kalainjar talk on hindi
மத்திய அரசு விளம்பரங்களில் இந்தியும், தமிழும் இருக்க வேண்டும்: முதல்வர் கோரிக்கை
சன்னை: ""மத்திய அரசு வெளியிடும் விளம்பரங்களில் இந்தியும் இருக்கட்டும். தமிழும் இருக்க வேண்டும். '' என்று முதல்வர் கருணாநிதி கேட்டுக் கொண்டுள்ளார்.
சட்டசபையில் கேள்விநேரம் முடிந்ததும் அ.தி.மு.க., உறுப்பினர் அரி(திருத்தணி) பேசியதாவது: கடந்த மாதம் 9ம் தேதியும், இந்தமாதம் 4ம் தேதியும் "தினமலர்' பத்திரிகையில் மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், லாலு பிரசாத் யாதவ் ஆகியோரின் படங்களை வைத்து முழுக்க முழுக்க இந்தியில் விளம்பரம் வெளிவந்துள்ளது. மொழிக்காக தீக்குளித்த தமிழகத்தில் இந்தியில் விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. அதேபோன்று கோவையில் ரயில்வே பணியாளர் வாரிய தேர்வு நடந்தபோது இந்தி தெரிந்தவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது. இந்தி மொழியை திணிக்க மாட்டோம் என்று நேரு அளித்த உறுதிமொழிக்கு மாறாக இந்தி மொழி நம் மாநிலத்தில் திணிக்கப்படுகிறது. இந்த விஷயத்தில் அரசு என்ன செய்யப் போகிறது. மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தி.மு.க.,வும் கூட்டணி கட்சிகளும் என்ன நிலையை மேற்கொள்ளப் போகிறீர்கள்? இவ்வாறு அரி கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்து முதல்வர் கருணாநிதி கூறியதாவது: அரி இங்கு சுட்டிக் காட்டியதில் இருந்து நம்மை அறியாமல் நமக்கு தெரியாமல் நேருவின் உறுதிமொழி நிறைவேற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்ற எண்ணம் நமக்கு தோன்றுகிறது. நேரு இதுபோன்ற விளம்பரங்களை வெளியிடுவது தொடர்பாக பார்லிமென்டில் எழுத்து மூலமோ வாய்மொழியாகவோ எந்தவித உறுதிமொழியையும் கொடுக்கவில்லை. ஆனால், ஆட்சிமொழி பற்றி சொல்லும்போது உறுதிமொழி கொடுத்துள்ளார். அண்ணா காலத்தில் அந்த உறுதிமொழி பெறப்பட்டது. உறுப்பினர் இங்கே பேசும்போது இந்த பிரச்னையோடு நின்றிருந்தால் இங்குள்ள தமிழர்கள் அனைவரும் ஒரே கருத்துடன் இருப்பதை சுட்டிக் காட்டியிருக்க முடியும். அதைவிடுத்து நாம் இங்கே விதண்டாவாதம் நடத்திக் கொண்டிருந்தால் மொழிப் பிரச்னையில் நாம் ஒன்றுபட்டிருக்கிறோம் என்று நாம் மற்றவர்களுக்கு எடுத்துக் காட்ட முடியாது.
இந்தி எதிர்ப்பு போராட்டத்தின்போது இதே சபையில் அன்பழகன் உள்ளிட்ட 10 தி.மு.க., உறுப்பினர்கள் பதவி பறிக்கப்பட்டு வெளியேற்றிய நிகழ்ச்சி நடந்துள்ளது. அப்படி செய்தவர்களே மனம்மாறி இந்தி ஆதிக்கத்தை எதிர்க்க முன்வந்துள்ளார்கள் என்பது வேறு விஷயம். தமிழகத்தில் தமிழ் பத்திரிகைகளில் முழுக்க முழுக்க இந்தியில் விளம்பரம் வெளிவருவதை நானும் ஏற்கவில்லை. இங்குள்ள எந்த கட்சியினரும் ஏற்க மாட்டார்கள். இந்தியும் இருக்கட்டும். தமிழும் இருக்க வேண்டும். ஆங்கிலம், இந்தி, தமிழ் என்று வந்தால் இந்தி இடம்பெறலாம். ஆனால், தமிழை புறக்கணித்துவிட்டு இந்தி மொழி ஆதிக்கம் செலுத்தினால் தாங்கிக் கொள்ள மாட்டோம். ஏற்க மாட்டோம். இந்த கருத்தோட்டத்தை மத்தியில் இருப்பவர்கள் உணர்ந்து கொண்டு இனி வெளியிடும் விளம்பரங்களில் தமிழர்கள் மனம் புண்படாதவாறு வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். வெளியிடுவார்கள் என்று நம்புகிறேன். இவ்வாறு முதல்வர் கருணாநிதி பதிலளித்தார்.
நன்றி: தினமலர்.காம் type="text/javascript">&cmt=3&postid=115661759446389665&blogurl=http://srishiv.blogspot.com/">
3 Comments:
நன்றி திரு.வணக்கத்துடன்,
உண்மை அதுதானே? நம் அரசியல்வாதிகள் நமக்கு எவ்வளவு துரோகம் செய்திருக்கின்றனர் என்பது வடக்கே வந்தால் தான் தெரிகின்றது :)
ஸ்ரீஷிவ்....
Saturday, August 26, 2006 12:56:00 PM
சார்
வடக்கே இருந்து தெற்கே பெங்களூர் மற்றும் சென்னையில் வேலை செய்பவர்கள் என்ன நினைக்கிறாங்கன்னு தெரிந்தால் நல்லாயிருக்கும்..:)
Saturday, August 26, 2006 1:14:00 PM
அவங்க இன்னும் இந்த பதிவினை படிக்கவில்லை என்றே நினைக்கின்றேன், இருந்தாலும் அவர்களின் அபிப்ராயம் அறிந்து வேறு ஒரு பதிவில் இடுகின்றேன் விரைவில்....:)
ஸ்ரீஷிவ்..:)
Saturday, August 26, 2006 11:01:00 PM
Post a Comment
<< Home