வேதியியலில் ஒரு வாழ்க்கை
வேதியியல் இல்லா ஒரு வாழ்க்கை
வெற்றிடம் கொண்ட ஒரு யாக்கை
வாழ்வில் இயற்பியலின் சுவையே
வேதியியலின் கூட்டில் தானே?
உணவில் உப்பு வேதியியல்
உயிர் நீரில் உப்பு வேதியியல்
ஹைட்ரஜன் ஆக்சிஜன் கலவை
அதுவே நம் உயிர்நீரின் சிலுவை
வேதகாலத்திலும் இருந்தது வேதியியல்
ராமனுக்கும் சீதைக்கும் இடையிலான வேதியியல்
வாழ்விலும் உறவுகளுக்கிடையே உள்ள
வேதியியல் நன்றாக இருந்தால் தான்
இயற்பியலும் உயிரியலும் ஒன்றாகும்.
வேதிவினையில் உருவான உலகில்தான்
நாம் வாழ்ந்துவருகின்றோம்
மகரந்தச்சேர்க்கை ஒரு வேதிவினை
மகவு சூல் கொள்வதும் ஒரு வேதிவினை
இன்று மனித சூலகத்தில் வேதிவினையில்
சூலூட்டப்பட்ட சூல் இடம் கொள்வதும்
வேதிவினை தானே?
அணுக்கரு பிளவும்
அதனுடை பிணைப்பும்
வேதியியலின் விந்தைதானே?
விளக்கு எரிவதும்
விண்மீன்கள் விழுவதும்
வேதிவினையின் விந்தைதானே?
வேற்று கிரகத்தில் வெண்ணீரோ
தண்ணீரோ, விவரங்கள் அறிவதும்
வேதிவினையில் தானே?
அறிவியல் விஞ்ஞானத்தில்
வேதியியலே தாதியியல்...
இயற்கையின் அனுமானத்தில்????....
-----நன்றி----
ஸ்ரீஷிவ்... type="text/javascript">&cmt=1&postid=5033455047808123359&blogurl=http://srishiv.blogspot.com/">