ஸ்வதேஷ் - ஒரு கண்ணோட்டம்
ஸ்வதேஷ் - ஒவ்வொரு அயலகத்திருக்கும் இந்தியனின் கனவாகவேண்டிய படம்.

அருமையான ஒரு திரைப்படம், ஏற்கனவே பார்த்திருந்தாலும், இன்று மீண்டும் தரவிரக்கம் செய்து பார்த்தேன், மனம் மிக திருப்தியடைந்தது. இனிமையான ஒரு கதை, ஷாருக்கான் கதாநாயகனாக நடித்த ஒரு கதை, அயல் நாட்டில் ( அமெரிக்கா) ஒரு விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் ( நாசா) விஞ்ஞானியாக பணிபுரியும் கதாநாயகன், தன்னை எடுத்து வளர்த்த ஒரு மூதாட்டியைக்காண இந்தியா வருகின்றான். சிறுவயதிலிருந்தே அதிகமாக ஏழ்மையைக்கண்டறியாத ஒரு வாலிபன், இந்தியாவின் பின் தங்கிய கிராமத்தினில் தன் மூதாட்டி இருப்பதை அறிந்து அவரை சந்திக்கச்செல்கின்றான்.
அந்த கிராமத்தில் மின்சாரம் இல்லை, தொலைத்தொடர்பு இல்லை, ஒரு தொலைபேசிக்கு கூட 10, 12 கி.மீ சென்று அங்கிருக்கும் ஒரு அஞ்சல் நிலையத்தில் இருந்தே தொலைபேசவேண்டிய கட்டாயம், அங்கு ஒரு அழகிய அறிவான பெண் ஒருவளையும் காண்கின்றான். இந்தியாவைவிட்டு எந்த காரணத்திற்கும் வெளியேறமாட்டேன் என்ற ஒரு எண்ணத்தோடு ஒரு சிறு பள்ளியில் ஆசிரியையாக பணி புரிபவள் அவள். அவளின் வீட்டில்தான் இந்த மூதாட்டி இருக்கின்றார் என அறிந்து அவரை சந்தித்து அவனுடன் அன்னிய தேசத்திற்கு அழைக்கின்றார், வரமுடியாத காரணத்தினை அன்பாக தெளிவாக உரைக்கின்றார். அந்த கிராமத்தில் ஒரு பெரியவர் , நாயகி பணிபுரியும் பள்ளியின் தலைமையாசிரியர். அந்த கிராம முன்னேற்றத்திற்காக பாடுபடுகின்றார். ஒரு நாளில் நாயகன் அந்த கிராமத்திற்கு மின்சாரம் கொண்டுவர நினைக்கின்றான். அதற்காக அவன் மேற்கொள்ளும் பயணத்தில் காணும் காட்சிகள் அவன் மனதினை மாற்றுகின்றன, இறுதியாக அவனாகவே முயன்று கிராமத்திற்கு எப்படி மின்சாரம் தயாரிக்கின்றான்? ( கொண்டுவருகின்றான்), அதன்பின் அயலகம் சென்று பணியில் சேரப்போகும் நேரம், நாயகி தன் காதலை வெளியிடுகின்றாள். அவன் அயலகம் சென்றால் அவளை மறந்துவிடவேண்டியதே என்றும் கூறுகின்றாள், அதனைமீறியும் அவன் பணிக்குச்செல்லவேண்டிய அவசியம். அயலகத்தில் அவனால் பணியில் கவனம் செலுத்தமுடியவில்லை...
இறுதியில் என்ன முடிவெடுக்கின்றான் என்பதே கதை, முடிந்தால் படத்தினை அனைவரும் பார்ப்பது நலம், ஹிந்தி புரியாதவர்களும் பார்க்கலாம், ஏனெனில் இது உணர்வுபூர்வமான படம், கண்கள் பணிக்க எத்தனை முறைபார்த்தாலும் சலிக்காத ஒரு படம், ஒருமுறையேனும் பார்க்கலாமே குறைந்தபட்சம் அயலகத்திலிருக்கும் இந்தியராவது???
தேசபக்தியுடன்,
சிவா...@ சிவசங்கர்.முருகையன். type="text/javascript">&cmt=0&postid=115547783939501690&blogurl=http://srishiv.blogspot.com/">