வாடகைத்தாய் - இந்தியாவிலும்
பரதேசி கடிதம்!
கும்புடுறேன் சாமியோவ்!
இன்னா சாமி எப்படி கீரிங்க?
நேத்துதான் நம்ம துளிக்காணம் பொண்சாதி பரிமளாவை பார்த்துட்டு வந்தேன்... முன்னைக்கு இப்ப நல்லா வெடவெடன்னு வளர்ந்து, பூசி மொழிகனா மாதிரி குஜாலா இருந்தாள். இன்னா தங்கச்சி இன்னா மேட்டரு ஆளு படா சோக்கா மாறிக்கினியேன்னு கேட்டேன்.
"நம்ம சுப்பம்மா தான் என் கண்ணை தொறந்தா புண்ணியவதி. அதனால என் கஸ்டமெல்லாம் தீர்ந்து நல்லது நடக்கப் போகுதுன்னு சொன்னாள்.
அது இன்னா பரிமளம் தங்கச்சி. சுப்பம்மா எப்படி உன் கண்ணை துறந்துச்சின்னது கேட்டேன்.
"அதான் அண்ணாத்த வெளிநாட்டுக்காரங்களுக்கு புள்ள பெத்து குடுத்தா மூணுலட்சம், அஞ்சு லட்சம்னு பணத்தை அள்ளி அள்ளிக்" குடுக்கறாங்கன்னு சொல்லுச்சு.
"இது இன்னா தங்கச்சி புதுமேட்டரா கீது"ன்னு கேட்டேன். "ஆமாம் அண்ணாத்த இது வாடகை தாய்ன்னு ஒரு மேட்டரு. வெளிநாட்டுல கீர பணக்காரங்களுக்கு புள்ளக்குட்டி இல்லேன்னா அவங்க நம்ம நாட்டுக்கு வந்து... அவங்களோட கருமுட்டையை எடுத்து இங்க இருக்கற வாடகைத்தாயோட வயித்துல வச்சி வளர வைக்கிறாங்க. பத்து மாசத்துல குழந்தைய பெத்து குடுத்ததும் அவங்க கிட்டே நாம பேரம் பேசினா மாதிரி மூணு லட்சத்திலிருந்து அஞ்சு லட்சம் வரைக்கும் பணத்தை குடுத்துட்டு அந்த குழந்தையை எடுத்துக்கினு போய்டுவாங்க.
"அடிப்பாவி... இந்த மேட்டரு எப்படி நம்ம ஊருவரைக்கும் வந்துச்சு?"
"அது. குஜராத்துக்கு காண்ட்ராக்ட் வேலைக்க போயிருந்தப்ப நம்ம சுப்பம்மா அங்க நயினாபட்டேல்னு ஒரு டாக்டரை பார்த்திருக்காள். அந்த டாக்டரு தான் இந்த மேட்டரை சொன்னாராம். அங்க ஜாசமதின்னு ஐம்பது வயசு. பொம்பளை இந்த மாதிரி காசுக்கு ஆசைப்பட்டு குழந்தை பெத்து குடுத்துதாம். அதை பார்த்துட்டு அந்த பொம்பளையோட மூணு பொண்ணுங்களும் நீ. நான்னு போட்டிப்போட்டுகினு இப்ப வாடகைக் குழந்தையை சுமந்துகினு கீதுங்களாம்.
நம்ம சுப்பம்மா சும்மா நாட்டு கட்டை மாதிரி 'கிண்'ணுன்னு இரு;ககிறதை பார்த்துட்டு அந்த டாக்டரு உனுக்கு மூணு லட்சம் வாங்கித்தர்றேன் நீ குழந்தையை பெத்து தர்ரியான்னு கேட்டிருக்காரு. சுப்பம்மாவோட புருஷனுக்குத் தான் துட்டு குடுத்துட்டாப் போதுமே. அந்தாளும் சம்மதிச்சிட்டான். சுப்பம்மாவும் மூணு லட்சம் சம்பாதிச்சிகினு ஊருக்கு வந்து ஊடு, வாசல் கட்டிகினு மிச்சத்தை வட்டிக்கு விட்டுக்கினு கீது... அது சொல்லித்தான் நானும் குஜராத்துக்கு போவப்போறேன்."
பரிமளா சொன்னதைக் கேட்டு கோவாலு கோபமாக ஏங்கிட்டே கேட்டான். "தூத்தேரி இது என்னடா நாதாரிப் பொழப்பு. எவனோ துட்டு குடுக்கிறான்னு எவன் குழந்தையோ பெத்துக் கொடுக்க போறான்னு சொல்லுதே அந்த பொண்ணு. இதல்லாம் உருப்படுமா?"
கோவாலு சத்தமாக சொல்ல அதைக் கேட்ட டாக்டர் தணிகாசம் காரைவிட்டு கீழே இறங்கி வந்தார். "என்னப்பா தம்பி கோபாலு ஏன் கோபப்படற. நீ நினைக்கிற மாதிரி இது ஒண்ணும் மகாக் கேவலமான செயல் ஒண்ணுமில்ல. இது மனிதநேய அடிப்படையிலே குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு அவங்களோட கருமுட்டையை சுமந்து அவங்க குழந்தையை பத்து மாசம் தன்னோட வயித்திலே வளர்த்துக்கொடுக்கிற ஒரு தியாகமான செயல்.
இதிலே கருவை சுமக்கப் போற அந்த பொண்ணோட முழுச் சம்மதமும், உடல் ரீதியாக அவள் ஆரோக்யமானவளாகவும். அவள் குடும்பத்தாருடைய சம்மதமும் இருந்தால் போதும் இது தப்பு இல்லே. ஆனால் பணத்துக்காக இப்படி ஒரு செயலில் ஈடுபடுவது தான் தவறு. ஆனால் இதற்கான சரியான தடுப்பு முறைகள் இல்லை. இப்போது தான் இந்த வாடகைத் தாய் விஷயத்தில் இந்திய மருத்துவ கவுன்சில் புதிய சட்டமுறைகளை உருவாக்கியிருக்கு.
வாடகைக்கு கருவை சுமக்கிற பெண்கள் குஜராத்தில் அதிகப்படியான பணம் கேட்டு, குழந்தையின் கருவிற்கு சொந்தமானவர்களிடம் நச்சரிப்பதை கட்டுப்படுத்தவும் தடுக்கவும் முயற்சித்துக் கொண்டிருக்கிறது. அதனால நம்ம ஊருக்கு இது வந்திடாது கோவாறு நீ கவலைப்படாதே...
உனக்கு ஒரு விஷயம் தெரியுமா...? அமெரிக்காவில புதுசா கல்யாணமான ஒரு பெண்ணுக்கு கருப்பையில பிரச்சனைன்னு அவளோட கருமுட்டையையும் அவள் கணவரோட கருமுட்டையையும் எடுத்து, அந்த புதுப்பெண்ணின் அம்மாவே தன்னோட வயிற்றில் வச்சி வளர்த்து, குழந்தையை பெத்தெடுத்து அதைத்தன் மகள் கிட்டேயே கொடுத்தாங்க.
இப்ப அந்த குழந்தைக்கு மூணு வயசு ஆகுது. அது தன்னை பெத்த தாயை அம்மான்னு கூப்பிடுமா? பாட்டின்னு கூப்பிடுமா?"
அதானே...? இது கின்னடா பேஜாரான மேட்டரா கீதுன்னு நான் ஓசனப் பண்றதுக்கள்ள தணிகாசலம் டாக்டரு கார்ல கிளம்பிக்கினாரு.
கின்னா சாமி. நானும் கிளம்பிக்கிறேன். அடுத்த வாரம் உங்களை பார்க்கறேன் வரட்டும்ங்களா...
நன்றி :குமுதம் ஸ்பெஷல் -பரதேசி கடிதம் type="text/javascript">&cmt=4&postid=114404870299197802&blogurl=http://srishiv.blogspot.com/">
4 Comments:
ஒரு நல்ல விஷய்த்தை எப்படித் தவறாக முன்னிறுத்தலாம் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. என்றைக்குமே இருக்கிறவனுக்கு இல்லாதவன் வலி தெரியாது. எருது புண் காக்கைக்குத் தெரியுமா! இந்த வாடகைத்தாய் உதவி எத்தனை குடும்பங்களில் மகிழ்ச்சி விளக்கு ஏற்றியிருக்கிறதோ...ம்ம்ம்ம்..
Monday, April 03, 2006 1:19:00 AM
உண்மைதான் ராகவ்,
அதேசமயம் சொல்லவந்த விசயத்தினை இப்படியேனும் பாமரனுக்கும் புகுத்த நினைக்கின்றார்கள் அல்லவா?தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி...
ஸ்ரீஷிவ்..
Monday, April 03, 2006 4:38:00 AM
நல்ல விஷயத்தை அசிங்கமாக நினைக்கும் பலருக்கு இந்த பதிவு கண்ணைத் திறக்கும்
Tuesday, May 02, 2006 4:41:00 AM
நன்றி திரு.சந்திரசேகரன் ஐயா,
தங்கள் கருத்தினை பதிந்தமைக்கு...
ஸ்ரீஷிவ்...
Tuesday, May 02, 2006 6:56:00 AM
Post a Comment
<< Home