இது ஒரு கருத்த இளைஞனின் வெளுத்த இதயப்பதிவுகள்...

Monday, April 03, 2006

செயற்கை கருப்பை - ஒரு வரம் தாய்மார்களுக்கு




தாய்மை என்பது எவ்வளவு புனிதமானது என்பது, அதனை அனுபவித்த , அனுபவிக்க காத்துக்கிடக்கும் பெண்களுக்கே அதிகம் புரியும், மருத்துவ ரீதியாக இதற்கு ஒன்றுமே செய்யமுடியாது, இது இறைவன் அளித்த சாபம், முன் ஜென்ம வினை என்று நினைத்து தன்னை நொந்துகொண்டிருக்கும் தாய்மார்களுக்கு நான் கூறிக்கொள்ள விழைவது, அந்த காலங்கள் கடந்துவிட்டன தாய்மாரே, இன்று உலகம் தன் அடுத்த பரிமாணத்தினை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றது, அதனைச்சுருங்கச்சொன்னால், முடியாது என்று நினைத்திருந்த எத்தனையோ விசயங்களுக்கு இன்று விடை கண்டிருக்கின்றான் மனிதன். தன் விஞ்ஞான மூளையின் மூலமாக, ஒரு காலத்தில் தீர்க்கவே முடியாத நோயாக பெரியம்மையை கூறுவார்கள், இன்று சுத்தமாக அந்த நோய் அழிக்கப்பட்டுவிட்டது, அதுபோல், இனி வரும் நாட்களில் குழந்தை இல்லை என்பதே இல்லை என்று ஆகும் காலம் நாம் வாழும் இந்த ஜென்மத்திலேயே கண்டு செல்வோம் என்றே தோன்றுகின்றது.

இப்பொழுது நாம் தலைப்பிற்கு செல்வோம், குழந்தை பெறுவதில் தாய்மார்கள் பெறும் பிரச்சனைகளை இரண்டு பெரும்பிரிவுகளாகப்பிரிக்கலாம், ஒன்று, தன் உடலில் கருப்பை இருந்து, தன் மாதாந்திர சுழற்சிகள் சரியாகவும் இருந்தபோதும், கணவனின் உயிரணுக்களின் எண்ணிக்கையோ அல்லது மனைவியின் உயிரணுவின் எண்ணிக்கையோ குறைவாக இருப்பின் இந்த பிரச்சனை வரலாம் , அல்லது, இரண்டாவதாக, கருப்பையே பிறவிமுதல் இல்லாமல், கருப்பை இருக்கவேண்டிய இடத்தில் ஒரு வெற்று சதைப்பட்டை மட்டுமே இருந்து , மாதாந்திர சுழற்சிகள் ஏதும் பெறாமல், இவை அனைத்தையும் தாண்டி கருமுட்டை உற்பத்தி செய்யும் உற்பத்திப்பைகளுள் ஒன்றோ , அல்லது இரண்டுமோ சேதமடைந்த நிலையில் குழந்தை பிறக்க பிரச்சனைகள் என்றோ, இருக்க வாய்ப்புகள் உண்டு.


இன்றைய விஞ்ஞானம் இதற்கான ஒரு அற்புதமான வழிமுறையை வரமாக நமக்கு கண்டளித்திருக்கின்றது. முதல் பிரச்சனைக்கு வழி, உயிரணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது, செயற்கையாக மருந்துகளின் மூலம். மற்றும் ஒரு சாக்குப்பை போல உயிரணு உற்பத்தி தலத்தில் அவற்றை பிடித்து வைத்திருக்கும் சிஸ்ட்டுகளை (cysts) அங்கிருந்து நீக்குவதன் மூலம், கருவினை நன்கு வளரவிட்டு உறவின்போது விந்துடன் இந்த அண்டத்தினை இணையவிடுவதுடன் குழந்தை உருவாக வழி செய்யலாம். அல்லது கருவை செலுத்தி உறைத்தல் முறையில் (invitro fertilization) பலகீனமாக இருக்கும் தாயின் கருப்பையினுள் ஆணின் உயிரணுவை பலவந்தமாக ஒரு ஊசியின் மூலம் புகுத்தி இரண்டையும் இணையவிட்டு கருவை உருவாக்கி குழந்தை உருவாக்கலாம். அல்லது , இருவரின் உயிரணுக்களையும் வெளியே எடுத்து, உறைதல் மூலம் ஒரு சோதனைக்குழாயில் இணைத்து அதனை தாயின் கருப்பையினுள் மீண்டும் வைத்து வளரவைக்கலாம். இப்படி பல வழிமுறைகள் உள்ளன.


இப்போது இரண்டாம் வகையினரைப்பார்ப்போம், பிறப்பிலேயே கருப்பை இல்லாது இருத்தல், மாதாந்திர சுழற்சி இல்லாமலிருத்தல், கருமுட்டை உற்பத்தி செய்யும் உற்பத்திப்பைகளூள் ஒன்றோ , அல்லது இரண்டுமோ பலஹீனமாகவோ அல்லது சேதமடைந்த நிலையிலோ இருப்பினும், குழந்தை உருவாக வாய்ப்புகள் உண்டு, முதலில் கருமுட்டை உற்பத்தி செய்யும் உற்பத்திப்பைகள் ஆங்கிலத்தில் ஓவரீஸ் (ovaries) என்று சொல்வர், பலவீனமாக இருப்பின் அவற்றினை தூண்டிவிட பல சிகிச்சைமுறைகள் வந்துவிட்டன, ஒரு தேர்ந்த மகப்பேறு மருத்துவரை அணுகினால் ஓவரி இண்டியூசிங் எனும் கரு உற்பத்தியை தூண்டுதல் முறைமூலம் உற்பத்திப்பையினுளளிருககும் கருமுட்டையை தூண்டிவிட்டு இனப்பெருக்கத்திற்கு அதனை தயார் செய்யலாம். அடுத்த வகையான கருப்பையே இல்லாமல் இருத்தல் என்ற வகைக்கு இப்போது அற்புதமான ஒரு மாற்று கண்டறிந்திருக்கின்றனர் விஞ்ஞானிகள், கருப்பை மாற்று சிகிச்சை, கேட்பதற்கு ஆச்சரியமாக இருக்கலாம் ஆனால் இது உண்மையாகிக்கொண்டிருக்கின்றது இன்று, நீங்கள் இந்த கட்டுரையை படிக்கும் சமயம் அது முழுமையடைந்திருக்கக்கூடும், நான் சமீபத்தில் கண்ட ஒரு ஆய்வறிக்கை , கிங் ஃபஹத் மருத்துவமணை, ஜெடா, சவூதி அரேபியாவில் இருக்கும் மருத்துவர்குழுவினர் வெற்றிகரமாக ஒரு கருப்பை மாற்று சிகிச்சையினை 2000,ஏப்ரல் மாதத்தில் ஒரு 26 வயது பெண்மணிக்கு 46 வயது பெண்மணி ஒருவரின் கருப்பையை மாற்றி வைத்து வெற்றிகரமாக சிகிச்சையினை முடித்திருக்கின்றனர், ஒரு 99 நாட்களுக்கு பின்னர் அவரின் ரத்தக்குழாயில் எற்பட்ட ஒரு சிறு அடைப்பினால் அதனை நீக்கவேண்டி வந்தாலும், அறுவை சிகிச்சை வெற்றி , மேலும் அது இயல்பாக இயங்கி வந்திருக்கின்றது, அவர்கள் தங்கள் ஆய்வில் கூறியது,
""Our clinical results with the first human uterine transplantation confirm the surgical technical feasibility and safety of this procedure," say the team of surgeons at the King Fahad Hospital and Research Center in Jeddah. They think refinements to the surgical procedure should overcome the blood supply problems."

இதற்கான சுட்டி : http://www.newscientist.com/article.ns?id=dn2014
இந்த ஆய்வின் இறுதியில் சொல்லியது என்னவென்றால் இன்னும் அதிகபட்சம் மூன்று ஆண்டுகளில் (2000 ஆண்டில் இருந்து) இந்த ஆய்வு முழுமை பெற்றுவிடும் என்று, எனவே இந்த கட்டுரையை தாங்கள் படிக்கும் நேரம் அது முழுமை அடைந்திருக்கும் வாய்ப்புகள் அதிகம்.இது தாங்களே குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பவருக்கே, சிறிது பரந்த மனப்பான்மை இருப்பவர்கள், வாடகைத்தாய் என்னும் முறையை கையாண்டு தங்கள் கருவினை ஒரு வாடகைத்தாயின் வயிற்றில் வைத்து வளர்த்து பெற்றெடுத்துக்கொள்ளலாம், அதனை சட்டப்படி உங்கள் குழந்தையாக்க தத்தெடுத்தல் முறைப்படியோ அல்லது தங்களே நேராக எடுத்துக்கொள்வதோ தங்கள் வசதி. பலர் கருப்பை இல்லை என்றால் முட்டை எப்படி உருவாகும் என்ற சந்தேகத்தினை கேட்கலாம், அதற்கு என் பதில், கருப்பை இல்லை என்றாலும் முட்டை உருவாகும், ஏனெனில் முட்டை உருவாவது சினைப்பைதானேயன்றி கருப்பை அல்ல.

மேலும், செயற்கை கருப்பை என்று ஒரு ஆய்வும் இணையாக நடந்து வருகின்றது, அதில் என்ன சொல்கின்றனர் எனில், செயற்கை இதயம், செயற்கை மூட்டு, செயற்கை கண் போல செயற்கை கருப்பையும் சாத்தியமான ஒன்று என்று விஞ்ஞானிகள் கூறி அவ்வாராய்ச்சியில் முக்கால் பகுதியை தாண்டிவிட்டனர், சென்றவருடத்தின் நேச்சர் (இயற்கை) இதழ் தன் பதிப்பில், ஒரு புதிய மெம்ப்ரேனை (சவ்வு) விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருப்பதாகவும் அது செயற்கை கருப்பை உற்பத்திக்கு தகுதியானது என்றும் வெளியிட்டிருந்தது, எனவே அந்த ஆராய்ச்சியும் இன்னேரம் முடிந்திருக்க வாய்ப்புண்டு, எனவே, தாய்மாரே கவலை வேண்டாம் இனி குழந்தை இல்லை என்று, தேடுங்கள் கிடைக்கும், உங்கள் குழந்தை உங்களீன் தேடலுக்காக உங்களுக்குள் காத்திருக்கின்றது, நீங்கள் தயாரா? உடன் செயல் படுங்கள், இன்னும் பல செய்திகளுடன் விரைவில் வருவேன், இதுபற்றி தங்களுக்கு தெரிந்த கருத்துக்களையும் இந்த இழையில் பகிர்ந்துகொள்ளலாமே?
வணக்கங்களுடன்,
ஸ்ரீஷிவ்...:)
type="text/javascript">&cmt=14&postid=114408355637261172&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

14 Comments:

Blogger Chandravathanaa said...

பயனுள்ள பதிவு.

Thursday, April 13, 2006 12:37:00 AM

 
Blogger Chandravathanaa said...

ஸ்ரீஷிவ்
உங்கள் கட்டுரை எனது மகளிர் பகுதிக்குப் பொருத்தமானதாகவும், பயனுள்ளதாகவும் இருப்பதால் அங்கு இதைப் பதிந்துள்ளேன்.
ஆட்சேபனை இருப்பின் தெரியப் படுத்துங்கள்.

http://mahalir.blogspot.com/

Thursday, April 13, 2006 12:48:00 AM

 
Blogger Dr.Srishiv said...

அன்பின் அம்மா
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி, எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை, தாங்கள் தாராளமாக இக்கட்டுரையை பயன்படுத்திக்கொள்ளலாம், மேலும் என் அடுத்துவரும் கட்டுரையான சினைப்பை மாற்று அறுவை சிகிச்சை பற்றிய கட்டுரையையும் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன், நன்றி.
ஸ்ரீஷிவ்...

Thursday, April 13, 2006 1:00:00 AM

 
Blogger Chandravathanaa said...

நன்றி srishiv
கட்டுரையை எழுதி விட்டு எனக்கும் தெரியப் படுத்துங்கள்.

Friday, April 14, 2006 7:46:00 AM

 
Blogger Unknown said...

This is an informative post shiva.I dont know why such informative posts dont get many responses from bloggers.I will use it as a link when I post about women's health issues in my blog.

Good job.

Monday, May 01, 2006 10:55:00 PM

 
Blogger Dr.Srishiv said...

Thanks for the reply sampath, its ok, as thulasi amma used to say, when i become a great writer/scientist, the people will search for my writings, then in that time my blog will help them to realise what is happening around and what was there in my mind in the past , for that only these blogs ;)
srishiv...:)

Tuesday, May 02, 2006 3:22:00 AM

 
Blogger Sivabalan said...

Really good work!!


Keep up11

Wednesday, May 03, 2006 1:16:00 PM

 
Blogger Dr.Srishiv said...

நன்றிகள் சிவபாலன்,
தங்கள் வருகைக்கும் ஊக்கத்திற்கும்,
வணக்கங்களுடன்,
ஸ்ரீஷிவ்...:)

Thursday, May 04, 2006 2:36:00 AM

 
Blogger  வல்லிசிம்ஹன் said...

ஸ்ரி ஷிவ், உங்களை தேசிகன்.காம் பின்னூட்டங்களில் பார்த்து இருக்கிறென். எதையுமே உடனுக்கு உடன் கருத்து பதிவு செய்யும் உற்சாகம் ,மகிழ்ச்சி தரும்.அதைப் போல் இந்தப் பதிவும் நெகிழ்ச்சி தரும் முக்கியமான விஷயம்தான்.நிறைய பேர்வந்து படிக்கணும்.பயன் அடைய வேண்டும்.

Saturday, May 13, 2006 9:39:00 PM

 
Blogger நாமக்கல் சிபி said...

ஸ்ரீசிவ்,

பொருத்தமான பதிவு நன்றி.

Saturday, May 13, 2006 10:21:00 PM

 
Blogger Dr.Srishiv said...

அன்பின் வள்ளி மற்றும் சிபி,
நன்றிகள் பல, தங்களின் வாழ்த்துக்களுக்கும் பின்னூட்டத்திற்கும், இந்த பதிவினை நான் சென்றமாதமே பதிந்திருந்தாலும், இன்று அன்னையர் தினமாமே? துளசி அம்மா தான் சொன்னார் :), அதனால் இந்த பதிவினை தாய்மார்கள் அனைவருக்கும், மற்றும் விரைவில் தாயாகவிருக்கும் வருங்கால அன்னையர்க்கும் சமர்ப்பிக்கின்றேன்...:)
சிபி மீண்டும் என் பதிவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி, வள்ளி அவர்களுக்கும் சிறப்பு நன்றீ, என் பதிவிற்கு முதன்முறையாக வருகை தந்தமைக்கு :)
அனைத்திற்கும் மேலாக, இந்த பதிவினை தன் பதிவில்போட்டு என்னை மேன்மைபடுத்திய துளசி அம்மாவிற்கு கோடானுகோடி நன்றிகள்...:)
ஸ்ரீஷிவ்...:)

Saturday, May 13, 2006 11:40:00 PM

 
Blogger தருமி said...

துளசி அவர்களின் இன்றைய பதிவின் மூலம் உங்கள் பதிவுக்கு இன்று வந்துள்ளேன் - முதல் முறையாக.

மிக்க சந்தோஷம் உங்கள் பதிவுகளைப் பார்த்து..இல்லை இல்லை படித்து!

என்ன, பிடித்த அந்த 4 நடிகர்கள்தான் எனக்குப் பிடிக்கலை. அதற்கென்ன நீங்கள் என்ன செய்ய முடியும்?

1800 ரூபாய்க்கு சூடிதார்? அதிர்ஷ்டக்கார தங்கை!

விரைவில் M.I.T. செல்ல வாழ்த்துக்கள்.

சிகரெட் -ம்ம்..ம்ம் இதப் படிச்சுப் பாருங்க. திருந்துங்க'ப்பா!

அஸ்ஸாம் திரைப்படங்கள் மூன்று நான்கு மட்டும் D.D. T.V.யில் பார்த்து பிரம்மித்திருக்கிறேன்.

Sunday, May 14, 2006 1:18:00 AM

 
Blogger siva gnanamji(#18100882083107547329) said...

பயனுள்ள பதிவு...வாழ்க!

Sunday, May 14, 2006 11:07:00 AM

 
Blogger Dr.Srishiv said...

அன்பின் தருமி ஐயா
தங்களின் அன்பான பதிலுக்கு மிக்க நன்றி, தங்களின் வலைப்பூவை நானும் படித்ததில்லை ஆயினும் தங்களைப்பற்றி துளசி அம்மா வலைத்தளத்தில் உங்கள் சந்திப்பு பற்றி எல்லாம் எழுதி இருந்தது பற்றி படித்து தெரிந்து வைத்திருந்தேன், தாங்களே என் பதிவில் பின்னூட்டமிட்டது கண்டு மிக்க மகிழ்ச்சி, புகைப்பழக்கம் ஹிஹிஹி....நன்றிகள் பல , ஐயா, மேலும் சிவஞானம்ஜி என்று என் சகோதரரின் பெயர் கொண்டவருக்கும் நன்றிகள் பல, நான் வாரம் ஒருமுறையேனும் படிக்க மறக்காத டி.ஆர்.பி.ஜோசப் சார் அவர்கள் என் வலைப்பூவினை படித்திருப்பார் என்றே எண்ணுகின்றேன்...நன்றி...
ஸ்ரீஷிவ்...@சிவா...:)

Sunday, May 14, 2006 11:35:00 AM

 

Post a Comment

<< Home

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது