Rate this post at
www.thamizmanam.com
Current rating is:
Click on the stars for voting pad.
Friday, May 09, 2008
என்னைத்தேடி காதல் என்ற.....
சமீபகாலமாக என் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கும் பாடல் :) என் செல்பேசியில் அழைப்பு பாடல் (caller tune) இதுவே....காதலிக்க நேரமில்லை என்ற விஜய் தொலைக்காட்சி தொடரின் தொடக்கப்பாடல், மிக அருமையாக இசையமைத்து அருமையான வரிகளுடனான பாடல், நீங்களும் பார்த்து கேட்டு மகிழுங்களேன் :)
என்னைத் தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு
உன்னை தேடி வாழ்வின் மொத்த அர்த்தம் தருவேன்
செல்லரிக்கும் தனிமையில் செத்துவிடும்முன் செய்தி அனுப்பு…ஓஹ்
என்னிடத்தில் தேக்கி வைத்த காதல் முழுதும்
உன்னிடத்தில் கொண்டு வர தெரியவில்லை
காதல் அதைச் சொல்லுகின்ற வழி தெரிந்தால் சொல்லி அனுப்பு..
பூக்கள் உதிரும் சாலை வழியே பேசி செல்கிறேன்..
மரங்கள் கூட நடப்பது போலே நினைத்து கொள்கிறேன்..
கடிதம் ஒன்றில் கப்பல் செய்து மழையில் விடுகிறேன்..
கனவில் மட்டும் காதல் செய்து இரவை கொல்கிறேன்..
(என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு......)
யாரோ? உன் காதலில் வாழ்வது யாரோ?
உன் கனவினில் நிறைவது யாரோ?
என் சலனங்கள் தீர்த்திட வாராயோ?
ஏனோ என் இரவுகள் நீள்வது ஏனோ?
ஒரு பகல் என சுடுவது ஏனோ?
என் தனிமையின் அவஸ்த்தைகள் தீராதோ?
காதல் தர நெஞ்சம் காத்து இருக்கு
காதலிக்க அங்கு நேரம் இல்லையா?
விதையை போல் என் இதயம் தவறி விழுதே!
(என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு......)
I am a researcher, working on hips and knees, basically interested in Nature and friendship and ofcourse love, I love my country, my home, and family .