திக்கொண்டிருக்கையில் வண்டிபுறப்பட அடையாளம் காட்ட, பிரிய மனமின்றி, இரண்டு நாள் கழித்து வந்து அவளை சென்னையில் சந்திப்பதாகச்சொல்லிவிட்டு கிளம்பினேன் என் வீடு நோக்கி, அந்தத்தொடர்வண்டியும், என் உயிரை சென்னையிலேயே கழற்றி விட்டுவிட்டு உடலை மட்டுமே சுமந்த படி என் ஊர் நோக்கிப்பயணிக்க...கண்களில் கனவு தாங்கி காத்திருந்த என் தாய் , தந்தையரை பாசமுடன் காண விரைந்தேன்...அங்கே எனக்கு காத்திருந்த ஒரு அதிர்ச்சி தெரியாமல்....
தொடர்வேன் :)
மன்னிக்கவும் ரொம்பநாளைக்கு அப்புறம் இந்த பகுதி வருகின்றது, இடையில் சில் முக்கிய பணி நிமித்தமாக வெளியூர் பயணத்தால் எழுத முடியவில்லை...விரைவில் அடுத்த பகுதியை தருகின்றேன்...
பிரியங்களுடன்,
ஸ்ரீஷிவ்...:) type="text/javascript">&cmt=5&postid=114208463716016547&blogurl=http://srishiv.blogspot.com/">
5 Comments:
அன்பின் பல்லவி
நன்றி :) இந்த தொழில்நுட்ப வார்த்தைகளை (technical words) பல குழுமங்களின்மூலம் நான் கற்றேன்,அன்புடன், மரத்தடி, முத்தமிழ்,நம்பிக்கை போன்ற பல கூகிள் குழுமங்கள் உள்ளன இணையத்தில், அவற்றின் மூலம் இந்த வார்த்தைகளை நான் பெற்றேன்....நீங்களும் புதிய வார்த்தைகளை அறிந்ததில் மிக்க மகிழ்ச்சி, பின்னூட்டத்திற்கு நன்றி,.
அன்புடன்
ஸ்ரீஷிவ்..:)
Saturday, March 11, 2006 11:15:00 PM
கதை நல்லா இருக்கு. கொஞ்சம் சீக்கரமா முடிங்க.. அப்புறம், நிஜமாவே மெகா சீரியல் ஆகிட போகுது...
Thursday, March 16, 2006 3:09:00 AM
முடிக்கறதுன்னா இன்னைக்கே கூட முடிச்சிடுவேன், இது ஒரு உண்மையான வாழ்க்கைக்கதை, அதனால கதையோட்டத்துடன் எழுதி வருகின்றேன், இது ஒரு நடந்துகொண்டிருக்கும் கதை பொன்ஸ் :) எப்டி வசதி? முடிச்சிடலாமா? இல்ல முடிவு ரியலா இருக்கனுமா? :)
Thursday, March 16, 2006 3:31:00 AM
அது சரி.. அப்போ ஈஸ்வருக்கு கல்யாணம் ஆகும்போது தான் இந்தக் கதை ஒரு முடிவுக்கு வருமா... அப்போ ஒண்ணு பண்ணுங்க.. வேற ஒரு 'நண்பன்' கதையை எடுத்து விடுங்க.. அது ஒரு வாரம், இது ஒரு வாரம். இப்படி முடிச்சுடுங்கன்னு யாரும் உங்களைத் தொல்லை படுத்த மாட்டாங்க... ஒரே ப்ராப்ளம் என்னன்னா, பல்லவி அப்புறம், அந்த கதைல வர்ற காரக்டரோட இந்த கதையை குழப்பிக்காம இருக்கணும்....
Friday, March 17, 2006 2:33:00 AM
ஹா ஹா சரிதான் சரிதான் பொன்ஸ், அடுத்த கதை??? ஹ்ம்ம், காதல் வானொலி அப்படின்னு ஒரு கதை எழுதினேன், அதை வேணா மறுபடி தமிழில் தட்டிப்போடவா? :)) , இல்ல ராஜ் எப் எம் ல் முடித்ததுபோல் இந்த கதையை முடிச்சிடவா? :)
ஸ்ரீஷிவ்..
Friday, March 17, 2006 2:47:00 AM
Post a Comment
<< Home