காதல் வலை - பகுதி 13
காதல் வலை - பகுதி 13
ஆமாம், அதை அதிர்ச்சி என்றே சொல்வேன், இன்பமாக என்னை வரவேற்ற என் தாய், தந்தை,
பாட்டி, தாத்தா, தங்கை, தம்பி, அனைவரின் அன்பிலும் திக்குமுக்காடிப்போனேன், ஆலம் கரைத்து
வைத்திருந்து என்னைவரவேற்றனர், என் தந்தை என்னை வரவேற்க தொடர்வண்டி நிலையத்திற்கே
கார் எடுத்து வந்திருந்தார். வீடு வந்த என்னை அம்மா, பாட்டி ஆலம்கரைத்து சூரைத்தேங்காய்
இட்டு கற்பூரம் காட்டி வரவேற்றனர், கண்களில் ஆனந்தக்கண்ணீருடன் இல்லம் நுழைந்தேன்.
அம்மாவின் கையால் ஒரு அருமையான உணவு உண்டு ஒரு குட்டித்தூக்கம். விடிந்ததும்
தோழர்களை சந்திக்க என் ஸ்ப்ளெண்டரை எடுத்துக்கொண்டு பறந்தேன்.
தோழர்கள், ஜான், முருகன், யேசு, எங்கள் உலகம் ஒரு தனி உலகம், ஒன்றாம் வகுப்பிலிருந்து
இன்றுவரை ஒன்றாகப்படித்து பழகி வருபவர்கள், எங்களுக்குள் மட்டும் எந்த வித பாகுபாடும்
பந்தாவும் , தற்பெருமையும் , உயர்வு தாழ்வும் கிடையாது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு பணியில்
இருந்தாலும், எங்கள் சந்திப்பிடத்தில் நாங்கள் அனைவரும் சமம், எங்களுள் வேற்றுமை கிடையாது,
சொல்லப்போனால் எனக்காக தனத்திடம் அவள் காலில் விழுந்து எனக்காக அவளிடம்
பேசியவர்கள், அவள் முடியாது என்று சொன்னநாளில் எனக்கு மட்டும் ஆறுதல் சொல்லிவிட்டு
என்னைவிட அதிகமாக தனிமையில் அழுதவர்கள். என் உயிர்கள். அவர்களுடன் தனமும்
சேர்ந்ததுதான் ஆச்சரியம், மேலும், அதிர்ச்சி என்று நான் சொன்னது, தனம்......என்னோடு மறுபடி
பேசியது, ஆம், ஊருக்குச்சென்ற மறுநாள் ஒரு அழைப்பு எனக்கு, "நான் ஈரோட்டில் இருந்து சத்யா
பேசறேன், ஈஸ்வர் இருக்காரா?" "நாந்தான் ஈஸ்வர் பேசறேன், சொல்லு சத்யா", "என்னை தெரியுமா
உங்களுக்கு?" "என்ன சத்யா இப்படி கேட்கற? மறக்கமுடியுமா உங்களை எல்லாம்?" எனக்கு சத்யா
என்று ஒரு இணையத்தோழி இருந்தாள், ஆனால் அதற்கு அடுத்து வந்த ஒரு குரல் என்னை
அதிர்ச்சிக்குள்ளாக்கியது அது "தனம்".
"எப்படி இருக்கீங்க?" "நான் தான் தனம் பேசறேன்", "என்னை நினைவிருக்கா?" எனக்கு ஒரு
நிமிடம் ஒன்றும் புரியவில்லை, "தனம்??? எப்படி இருக்கே? எங்க இருந்து பேசறே?", "நான் , என்
சித்தி வீட்டிலிருந்து பேசறேன், சத்யா முதல்முறையா உங்க கிட்ட பேசறா, எப்படி அவள
தெரிஞ்சமாதிரி பேசறீங்க? எத்தனை சத்யா உங்களுக்குத்தெரியும்?" என்னால் அவளுக்கு பதில்
கூறமுடியவில்லை உடனே, "என்னோட ஒரு இணையத்தோழி பேரும் சத்யா தான் தனம், அதுதான்
அவளா இருக்கும்னு நெனச்சி பேசிட்டேன், மன்னிச்சிடு" என்றவனை சரியாக கிண்டல் செய்தவள்,
என்னிடம் கூறிய அந்த செய்தியிலேதான் அந்த அதிர்ச்சியைக்கண்டேன், "எனக்கு திருமணம்
நிச்சயமாகி இருக்கின்றது ஈஸ்வர்", ஏனோ நான் எதிர்பார்த்த அந்த மொத்த அதிர்ச்சி இல்லை என்
மனதில், ஆச்சரியமாகவும் இருந்தது,அடுத்துஅவள் கூறியதும்தான் "ஈஸ்வர், நீங்களும் யார்னா ஒரு
நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணிக்கனும்", என்ன சொல்வதென்று தெரியவில்லை,
அதேசமயம் தனத்திடம் கூறுவதற்கு என்னிடமும் ஒரு செய்தி இருந்ததை மறக்கவில்லை. "தனம்,
நானும் உனக்கு ஒரு செய்தி வச்சிருக்கேன், சொல்லறதுக்கு", "என்ன? சொல்லுங்க", "நானும் ஒரு
பொண்ண கல்யாணம் செய்துக்கலாம்னு இருக்கேன்", "ரொம்ப சந்தோஷம் ஈஸ்வர்,அந்த அதிர்ஷ்ட
சாலி யாருன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?", "உனக்கும் தெரிஞ்ச பொண்ணுதான் அவ தனம்","யாரு?"
"மாது", அடுத்த கணம் இருள்விழுந்த முகத்துடன் என்னைப்பார்த்து "வேண்டாம் ஈஸ்வர், நீங்க வேற
யார வேணா கல்யாணம் செய்துக்கோங்க, மாது உங்களுக்கு வேண்டாம்" , மனதில் வெடிகுண்டு
போட்டது போல உணர்ந்தேன்....
தொடரும்... type="text/javascript">&cmt=3&postid=114323781419835009&blogurl=http://srishiv.blogspot.com/">
3 Comments:
ஸ்ரீஷிவ்,
சுவாரசியமாக உள்ளது. இது உண்மைக் கதையா?.
Saturday, March 25, 2006 1:17:00 AM
உண்மை கலந்த கதை முத்து,
நடந்துகொண்டிருக்கும் ஒரு கதை இது :)
ஸ்ரீஷிவ்..
வருகைக்கு நன்றி
Saturday, March 25, 2006 1:46:00 AM
நன்றி பல்லவி தங்களின் மேலான பின்னூட்டத்திற்கு,
தங்களின் உற்சாகத்தாலேயே நான் எழுதி வருகின்றேன், என் அடுத்த படைப்புகளையும் பாருங்கள், காதல் வலையைப்பொறுத்தவரை, இன்னும் திவ்யா வரவில்லை :), அவளும் வருவாள் பொறுத்திருங்கள், இது ஒரு முடிவு தெரிந்த நடந்துகொண்டிருக்கும் நிகழ்காலக்கதை, குழப்பமாக இருக்கின்றதா? ;) அடுத்த பகுதிக்கு காத்திருங்கள் புரியும்...
ஸ்ரீஷிவ்...
Monday, April 03, 2006 11:26:00 PM
Post a Comment
<< Home