முனைவர் ஆனேன்...
இனிய தோழமைக்கு,
வணக்கம் , வாழிய நலம். சற்றே தாமதமான பதிவு என்றாலும், மேலும் அதிக தாமதத்திற்கு இடம் தராமல், இன்று பதிந்துவிடுகின்றேன்.ஏழு ஆண்டுகள்....மிக நீஈஈஈஈண்ட பயணம், 2001ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் என் ஆய்வுப்பணிக்காக இந்தியாவில் உள்ள அசாம் மாநிலம் குவஹாத்தி மாநகருக்கு சென்றேன். இந்திய தொழில்நுட்பக்கழகம்(IIT) குவஹாத்தியில் எனது ஆய்வுப்பணியை துவங்கினேன், இடுப்பு எலும்பு தேய்மானத்திற்கு மாற்றெலும்பு அல்லது மாற்று செயற்கை மூட்டு/எலும்பு தயாரிப்பதில் எனது ஆராய்ச்சி. கடந்து வந்த இடைஞ்சல்கள் எண்ணிலடங்கா.....அனைத்தையும் கடந்து , கடந்த மே மாதம் 23ஆம் நாள் (23-05-2008) , ஆன்றோர் சான்றோரால் பரிந்துரைக்கப்பட்டு முனைவன் ஆனேன் என்பதை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். மேலும், இந்த ஏழாண்டுகளில் என்மேல் அக்கறை கொண்டு என்னையும் ஒரு பொருட்டாக மதித்து எனக்கு உற்சாகமும் , மனச்சோர்வு ஏற்படும்போதெல்லாம் ஊக்க மருந்துபோல் பேசியும் இன்று ஒரு முனைவனாக உங்கள் முன் நிற்க வைத்த பெருமை உங்களையே சாரும், அனைத்து இணைய நட்புகளுக்கும் நன்றி நன்றி நன்றி....மேலே இருப்பது, நான் எங்கள் தொழில்நுட்பக்கழகத்தின் இயக்குனர் பேரா.கவுதம் பருவா அவர்களிடம் இருந்து பட்டம் பெறும் வண்ணப்படம், உங்கள் வாழ்த்துக்களை வேண்டி,
உங்கள்
ஸ்ரீஷிவ்...@ சிவா... type="text/javascript">&cmt=9&postid=8440634612487374545&blogurl=http://srishiv.blogspot.com/">