குவஹாத்தியில் வலைப்பதிவர்கள் சந்திப்பு (11-6-2006)
அன்பிற்கினிய சினேகிதத்திற்கு
வணக்கம், வாழிய நலம், ஸ்ரீஷிவ் அஸ்ஸாம், குவஹாத்தியிலிருந்து, வணக்கம் , ஒரு செய்தியை உங்களிடம் பகிர்ந்துகொள்ள நினைத்தேன், வரும் ஞாயிறு (11-06-2006) அன்று குவஹாத்தியில் வடகிழக்கு மானில வலைப்பதிவர்கள் சங்கத்தின் முதலாம் சந்திப்பு நிகழ இருக்கின்றது, நம் தோழர் தமிழ் சத்திரம் சிவக்குமார் அவர்களின் தகவலால் அவர்களை நானும் தொடர்புகொண்டேன், எனக்கும் ஒரு அழைப்பு வந்திருக்கின்றது, விசயம் என்னவென்றால், நம் தமிழ் வலைப்பதிவுகளைக்கண்டு அவர்கள் மிகவும் அதிசயித்து போயினர், பிராந்திய மொழியில் வலைப்பதியமுடியுமா என்று கேட்டு நம் தமிழ் வலைஞர்களையும் சந்திக்க ஆர்வம் கொண்டனர், எனவே எனக்கும் ஒரு அழைப்பு வந்தது. அவர்களின் அழைப்பினை ஏற்று நானும் அந்த சந்திப்பில் கலந்துகொள்கின்றேன். விசயம் இனிமேல்தான், :) அந்த சந்திப்பில் நான் தமிழில் வலைப்பதிவு பற்றி ஒரு சிற்றுரையாற்றுகின்றேன். மேலும், பிராந்திய மொழிகளில் எப்படி ஒருங்குறியில் வலைப்பதிவது என்ற தொழில்நுட்பமும் அவர்களுக்கு என் மடிக்கணினி மூலம் விளக்குகின்றேன்.
அவர்களின் மொழிக்கான உழுகலப்பையையும் தரவிரக்கம் செய்துவிட்டேன், நமது எ கலப்பை போன்றதுவே அதுவும்.அவர்களுக்கு அதனையும் விளக்கப்போகின்றேன், முடிந்தால் சந்திப்பு முடிந்ததும் சில புகைப்படங்களையும் தங்கள் பார்வைக்கு படைக்கின்றேன், அவர்களின் வலைப்பூ தொகுப்பனை அறிய www.bihu.in என்ற தளம் சென்று பார்க்கவும், நன்றி , இந்த பகுதியில் யாரேனும் தமிழன்பர்கள் இருந்தால் என்னை தனிமடலில் தொடர்புகொள்ளவும், அவர்களையும் அழைத்துச்செல்கின்றேன், மேலும், நம் தமிழ்மணம் மற்றும் தேன்கூடு போன்ற வலைப்பூ திரட்டிகளை அவர்களுக்கு அறிமுகம் செய்துவைத்து, சில வலைப்பதிவர்களின் வலைப்பூக்களையும் அவர்களுக்கு காட்டலாம் என்று உள்ளேன், துளசி அம்மா, மஞ்சூர் அண்ணன், நடேசன் ஐயா, கீதாம்மா, ராமா மற்றும் செல்வன் போன்றோரின் வலைப்பூக்களை காட்டலாம் என்று இருக்கின்றேன், நன்றி தோழர்களே இது உங்கள் தகவலுக்கு...
ஸ்ரீஷிவ்... type="text/javascript">&cmt=12&postid=114985179582590685&blogurl=http://srishiv.blogspot.com/">
12 Comments:
ஸ்ரீஷிவ் சார் வாழ்த்துக்கள்.
எட்டு திக்கிலும் தமிழை கொண்டு செல்லுங்கள்.
மேலும் ஒரு தட்டச்சு சாதனம்
இங்கே
Friday, June 09, 2006 4:33:00 AM
நன்றி சிவமுருகன்,
தரவிரக்கம் செய்து என் மடிக்கணினியில் எடுத்துச்சென்று காட்டுகின்றேன் அவர்களிடம், தங்களின் வலைப்பதிவினையும் என் செயல்விளக்கத்தில் சேர்த்துக்கொள்ள தங்கள் அனுமதி உண்டு என்றே நினைக்கின்றேன்...:)
ஸ்ரீஷிவ்..:)
Friday, June 09, 2006 4:42:00 AM
உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Friday, June 09, 2006 4:45:00 AM
கூற மறந்து விட்டேன். எனது வலைப்பூவையும் நீங்கள் விரும்பினால் உபயோகித்துக் கொள்ளலாம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Friday, June 09, 2006 4:46:00 AM
அவசியம் சேர்த்துக்கொள்கின்றேன் ஐயா, மிக்க நன்றி தங்களின் வருகைக்கு, என் தந்தையிடம் நீங்கள் கூறியது போலவே நடந்து கொண்டது மிகுந்த பலன் அளித்திருக்கின்றது, தான் ஓய்வு பெற்றதனை அவர் மற்றவர்களுக்கு பாரமாக நினைக்காத அளவிற்கு அவருக்கு மனதளவில் என் வார்த்தைகளால் வலிமைதர வழிகாட்டியமைக்கு நன்றிகள் பல...
ஸ்ரீஷிவ்..
Friday, June 09, 2006 4:54:00 AM
திக்கெட்டும் தமிழ்முழக்கம் செய்ய நீங்கள் செய்யும் சேவை போற்றுதலுக்குறியது.யாம் பெற்ற இன்பம் நம் சக இந்தியரும் பெறட்டும்.வாழ்த்துக்கள்!!
Friday, June 09, 2006 5:09:00 AM
நன்றி மணியன் ...:)
ஸ்ரீஷிவ்..
Friday, June 09, 2006 5:14:00 AM
வாழ்த்துக்கள் ஷிவ்
வெல்க உங்கள் முயற்சி
Friday, June 09, 2006 5:21:00 AM
நன்றிகள் ஞானம் :)
ஸ்ரீஷிவ்...
Friday, June 09, 2006 5:26:00 AM
//தங்களின் வலைப்பதிவினையும் என் செயல்விளக்கத்தில் சேர்த்துக்கொள்ள தங்கள் அனுமதி உண்டு என்றே நினைக்கின்றேன்...:)//
உங்களுக்கில்லாததா! நிச்சயமாக உண்டு.
Friday, June 09, 2006 5:28:00 AM
நன்றி உமா...:)
Friday, June 09, 2006 1:23:00 PM
நல்வாழ்த்துக்கள் சிங்கப்பூரிலிருந்து.
Friday, June 09, 2006 7:40:00 PM
Post a Comment
<< Home