அன்பினியவளே...
அன்பினியவளே,
எங்கிருக்கின்றாய் நீ?
ஏன் இந்த மௌனம் இன்னும்?
ஏனோ இன்று மனதில் ஒரு
இனம் புரியாத ஏக்கம்,
அதனாலே கண்ணில் இல்லை தூக்கம்,
மனமெங்கும் துக்கம்,
கானல் நீராக மாறத்தானா?
என் காதல் செடியை கண்ணீர் ஊற்றி
வளர்த்தேன் கால் பதினாண்டு?
நெஞ்சோடு கொண்ட என் நினைவுகளோடு
நெடுமூச்சொன்றை விட்டேன்
கேட்டிசின் வாழிதோழி
அல்கல் உன் நினைவில்
அயல்கிறேன் நான் ஆயினும்
முயலாமல் இல்லையடி நானொன்றும்
பொய் வலாளன் அல்ல உன்
மெய் உற மரீஇய நினைவுகள் என்றும்
வாய்த்தகைப் பொய்க்கனாவாய்....
திடுக்கிட்டெழுகின்றேன் என்
மனத்திரையின் வினாவாய் வந்த
கனாவின் மருட்டலில்...
ஏற்றெழுத்து நிற்கும் உன் எண்ணங்கள்,
என்றெனைச்சேர்வாய் பைங்கிளியே???
அமளியோடென்றும் ஞமலிபோல்
சண்டை போடும் மெய்யோடும்,
அருகில் நீ அமர்ந்திருப்பதுபோல்
அரண்டெழுந்து நள்ளிரவில் தைவந்தனனே?
பொய்யுரைக்கிலேன் தோழி
மெய்வருத்தி அழைக்கின்றேன்,
என் மனமென்னும் ஏணியில்
ஏற்றம் பெறவேனும் எனை ஏறெடுத்துப்பார்
ஏந்திழையே...ஏழையேன் ஏங்கி இருக்கின்றேன்,
பாலையில் குளிர் நீரினைப்போல்
பஞ்சிடை பட்ட பட்டாடைபோல்,
நெஞ்சுக்குழி வெந்து தணியும்முன்
நிச்சயமாய் வாடி நீ....நெடுந்தாகம் தீர்த்திடவே...:)
அருஞ்சொற்பொருள்::
கேட்டிசின் வாழிதோழி: கேட்பாயாக வாழ்க தோழி
அல்கல்: நாள்தோறும்
பொய்வ லாளன் : பொய் சொல்வதில் வல்லவன்
மெய்உற மரீஇய: மெய் தொட தழுவிய
வாய்தகைப் பொய்க்கனா: உண்மை போன்ற பொய் கனவு ( அத்தகைய, எத்தகைய)
மருட்ட : மருட்சி ஏற்படுத்த, மருள்: (அச்சம் , உருண்மை போல தோன்றுதல் என்று
பொருள் படும். "முழவு மருள் பெரும்பழம்" என்றால் பலாப்பழம்
ஏற்றெழுத்து: மேலேழுந்து
அமளி : படுக்கை
தைவந் தனனே: தடவி பார்த்தேனே type="text/javascript">&cmt=0&postid=113018482556516663&blogurl=http://srishiv.blogspot.com/">