விளக்கம் தேவை பிளீஸ்....
இனிய தோழமைக்கு,
வணக்கம் வாழிய நலம்,சில சிறு சிறு சந்தேகங்கள் , தமிழில் வந்து நம் தூக்கத்தினைக்கெடுத்துக்கொண்டிருக்கின்றன, அவற்றிற்கான விளக்கங்களை தமிழறிந்தோர் இயம்பினால் மகிழ்வேன்...சந்தேகங்கள்..
1) வேட்டையாடு விளையாடு படத்தில் வரும் "பார்த்த முதல் நாளில்...."பாடலில் வரும் "பதாகை தாங்கிய உன்முகம் உன் முகம் என்றும் மறையாதே.." என்ற வரிகளில் பதாகை என்றால் என்ன?
2) காக்க காக்க என்ற படத்தில் வரும்"ஒன்றா ரெண்டா ஆசைகள்...." என்ற பாடலின் " கலாபக்காதலா..." என்ற வரியின் கலாபக்காதலன் என்றால் என்ன பொருள்?
விளக்கம் தெரிந்தவர்கள் விளக்கமளிக்க வேண்டுகின்றேன், பிளீஸ்....:)
ஸ்ரீஷிவ்... type="text/javascript">&cmt=6&postid=115259927737366544&blogurl=http://srishiv.blogspot.com/">
6 Comments:
பதாகை= கொடி
Tuesday, July 11, 2006 12:09:00 AM
இப்படி மொட்டையாக சொன்னால் எப்படி அம்மா?
"என் பதாகை தாங்கிய உன் முகம் என்றும் மறையாதே" என்பதன் பொருள்?
Tuesday, July 11, 2006 12:31:00 AM
நண்ப,
பதாகை = கொடி
என் மனமாகியிய பதாகையில் வைத்து நான் தாங்கிய உன் முகம் என்று பொருள் படும்.
கலாபக்காதலன் பற்றிய விளக்கங்களுக்கு கலாபக்காதலன் படத்தை DVD இல் பார்க்கவும்
மூர்த்தி
Tuesday, July 11, 2006 3:25:00 AM
விளக்கம் சொன்ன மூர்த்தி அண்ணனுக்கு நன்றி :), ஆனால் கலாபக்காதலன் படத்தை தரவிரக்கம் செய்து பார்த்தும் எனக்கு அது ஒன்றும் புரியவில்லை? :( மேலும் காழியூர் ஐயா கூறிய விளக்கம் வேறுமாறாக அல்லவா உள்ளது? பதாகை தாங்கிய என்ற பதத்திற்கு? நம் முத்தமிழ் குழுமத்தில் அரட்டை அரங்கம் பகுதியில் பார்த்தால் புரியும் என்றே நினைக்கின்றேன்...நன்றி அண்ணா
ஸ்ரீஷிவ்..
Tuesday, July 11, 2006 3:49:00 AM
நன்றி வேதா
தங்களின் வருகைக்கு, எங்கள் முத்தமிழ் குழுமத்தில் பலரிட்ட பதில் கலாபம் என்றால் மயில், மயில் போன்ற காதலன் என்று பொருள் கூறினர், நன்றி..பதாகைக்கும் முற்றிலும் மாறுபட்ட ஒரு பதில் கேட்டு முழுதிருப்தியடைந்தேன், நன்றீ :)
ஸ்ரீஷிவ்..
Wednesday, July 19, 2006 10:57:00 PM
கலாபம் என்றால் மயில் தோகை. மயில் தோகை போன்ற மென்மையான காதலன் என்று பொருள்.
Monday, April 03, 2017 4:00:00 AM
Post a Comment
<< Home