காதல் வலை - பகுதி 14
காதல் வலை - பகுதி 14
"ஏன் தனம்? ஏன் மாதுவ வேண்டாம்னு சொல்லற??
எனக்குப்பிடிச்சவங்க கூடதானே நான் குடும்பம் நடத்த முடியும்?"
"இல்ல ஈஸ்வர், வேண்டாம், எனக்கு பிடிக்கல"
"உனக்கு பிடிக்கலைன்னா எனக்கு கவலை இல்ல தனம், அவதான் நான் உடைஞ்சி இருந்தப்ப என் கூட என் தோளா இருந்தவ, அவளுக்கு என் வாழ்க்கைல இடம் இல்லைன்னா வேற யாருக்கும் நான் இடம் கொடுக்கறதா இல்லை தனம்."
மனதில் இருந்ததை தெளிவாக தனத்திடம் எடுத்துக்கூறிவிட்டு வெளியே நடந்தபோது, ஏதோ மனதில் ஒரு தெளிவு, மாது.....எங்க, எப்படி இருக்க? ....செல்லத்தொலைபேசியை எடுத்து அவளின் விடுதியை தொடர்பு கொண்டபோது, ஊருக்குச்சென்றிருப்பதாகச்சொன்னார்கள்.
இரண்டு நாள் கழித்து மீண்டும் தொடர்பு கொள்ள, வந்துவிட்டதாகச்செய்தி...வெளியில் எங்கோ ஏதோ வாங்கிவரச்சென்றிருப்பதாகச்சொன்னார்கள், அன்று மதியமே பேருந்தினைப்பிடித்து சென்னைக்கு கிளம்பினேன், மாலை 6.30, பாரி முனை பேருந்து நிலையம், இறங்கி அவளின் விடுதிக்கு அழைக்க, வந்து அந்த கிளி தத்தை மொழி பேசியது. எப்டி இருக்க ஈஷ்? வீட்ல எல்லாரும் சௌக்கியமா? என்னோட நாத்தனார் எப்படி இருக்காங்க? நல்லா படிக்கறாங்களா ஐ ஏ எஸ்க்கு? ஏதேனும் சந்தேகம் இருந்தா எனக்கு ஒருமுறை தொலைபேசி செய்து பேசச்சொல்லுங்க " , ஹா ஹ ஹா, என்ன கிண்டல்டி உனக்கு? என்றபடியே, மறுநாள் அவளை எங்கு சந்திக்கலாம் என்று வினவினேன்.
"பாரீஸ் கார்னர் க்கு வந்திடு ஈஷ், அங்க இருக்கற என்னோட கம்ப்யூட்டர் இன்ஸ்ட்டிட்யூட்லயே நாம் சந்திக்கலாம்"
"எத்தனை மணிக்கு?"
"காலைல ஒரு 10.30க்கு வாயேன், அப்போதான் எனக்கும் கிளம்பி வர்றதுக்கு சரியா இருக்கும்"
இரவு, அக்கா சமைத்துப்போட்ட சங்கரா மீன் குழம்பினையும் , வருவலையும் ஒரு வெட்டு வெட்டிவிட்டு, சன் தொல்லைக்காட்சியில் ஏதோ ஒரு படம் பார்த்தபடியே உறங்கிப்போனேன்.மறுநாள் காலை 9 மணிக்கு அக்கா வந்து எழுப்பினார்கள்.
"ஏய் தம்பி, எழுந்திருடா, காலைல பாப்பாவ பார்க்கப்போவனும்னு சொல்லிக்கிட்டு இருந்தியேடா, மணி 9 ஆச்சி எழுந்து கிளம்பினாத்தான் சரியா இருக்கும் டா"
"என்னது? 9 ஆச்சா? "
பதறியபடி எழுந்து பல் விளக்கி, சூடாக அக்கா சுட்டுப்போட்ட தோசையை, கடலை, தேங்காய், கொத்துமல்லி, பச்சைமிளகாய், உப்பு, பூண்டு, புளி போட்ட சட்னியில் தொட்டு தொட்டு ஒரு 4 தோசையை உள்ளுக்குத்தள்ளி வெளியே கிளம்பினேன்.
7B பேருந்து கூட்டமாக இருந்தாலும் ஃபுட்போர்ட் ரொம்ப நாளுக்கு அப்புறம் சந்தோசமாக அடித்து , பாரிமுனை வந்திறங்கி அவளை செல்லத்தொலைபேசியில் தொடர்பு கொண்டேன், தவறுதவறு, அவள் என்னைத்தொடர்புகொண்டாள், "எங்கே இருக்க? " " மணி இப்பவே 11 ஆச்சிடா, நீ எப்போ வந்து நாம எப்போ வெளிய போறது? இன்னைக்கு நீ என்ன வெளியகூட்டிக்கிட்டு போனமாதிரிதான்"
செல்லில் பேசியபடியே அவள் பேசிக்கொண்டிருந்த கடை வாயிலை அடைந்தேன், கை காட்டியபடியே வெளியே ஓடிவந்தவளின் கையில் ஒரு சிறிய கைப்பை. அவளின் பயிலகம் சென்று அந்த படிகளில் அமர்ந்தபடி, அவள் கை பிடித்து பேசிக்கொண்டிருந்தேன். சற்று நேரத்தில் அவள் கையில் வைத்திருந்த சிறிய கைப்பையில் கைவிட்டு " ஒரு சின்ன கிஃப்ட்" என்றவாரே வெளியே எடுத்தவளின் கையில், கல்கியில் இருந்து கத்தரிக்கப்பட்ட " சிவகாமியின் சபதம்" தொடர்கதை, வாங்கி பத்திரமாக என் பையில் வைத்துவிட்டு, நான் வாங்கிச்சென்றிருந்த சாம்பல் வெள்ளை கலந்த ஒரு பெங்காலி காட்டன் புடவையை அவள் கையில் வைத்தேன்.
"வெள்ளை புடவை வேண்டாம் டா, அபசகுணமா இருக்கு, வேற கலர்ல அப்புறமா வாங்கிக்கொடு"
"சரி , எங்கன்னா கிளம்பலாம், எங்கே போவலாம்? "
"மணி, 12 ஆச்சி, சாப்பிடப்போகலாமா? "
"சரி, சரி, எப்பவும் சாப்பாட்டிலயே இரு, சரி வா போலாம்"
ஆட்டோ பிடித்து, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இருந்த அபு பேலஸ் நட்சத்திர உணவகத்திற்கு விடச்சொன்னேன். முதன்முறையாக நட்சத்திர விடுதியில் சாப்பிடுகின்றாள் என் தேவதை, எனக்குள் பட்டாம்பூச்சிகள் பறந்தன, போய் அமர்ந்து, வழக்கம் போல இரண்டு தட்டு தயிர் சாதம் ஆர்டர் செய்துவிட்டு, அரை இருளில் அமர்ந்திருந்தோம், நாங்கள் இருவர் மட்டுமே, மீண்டும் ஒருமுறை அந்த மாயாஜாலப்பை திறந்துகொள்ள, இந்த முறை அழகான ஒரு சிறிய கிஃப்ட் பேக், என் கையைப்பிடித்து அழுத்தி வைத்தவள், திறந்துபார்க்கச்சொன்னாள்.
மெதுவாகத்திறந்தவன் அப்படியே மலைத்துப்போனேன், உள்ளிருந்து பீத்தோவானின் 5 ஆம் சிம்பொனி இசையுடன் இரண்டு சிறிய குழந்தைகள் பொம்மைகள், மஞ்சள் ஒன்று பச்சை ஒன்று , சுற்றி சுற்றி வந்து முத்தமிட்டன....அப்படியே மனம் குளிர்ந்து அவள் கைப்பிடித்து முத்தமிட்டேன்...கூச்சத்துடன் கையை விலக்கிக்கொண்டாள் என் தேவதை.....
தொடர்வேன் விரைவில்.....:)என்ற நம்பிக்கையுடன் ;)
ஸ்ரீஷிவ்...:)
PS: மன்னிக்க வேண்டும், ரொம்ப மாதங்களுக்குப்பின் (மார்ச் 24 -2006க்குப்பின்) இன்று சிறிது மூடும், நேரமும் கிட்டியதால் இந்த பகுதியை உங்கள் முன் சமர்ப்பிக்கின்றேன், விரைவில் அடுத்த பகுதியுடன் சந்திக்கின்றேன்...பிரியமுடன், ஸ்ரீஷிவ்.. type="text/javascript">&cmt=3&postid=115377141843656609&blogurl=http://srishiv.blogspot.com/">
3 Comments:
ரொம்ப நாளுக்கு அப்புறம் எழுதி இருக்கேன், தாமதத்திற்கு மன்னிக்கவும்
ஸ்ரீஷிவ்...
Tuesday, July 25, 2006 2:36:00 AM
அன்பின் பல்லவி,
நன்றிகள் தங்கள் பின்னூட்டத்திற்கு :),அந்த பொம்மையும் கூட ஒரு காரணம், அது தினமும் காலை என் கண்ணில் படும், உண்மை சொன்னால் நான் இந்த பகுதியில் போட்டிருக்கும் பொம்மைகள் போன்றே இருக்கும் அந்த பொம்மைகள், அவற்றை நாளை என் புகைப்படக்கருவியில் படம் எடுத்து மாற்றிப்போடுகின்றேன், மேலும், மாதுவிடம் சமீபமாகத்தான் தொலைபேசியில் பேசினேன், அதன் விளைவே அடுத்த பகுதி, இங்கு இடப்படுகின்றது, நன்றி
ஸ்ரீஷிவ்...:)
Wednesday, July 26, 2006 9:06:00 AM
தொடந்து எழுதுங்க தலை..!!
Monday, November 06, 2006 9:57:00 PM
Post a Comment
<< Home